தமிழ்நாட்டில் 'சமூகநீதிக்கான சரித்திர நாயகர்' முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்படுகிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 17, 2022

தமிழ்நாட்டில் 'சமூகநீதிக்கான சரித்திர நாயகர்' முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்படுகிறார்

தமிழ்நாடே, இந்தியாவில் முதலிடம்!

முதலமைச்சரின் செயல்பாடுகளைப் பாராட்டி - 'இந்தியா டுடே' படப்பிடிப்பு

சென்னை, டிச.17- இந்தியாவில் ஒட்டு மொத்த மாநிலங்களின் செயல்பாட்டில் தமிழ்நாடே முத லிடத்தில் உள்ளதாக 'இந்தியா டுடே' (26.12.2022) ஆங்கில வார இதழ் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

வளர்ச்சிக் குறியீட்டின் அனைத்து அளவுகோல் களிலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ள தாகவும் 'இந்தியா டுடே' நடத்திய ஆய்வில் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.

'இந்தியா டுடே' ஆங்கில நாளேடு ஒவ்வொரு ஆண்டும் மாநிலங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வறிக்கை வெளியிட்டு வருகிறது. 2022 ஆம் ஆண்டில், இந்தியாவில் உள்ள மாநிலங்களை மக்கள் தொகை அடிப்படையில் பெரிய மாநிலங் கள் மற்றும் சிறிய மாநிலங்கள் என இரண்டு பிரிவுகளாக பிரித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, இந்தியாவில் உள்ள மாநிலங்களை கல்வி, பொருளாதாரம், விவசாயம், சுகாதாரம், நிர்வாகம், சுற்றுலா, தொழில், சட்டம், ஒழுங்கு உள்ளிட்ட துறைகளை 12 பிரிவுகளாக பிரித்து ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

ஒன்றிய அரசின் நிட்டி ஆயோக், பொருளாதார நிபுணர்கள், மிகச் சிறந்த கல்வியாளர்கள் உள்ளிட் டோரின் நம்பகத் தன்மை வாய்ந்த புள்ளி விவரங் களின் அடிப்படையில் இந்த ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் 12 பிரிவுகளில் 9 பிரிவுகளில் தமிழ்நாடு முன்னிலை பெற்று ஒட்டுமொத்த செயல்பாட்டில் தமிழ்நாடு முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. அதன்படி, மாநிலத்தில் ஒட்டுமொத்த வளர்ச்சியில் கடந்த ஆண்டு இரண்டாவது இடத்தில் இருந்த தமிழ்நாடு, இந் தாண்டு முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. பொருளாதாரத்தில் 4 ஆவது இடத்தில் இருந்து இரண்டாவது இடத்துக்கு தமிழ்நாடு முன்னேறி யுள்ளது.

இதேபோன்று, உள்கட்டமைப்பில் கடந்த ஆண்டு 4வது இடத்தில் இருந்த தமிழ்நாடு, இந்தாண்டு 3 ஆவது இடத்துக்கும், சுகாதாரத்தில் 5 ஆவது இடத்திலிருந்து 3 ஆவது இடத்துக்கும் முன்னேறியுள்ளது. கல்வியில் அய்ந்தாவது இடத்திலிருந்து நான்காவது இடத்துக்கும், சட்டம், ஒழுங்கை பராமரிப்பதில் நான்காவது இடத்துக்கும் தமிழ்நாடு முன்னேறியுள்ளது.

நிர்வாகத்தில் கடந்த ஆண்டு எட்டாவது இடத்தில் இருந்த தமிழ்நாடு தற்போது 6 ஆவது இடத்தை பிடித்துள்ளது. தூய்மையை கடைப்பிடிப் பதில் கடந்த ஆண்டு 7 ஆவது இடத்தில் இருந்த தமிழ்நாடு தற்போது 3 ஆவது இடத்திற்கு முன் னேறியுள்ளது. 

‘இந்தியா டுடே' ஆங்கில இதழ் புகழாரம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளதாகவும், புயல் மற்றும் மழை பாதிப்புகளின்போது தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டதாகவும் ‘இந்தியா டுடே' ஆங்கில இதழ் புகழாரம் சூட்டியுள்ளது.

