மூன்றாவது குழந்தைப் பேறு: விடுப்புக் கோரி ஆசிரியர் வழக்கு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 11, 2022

மூன்றாவது குழந்தைப் பேறு: விடுப்புக் கோரி ஆசிரியர் வழக்கு

சென்னை, டிச. 11- மூன்றாவது குழந்தைப் பேறுக்காக அர சுப் பள்ளி ஆசிரியருக்கு ஓராண்டு மகப்பேறு விடுப்பு வழங்குவது குறித்து 12 வாரங்களில் முடிவெடுக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

ஈரோடு மாவட்டத் தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியரான கதீஜா உமாமா தனது மூன்றாவது பிரசவத் துக்கு ஓராண்டு காலத் துக்கு விடுப்புக் கோரி மாவட்ட கல்வி அதிகா ரிக்கு விண்ணப்பித்தார். விண்ணப்பத்தின் மீது எந்த முடிவும் எடுக்கப் படாததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் விசாரணைக்கு வந்த போது, அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு முதல் இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப் படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள தாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், பணியில் சேருவதற்கு முன்பாகவே இரண்டு குழந்தைகள் பிறந்து விட்டதாகவும், பணியில் சேர்ந்த பின் னரே மூன்றாவது குழந் தைக்கு கருவுற்றதால் விடுப்புப் பெற தனக்கு உரிமை உள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் தெரி விக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, கதீஜாவின் விண்ணப்பத்தைப் பரிசீலித்து ஜூலை 7-ஆம் தேதி முதல் ஓராண்டு மகப்பேறு விடுப்பு வழங் குவது குறித்து 12 வாரங் களில் முடிவெடுக்க வேண் டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத் தார்.

No comments:

Post a Comment