'இந்தியா டுடே' ஆங்கில ஏட்டில் ராஜ் செங் கப்பா, அமர்நாத் கே.மேனன் ஆகியோர் இணைந்து 'கி சிவி கீபிளி விணிகிழிஷி ஙிஹிஷிமிழிணிணிஷிஷி' என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை வருமாறு:-

சென்னையின் நடு மய்யத்தில் இருக்கும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் வீடு, மற்றவைகளைப் போலவே குறைத்து கூறப் பட்டது. 2021 மே மாதம் ஆட் சிக்கு வந்தவுடன் முதலமைச்சரின் அதிகாரப் பூர்வ இல்லத்திற்கு மாறாமல் சென்னையை ஒட்டியுள்ள தனது இரண் டடுக்கு இல்லத்திலேயே அவர் இருந்து வருகிறார். அங்கேயே பார்வையாளர்கள் முதலமைச்சரைச் சந்திக்க வருகிறார்கள்.

அந்த இல்லத்தின் மாடியில் உடற்பயிற்சிக் கூடம் உள்ளது. தினமும் காலையில் அங்கே சென்று உடற்பயிற்சி மேற்கொள்வதுடன், யோகா மற்றும் தியானப் பயிற்சிகளையும் மேற்கொள்கிறார். அதன் மூலம் தன் உடலை வலுவாக வைத்துக்கொள்கிறார்.

இங்கிலாந்து நாட்டின் தற்போதைய அரசர் பிரின்ஸ் சார்லஸைப் போலவே, 69 வயதான ஸ்டாலினும், தமிழ்நாடு முதலமைச்சராக வருவதற்கு முன் இருந்த நிலை வெளிப்படையான ஒன்று. அவரது தந்தை; மறைந்த முத்தமிழறிஞர் கலைஞர் (மு. கருணாநிதி) அவர்கள் தமிழ்நாட்டில் 5 முறை முதலமைச்சராகப் பொறுப்பேற்று அதிக நாட்கள் முதலமைச்சராகப் பணியாற்றியவராவார்.

முத்தமிழறிஞர் கலைஞர் முதன் முறையாக முதலமைச்சராகப் பதவி ஏற்றபோது ஸ்டாலினுக்கு வயது 16. ரஷ்ய அதிபர் ஸ்டாலின் இறந்த 1953 ஆம் ஆண்டு மு.க.ஸ்டாலின் பிறந்தார் அவர் 2009 முதல் 2011 வரை துணை முதலமைச்சராக செயல் பட்டார்.

அதற்கு முன், முத்தமிழறிஞர் மு.க.ஸ்டாலின் தி.மு.க.வின் செயல்பாடுகளில் மற்றவர்களைப் போல் தனது பொறுப்பிற்கு ஏற்ப செயல்பட்டு வந்தார். 1996 இல் தமிழ்நாடு சென்னை மாநகரின் தலைநகரான மேயராக அவர் பதவிக்கு வந்து திறம்பட பணியாற்றி, சென்னையின் உள்கட்ட மைப்புகளைச் சீர்படுத்தி சுத்தப்படுத்தியதன் மூலம் பல தரப்பிலிருந்தும் பாராட்டுகளைப் பெற் றார்.

அதனால்தான் தனது தந்தை தன்னை 'உழைப்பு, உழைப்பு, உழைப்பு' என்று குறிப்பிட்ட தோடு, 'உன் குறிக்கோளை அடையும் வரை பின்வாங்காதே' என்று குறிப்பிட்டதாகத் தெரி வித்தார்.

தனது கடும் உழைப்பினை நிரூபித்தார்

2018ஆம் ஆண்டு கலைஞர் மறைந்த பிறகு தி.மு.க.வின் செயல் தலைவராக ஸ்டாலின் பொறுப் பேற்றதுடன் அப்போது 2019ஆம் ஆண்டு நடை பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் 38 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறக் கூடிய வகையில் தனது கடும் உழைப்பினை நிரூபித்தார்.

அப்போது நரேந்திர மோடியின் அலை மிக உச்சத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதை யடுத்து 2021 மே மாதம் தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தனது திறமையை நிலை நாட்டும் வண்ணம், 234 சட்டமன்றத் தொகுதிகளில் 159 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றது.

தேர்தலில் வெற்றி பெற்றவுடன், ஆட்சியை நடத்தும் இடத்திற்கு மு.க.ஸ்டாலின் முன்னேறினார்.

முதலமைச்சராக அவர் பதவி ஏற்றவுடனேயே மிக மோசமான கோவிட் -19 கோரத் தாண்டவ மாடியது. உடனடியாக நோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களின் நலனில் ஸ்டாலின் மிகுந்த அக்கறை கொண்டு தடுப்பூசி போடும், திட்டத்தில் அதிக அக்கறை செலுத்தலானார். அது ஒரு அழிவுக்காலம் என்று தான் கூறவேண்டும்.

வளர்ச்சிக்கான ‘திராவிடமாடல்' 

தமிழ்நாட்டில் தொடர்ந்து அந்த ஆண்டின் முடிவில் மழை வெள்ளம் ஏற்பட்டு கடுமையாக மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டது. வெள்ளத் தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிட, அனைத்துவித ஆதாரங்களையும் மு.க.ஸ்டாலின் ஒன்று திரட்டி, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவா ரணம் அளித்ததோடு, அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதில் முனைப்புடன் செயல்பட்டார்.

இந்த இரண்டு விதமான இயற்கைப் பேரிடர் களையும் திறம்பட கையாண்டார் அவர். அத் துடன், இதற்கு முந்தைய அரசால் ஏற்படுத்தப்பட்ட பேரிடர்களை சரி செய்வதில் முனைப்பு காட்டினார். முந்தைய அரசு வளர்ச்சிக்கான நிதியை முறையாக செலவழிக்காமல் மாநில பொருளாதாரத்தின் வளர்ச்சியை தடுத்தது.

'வளர்ச்சிக்கான திராவிட மாடல்' என்று குறிப்பிட்டு, பொருளாதார தொலைநோக்குப் பார் வையுடன் தமிழக வளர்ச்சியில் அக்கறையோடு ஈடுபடலானார் மு.க.ஸ்டாலின்.

இதுகுறித்து 'இந்தியா டுடே' ஏட் டிற்கு அவர் அளித்த பேட்டியில், "2030ஆம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் ஈட் டுவதே எங்களின் முக்கிய குறிக்கோள். அத்துடன், பொருளாதார வளர்ச்சி மட்டுமே எங்களின் குறிக் கோள் அல்ல. மக்கள் நலத்திட்டங்கள் அனைத் திலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

எங்களின் 'திராவிட மாடல்' என்பது அனைத் துத் தரப்பினரின் வளர்ச்சிக்கானது அனைத்துப் பிரிவின் வளர்ச்சியானது அனைத்து மாவட்டங் களுக்குமானது- என்பதன் அளவுகோலாக இருக் கும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்'' என்றார். 

அதற்கேற்ப, சமமான வளர்ச்சியின் தத்துவ அடிப்படையிலேயே ஸ்டாலின் அவர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாநிலங்களின் வளர்ச்சிப் பட்டியலில் தமிழ்நாடு முன்னிலையில் இருப்பதற்கு மு.க.ஸ்டாலின் பங்கு ஓரளவிருக்கும் என்றாலும், இந்த ஆண்டு தமிழ்நாடு 9 பெரிய மாநிலங்களில் 12 பிரிவுகளில் முதல் அய்ந்து மாநிலங்களில் ஒன்றாக இருப்பதற்கான பரிசை மு.க.ஸ்டாலின் பெறக்கூடிய வகையில் இருக்கிறார். 

வளர்ச்சியில் முதலிடம்

பொருளாதாரத்தில் இரண்டாம் இடம். உள் கட்டமைப்பு, சுத்தம் மற்றும் சுகாதாரத்தில் மூன்றாம் இடம், சட்டம், ஒழுங்கு, சுற்றுச் சூழல், கல்வி இவைகளால் நான்காம் இடம்; தொழில் முனைவுகளில் அய்ந்தாம் இடம் என தமிழ்நாடு உள்ளது.

இந்தியாவின் சிறந்த செயல்படும் மாநி லம் என்று சொல்லத்தக்க வகையில், தமிழ்நாட்டின்  நிலை அனைத்துப் பிரிவுகளிலும் மிகச் சிறப்பாக இருந்து வருகிறது. 'இந்தியாடுடே'யில் வெளியாகி உள்ளது. அதில் மாநிலங்களின் தரவரிசை பல்வேறு தரவுகளின் அடிப்படையில் பட்டியலிடப்பட் டுள்ளது.

மாநிலங்கள் பெரியது சிறியது என்று பிரிக்கப்பட்டுள்ளது. 35 ஆயிரம் அல்லது அதற்கு மேற்பட்ட ச.கி.மீ. தூர மும் 50 லட்சம் அல்லது அதற்குக்குறைவான மக்கள் தொகை கொண்டவை பெரிய மாநிலம் என்றும் மற்றவை சிறிய மாநிலம் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

பொருளாதாரம், உள்கட்டமைப்பு, வேளாண், சுகாதாரம், கல்வி, ஆளுமை, சட்டம், ஒழுங்கு இவைகளுடன் வளர்ச்சி, தொழில் முனைவு, சுற்றுலா, சுற்றுச் சூழல் மற்றும் சுத்தம் இவைகளின் அடிப்படையில் 12 வகைகளாகப் பிரிக்கப்பட்டு மாநிலத் தகுதிகளை கணக்கிடப்பட்டது.

125 அளவீடுகளை கருத்தில் கொண்டு, 89 அளவீடுகளில் சிறந்து விளங்குபவை மிகவும் வளர்ச்சி பெற்ற மாநிலமாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் ஒருங் கிணைந்த ஆண்டு வளர்ச்சி விகிதம் என்கிற (சி.ஏ.ஜி.ஆர்.) அமைப்பு கடந்த 5ஆண்டுகள் பற்றி தர வரிசையை பட்டிய லிட்டுள்ளது.

முன்னணி ஆய்வு மய்யம்!

எம்.டி.ஆர்.ஏ. என்கிற முன்னணி ஆய்வு மய்யம் பல்வேறு மாநில தரவுகளை ஆய்வு செய்து, நன்கு செயல்படும் அரசு என்றும், அதிக முன்னணி மாநிலம் என்றும் சில வற்றை நிர்ணயம் செய்துள்ளது. 

இந்த ஆண்டு தமிழ்நாடு நன்கு செயல்படும் பெரிய மாநிலம் என்றும், சிறிய மாநிலங்களில் கோவா முதலிடத்தில் உள்ளது என்றும் அது குறிப்பிட்டுள்ளது. அதேபோல் பெரிய மேம்படுத்தப்பட்ட மாநில வரிசையில் அசாம் முதலிடத்திலும், சிறிய மாநிலவரி சையில் மணிப்பூர் முன்னணியில் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு உயர்ந்த நிலையில் இருக்க வேண்டும் என் பதை கருத்தில் கொண்டு, கடந்த 16 மாதங்களாக. பொருளாதார வளர்ச்சித் திட்டங்களையும், ஏழை எளிய மக்களுக்குத் தேவையான நலத்திட்டங்களை செயல்படுத்துவதிலும் நியாய மான இடைவெளியில் மு.க.ஸ்டாலின் இருந்து செயல்பட்டு வருகிறார். நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டப்லோ, ரிசர்வ் வங்கி மேனாள் ஆளுநர் ரகுராம் ராஜன் உள்ளிட்டோர் அடங்கிய பொருளாதார ஆலோசனைக் குழுவை ஏற்படுத்தி, அதனிடம் மாநிலம் முழுவதும் பொருளாதார வளர்ச்சிக்கான ஆலோ சனைகளை பெற்று வருகிறார்.

இதற்கிடையே, பல்வேறு முதலீட்டு கருத்தரங்குகள் மூலம் 207 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துகொண்டு, ரூ.2.23 லட்சம் கோடி முதலீடுகள் பெறவும், 3 லட்சத்து 44 ஆயிரத்து 150 பேருக்கு வேலை வாய்ப்பளிக்கும் வகையில் மு.க.ஸ்டாலின் அரசு இருந்து வருகிறது.

எரிசக்தி தொழிற்சாலைகள், மின்னணு, ஆட்டோ உதிரிப்பாகங்கள், தகவல் தொழில் நுட்பம், மருந்து உற்பத்தி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அந்த முதலீடுகள்வர உள்ளன.

ஒட்டுமொத்த வளர்ச்சியில் தமிழ்நாடு முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது!

புயல், மழை பாதிப்புகளின்போது சிறப்பாகச் செயல்பட்டது தமிழ்நாடு அரசு! ஒட்டுமொத்த வளர்ச்சியில் தமிழ்நாடு முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது!

2030ஆம் ஆண்டு மூன்று மடங்கு வளர்ச்சியை எய்திட, ஆண்டு தோறும் இரட்டை இலக்க வளர்ச்சி என்கிற குறிக்கோளுடன், தமிழ்நாட்டின் பொருளாதாரம் என்பது 300 டாலர் (24.750 கோடி) என்கிற அளவில் தற்போது உள்ளது.

பல வகையிலும் தமிழகம் வளர்ச்சி அடைவதன் ஒரு பங்காக உலகத்தரத்தில்தொழிற்சாலைகள், தளவாட உற்பத்தி யில் இருக்கும் வகையில்இந்தமாநிலம்செயலாற்றி வருகிறது.

திறன் வளர்ச்சி ஊக்குவிப்பு

சென்னை -பெங்களூரு, சென்னை - கன்னியாகுமரி தொழிலக புறவழிச் சாலைகளை வளர்ச் சிப் பெறச் செய்தல், புதுப்பிக்கப்பட்ட எரிசக்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன், புதிய ஆதாரம் மற்றும் வளர்ச் சித் திட்டங்களை ஊக்குவித்தல், புத்தாக்கம் மற்றும் எதிர்கால தயார் நிலையில் உள்ள தொழிலாளர் திறனை ஊக்குவித்தல் உள்ளிட்டவைகளில் தமிழ்நாடு ஆழ்ந்த அக்கறைகொண்டு, அதற்கேற்ப செயல் பட்டு வருகிறது.

'நான் முதல்வன்' என்ற திட்டம்!

திறன் வளர்ச்சியை ஊக்குவிக்க, தி.மு.க. அரசு 'நான் முதல்வன்' என்ற திட்டத்தை அறிமுகம் செய்து, 10 லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து தொழில்துறையில் அவர்களை நிரப்பிட நடவடிக்கை மேற் கொண்டுள்ளது. ஏற்கெனவே மாநிலம் முழுவதும் அரசால் நடத்தப்பட்ட 1027 சிறு, குறு மற்றும் நடுத்தர வேலைவாய்ப்பு  முகாம்களின் மூலம் ஒரு லட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வேலை பெற்றுள்ளார்கள். புதியதாக 5 தொழிற்பூங்காக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.  அவைகளின் மூலம் 22 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெறக் கூடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. தமிழ்நாட்டில், தொழில்நுட்பம் மற்றும் நிதித்துறை நிறுவனங்களில் ஆய்வு மற்றும் வளர்ச்சியை உருவாக்கி, உலகளாவிய நிறுவனங்களை கவரும் வகையில் தமிழ்நாடு ஃபின்டெக் கொள்கை ஒன்று 2021 இல் ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து 2022ஜூலையில்தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக் கொள்கை ஏற்படுத்தப்பட்டது.

2021 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஃபின்டெக் கொள்கை மூலம் சென்னையில் ஃபின்டெக் சிட்டி ஏற் படுத்தப்பட்டது. அதற்காக 112 ஏக்கர் நிலத்தை தமிழ்நாடு தொழில்வளர்ச்சிக் கழகம் வழங்கியுள்ளது. அதற்கான வடி வமைப்பு மற்றும் திட்ட மேலாண்மை பணிகளைத் தொடங்கி உள்ளது.

வர்த்தகம் செய்வதற்கான எளிய வழிமுறைகளை எவ் வாறு மேம்படுத்துவது என்பதற்காகவும் தமிழகம் பணியாற்றி வருகிறது.

தமிழ்நாடு ஒற்றைச்சாளர முறை யில் ஏற்கனவே 25 துறைகளில் ஆன் லைன் சேவைகள் மேற் கொள்ள 150 ஜி2 பிக்கும் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், விரைவில் 86 சேவைகள் நேரடியாக செயல்பட இருக்கின்றன. உள்நாட்டு வாணிகம் மற்றும் தொழில் மேம்பாட்டுத் துறைக் கான அலுவல்/தொழில் சீர்திருத்த செயற்திட்டத்தின்கீழ் 301 சீர்திருத்தப்புள்ளிகளைச் செயற்படுத்தவும், EODB- -யை மேம்படுத்தவுமான- பழைய சட்டங்களையும் முறைகளையும் தூக்கியெறிவதற்கான முயற்சியும் உள்ளது. EODB--யின் தரவரிசை 2019ஆம் ஆண்டு14ஆம் இடத்திலி ருந்த தமிழ் நாடு தற்பொழுது 3ஆம் இடத்திற்கு முன்னேறிச் சென்றுள்ள தால் இந்த முயற்சிகளுக்குப் பலன் இருப்பதாகவே தோன்றுகிறது. தமிழ்நாட்டு அரசின் ‘Big Buddy'   போர்ட்டல் மற்றொரு புத்தாக்கமாகும். ஏனெனில் அது, முதலீட்டா ளர்களின், தொழிற்கூடங் களின்குறைகளைத் தீர்ப்பதற்கான ஆன்லைன் தொழில் உதவிமேசையாகப் பயன்படுகிறது. Bizz. Buddy யில் 20 துறைகளும், 100-க்கு மேற்பட்ட முக மைகளும், 150 உயர் அலுவலர்களும் பணியமர்த்தப்பட் டுள்ளனர். இதுதொழில்கள்தொடர்பானகுறைகளை விரைந்து களைந்திட முதலமைச்சரின் அலுவலகம் வரை உள்ளேயே அமைக்கப்பட்டுள்ள மேல்நோக்கிய படிக்கட்டுப் போன்ற தொரு ஏற்பாடாகும்.

வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை!

தொழில்களுக்கு முக்கியத்துவ மளித்து முன்னுக்குத் தள்ளும் மு.க.ஸ்டாலின் அவர்கள் வேளாண்மைத் துறையை மறந்துவிடவில்லை. வேளாண்மைக்கென்று தனி நிதி நிலை அறிக்கை தயாரிக்கும் மிகச் சில மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும். உழவர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கிடவும், பருவ மழையை முழுவதும் நம்பியிருப்பதைக் குறைக்கவும் நீர் வளங்கள் கிடைப்பதற்கான திட்டங்களையும் மாநில அரசு தீட்டியுள்ளது. கலைஞரின் அனைத்து கிராம வேளாண் ஒருங்கிணைப்பு  முன்னேற்ற/ மேம்பாட்டுத்திட்டம் எனும் புதிய திட்டத்தின்கீழ் தென்னங்கன்றுகள், வீட்டு வேளாண் மைக்கான கன்றுகள்/ நாற்றுகள், தோட்டப் பயிர்க் கன்றுகள்/நாற்றுகள் தெளிப்பான்கள், காய்கறித் தோட்டக் கருவிகள் முதலானவை வழங்கப்படுகின்றன. ஆதிதிராவிட உழவர்களுக்கு வறண்ட நிலங்களில் கிணறுகள் இறக்கவும், சொட்டு நீர்ப்பாசன முறைக்கும், பண்ணைக்குட்டைகள் தோண்டவும் 100% மானியம் வழங்கப்படுகிறது. நெல்லுக்கு (உற்பத்தியாளர்களுக்கு) குறைந்தபட்ச ஆதரவு விலைக்கும் அதிகமாகவே, கூடுதல் ஊக்கத்தொகை வழங்கிடும் ஒரு சில மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும்.

இன்னுயிர்காப்போம் திட்டம்

மக்களை மய்யமாகக் கொண்ட முன்னேற்றம் என்பது மாநில வளர்ச்சியின் உள்ளார்ந்த பகுதியாக இருப்பதால், மு.க.ஸ்டாலின் அவர்கள் பல புதுமையான சமூக நலத் திட்டங்களைத் தொடங்கியுள்ளார்.  அவற்றில் பெண்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்குத் துணையாக உடன் செல்வோர் புதுமைப்பெண்’திட்டத்தின்கீழ் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியிலேயே பயின்று, கல்லூரிப் படிப்பைத் தொடருகின்ற ஒவ்வொரு மாணவிக்கும்/ சிறுமிக்கும் மாதம் ஒன்றுக்கு ரூ. 1000 உதவித் தொகை; அய்ந்தாண்டுகளில்,  பள்ளிகளின் உள் கட்டமைப் புகளை மேம்படுத்திட பேராசிரியர் அன்பழகனாரின் பெயரில மைந்த திட்டத்தின்கீழ்ரூ.7000கோடி-'இன்னுயிர்காப்போம் திட்டத்தின் கீழ் விபத்தில் சிக்கியோருக்கு 48 மணி நேரத் திற்குள் பணமில்லா உடனடி மருத்துவ சிகிச்சை மக்களைத் தேடி மருத்துவம்' எனும் திட்டத்தின் கீழ்.மக்கள் வீட்டு வாசலிலேயே மருத்துவக்காப்பு வசதிகள் - ஆகியவை அடங்கும்.

இலவச - நலத்திட்டங்களுக்கு எதிராக சர்ச்சையை கிளப்பிய தலைமை அமைச்சர் நரேந்திர மோடி அவர்கள் ‘ரேவ்டி (revdi)பண்பாடு' எனக் கண்டனம் தெரிவித்த போது-பரந்த அளவில் வறுமையும், சமூக ஏற்றத் தாழ்வுகளும் நாட்டில் நிலவுகின்ற சூழ்நிலையில், மாநிலங்கள் தன் மக்களுக்கு அடிப்படைத் தேவைகளை, வசதிகளைச் செய்து தர வேண்டியது தவிர வேறு வழியில்லை என்பதில் மு.க.ஸ்டாலின் மிகவும் தெளிவாக இருக்கிறார்.

“இதனை இலவசங்கள் (வழங்கும்) பண்பாடு/கலாச்சாரம் என தரம் தாழ்த்துவது சமூக அநீதியாகும். பெருநிறுவனங் களுக்கு (கார்ப்பரேட்டுகளுக்கு) பல சலுகைகளை வாரி வழங்கும் பொழுது அவற்றை யாரும் இலவசங்கள் எனக் குறிப்பிடுவதில்லை. மக்கள் நலத்திட்டங்களை மட்டும் 'இலவசங்கள்'  (free bics)   என்று ஒருவர் பெயரிட்டழைத்தால், நீதிக்கான அவர்களது அளவுகோல் ஒரு பக்கம் சாய்ந்தது. ஒரு பக்கச் சார்புடையது என்று பொருளாகும். எனவே அத்தகைய சொல்லாடலில் தயவு செய்து ஈடுபட வேண்டாம்”-என அவர் (ஸ்டாலின்) கூறுகிறார்.

மேலும் மாநில (அதிகார) எல்லை யின் மீது ஒன்றிய அரசு மோதிட கூடாது; மாநிலத்தைக் கொத்தடிமைபோல் நடத்திடக் கூடாது என்பதிலும் அவர் தெளிவாக இருக்கிறார். “மாநிலத் தில் சுயாட்சியும், மத்தியில் கூட்டாட்சியும் என்பது அடிப் படையான, பல காலம் வலியுறுத்தப்பட்ட, அரசமைப்புச் சட்டம் ஏற்றுக் கொண்ட கோட்பாடாகும்! கொள்கையாகும்” என்கிறார்அவர்.

மாநில அரசுகளை “ஒன்றிய அரசு மதித்திட வேண்டும்; எங்களுடைய கோரிக்கைகளுக்கு செவி மடுக்க வேண்டும்; அவற்றை நிறைவேற்றித் தர வேண்டும். ஆனால் தற் போதுள்ள ஒன்றிய அரசு இவற்றில் எதையுமே செய்யவில்லை என்பது வருத்தத்திற்குரியது” - என்று அவர் குறிப்பிடுகிறார். மாநிலத்தின் பலவற்றில் ஒன்று கல்வியானது குறைபாடுகள் Concurrent  ஒத்திசைவுப் பட்டியலில் இருப்பதை தற்பொழுது ஒன்றிய(அரசின்) பட்டியலின் ஒரு பகுதியாகக் கருதி செயற் படுத்தப்படுகிறது. 'நீட்(NEET)  தேர்வைத் திணிப்பதைத் தமிழ்நாடு கடுமையாக எதிர்க்கிறது. “சரக்கு - சேவைவரி (GST) யானது, மாநிலங்களின் வரி விதிப்பு உரிமைகளைப் பறித்துக் கொள்கிறது”-என ஸ்டாலின் கூறுகின்றார். 

தமிழ்நாடு சட்டமன் றத்தில் இயற்றப்பட்ட பல சட்ட மசோதாக்களுக்கு கையெழுத்திடுவதில் தாம திப்பதால் தமிழ் நாடு முதல மைச்சருக்கு ஆளுநர் ஆர்.என்.இரவி அவர் களுடன் பல வருத் தங்கள் (மோதல்கள்) உள் ளன. ஆளுநரின் பகைமை யான, எதிர்மறையான செயல் எதையும் தனது அரசு எதிர்க்கும் என்பதிலும், “தனது கொள்கைகளில் பின் வாங்காது” - என்பதிலும் அவர் (ஸ்டாலின்) மிக உறுதி யாக இருக்கிறார். ஒரு நிருவாகி என்ற முறையில் ஸ்டாலினின் நிருவாக பாணி (stஹ்றீமீ) அவருக்கு முன் பிருந்த முதலமைச்சர்களின் பாணியிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது.

'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்'

தனது அமைச்சரவை சகாக்களை நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கச் செய்த/காலில் விழுந்து வணங்க வைத்த, அ.இ.அ.தி. மு.க.வின் தலைவியும் மேனாள் முதலமைச்ச ருமான ஜெ.ஜெயலலிதாவைப் போலல்லாமல், அடிவருடி களைப்போல புகழ்தலை மு.க.ஸ்டாலின் தவிர்க்கிறார். அரசியலில் நீண்ட காலம் இருந்தவர் என்பதால் எதையும் பொறுமையாகக் கவனிக்கிறார். தேர்தலில் அவரது கட்சி வெற்றி பெறுவதற்கு முன்பேகூட அவரும் மற்றத் தலைவர்களும் மாவட்டந்தோறும் சென்று, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அவர்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் தேர்தல் அறிக்கையைத் தயாரித்தனர். அவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' எனும் திட்டத்தின் கீழ், 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வரிசை முறைப்படி வருகைதந்து, வாக்காளர்களின் குறைகளைக் கேட்டறிந்து அவற்றைத் தீர்த்து வைக்கிறார். செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சரின் அலுவலகத்தில் பெரியதொரு மின்னணுவியல் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில் அவருக்கு அரசின் பல்வேறு திட்டங்கள், அவற்றின் வளர்ச்சி, இலக்குகள் அடையப்பட்ட விவரங்கள் ஆகியவை அவ்வப்போது தெரிவிக்கப்படுகின்றன.

மு.க.ஸ்டாலின் அடிக்கடி தனது அமைச்சர்களுடன் மீளாய்வுக் கூட்டங்களை நடத்துவதில் மிகவும் நம்பிக்கை கொண்டுள்ளார். கட்சியின் தலைவராக இருப்பதால், பல்வேறு அரசியல் பிரச்சினைகளுக்கு இறுதி முடிவு கூறக் கூடிய வராகவும் இருக்கிறார். இருப்பினும், மாநிலங்களின்  தற் போதுள்ள நிலைமை, தமிழ்நாட்டைப் பற்றி அமைதியைக் குலைக்கும் சில செய்திகள் வெளிவருகின்றன; முதலமைச்சர் அவர்கள் அவற்றைக் கவனித்து ஆவன செய்திடுவார். 

சிறப்பாக செயல்படுவதற்கான பாராட்டுதல்களை மாநிலம் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கும்போது, மிகவும் மேம்பட்டப் பிரிவில் அதனுடைய ஒட்டு மொத்த தரவரிசை போலியாகப் புகழப்படுவதாக இல்லை. கடந்த 2019- 2020ஆம் ஆண்டுகளில், 20 மாநிலங்களில் மிகவும் கீழாக 19ஆம் இடத்தில் இருந்த மாநிலம் (தமிழ்நாடு), 2021ஆம் ஆண்டில் 16 ஆம் இடத்திற்கு தரவரிசைக்கு) உயர்ந்தது. இந்த ஆண்டும் அதே இடத்தில் இருக்கிறது. மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் பொழுது 'மிகவும் மேம்பட்டப் பிரிவில்' அதனுடைய பொருளாதார செயல்பாடு 2018ஆம் ஆண்டு 8 ஆம் இடத்தில் இருந்தது.

மற்ற மாநிலங்கள் தமிழ்நாட்டிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியவை ஏராளம்!

இந்தாண்டு 13ஆம் இடத்திற்கு இறங்கி உள்ளது. அதேபோன்று உள்கட்டமைப்பைப் பொறுத்தவரை 2020 ஆம் ஆண்டு பட்டியலில் அடிமட்டத்தில் இருந்தது, 2022 ஆம் ஆண்டு 17 ஆம் இடத்திற்கு நகர்ந்துள்ளது. எனினும் மாநிலம் இன்னும் கடுமையாக உழைத்து பணியாற்றி முன் னேற வேண்டியுள்ளது. மேலும், தமிழ்நாடு வேளாண்மை, சுகாதாரம். ஆளுகை ஆகியவற்றில் மிகவும் பரந்த பெரிய முன்னேற்றம் கண்டிருக்கும் அதேவேளையில் கல்வி, உள்ளடக்கிய வளர்ச்சி/முன்னேற்றம் ஆகியவற்றில் மித மாகவே உள்ளது. சட்டம், ஒழுங்கு, தொழில் முயற்சிஆகிய துறைகளில் கடந்த இரண்டாண்டுகளில் மாநிலத் தின் செயல்பாட்டுத் தரவரிசை கவலையளிப்பதாக உள்ளது. உண்மையில், மற்ற மாநிலங்கள் தமிழ்நாட்டிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியவை ஏராளமாக இருக்கின்றன. ஆனால், தமிழ்நாடும் பல துறைகளில் மற்ற மாநிலங்களிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. மாநிலங்களிடையே ஒத்துழைப் பையும் ஆக்கப்பூர்வமான போட்டியை வளர்த்தலும் - 'இந்தியா டுடே'யின் ‘மாநிலங்களின் நிலைமை' எனும் கட்டுரையின் நோக்கமாகும்.


No comments:

Post a Comment