எலி காலம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 7, 2022

எலி காலம்!

உத்தரப்பிரதேசம் மதுராவில் காவல்துறையால் கைப்பற்றப்பட்டு காவல்நிலையத்தில் வைக்கப்பட்டி ருந்த 581 கிலோ கஞ்சாவை எலி தின்றுவிட்டதாக காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். 

அதேபோல் எடவா மாவட்டம் கோட்வலியில் காவல்துறையால் கைப்பற்றப்பட்டு காவல்நிலையத் தில் வைக்கப்பட்டிருந்த 35 லட்சம் மதிப்புள்ள மதுபானத்தை எலிகள் குடித்துவிட்டதாகவும் அந்த காவல்நிலைய அலுவலகர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இது கேட்டு நீதிபதிகள் அதிர்ச்சியாம்!

கனம் நீதிபதிகள் இது குறித்து அதிர்ச்சியடையத் தேவையில்லை. அவை விநாயகரின் பர்மனன்ட் வாகனங்கள்! எதுவும் நடக்க வாய்ப்பிருக்கிறது.ஓவர் வெயிட்டை சுமக்கிறப்போ உடம்பு வலியை போக்கிக் கொள்ள அப்படி இப்படி இருக்கத்தான் செய்யும்!

ஆனாலும் நீதிபதிகள் இதுகுறித்து சரியான விசாரணை நடத்த வேண்டும். அனைத்தையும் அந்த எலிகளே சாப்பிட்டு விட்டனவா? அல்லது தனது எஜமானரான பிள்ளையாருக்காக களவாடப்பட்டுள் ளதா என்பதையும் தீர விசாரிக்கக் வேண்டும். 

இதற்கிடையில் பிள்ளையாரின் வாகனமான எலியார் மீது பொய்க்குற்றம் சாட்டி கடவுளை காவல் துறையினர் அவமரியாதை செய்துவிட்டதாக ஒன்றிய அரசு தன்தரப்பில் வழக்குரைஞர்களை நியமிக்கவும் வாய்ப்பிருக்கிறது.

பிளேக் நோய் பரவ காரணமான எலிகளை ஒழிக்க நடவடிக்கை எடுத்த வெள்ளைக்காரர்களுக்கு எதிராகப் போராடிய திலகரின் வாரிசுகள் தானே நாட்டை ஆண்டுகொண்டிருக்கிறார்கள்!?

நடப்பது 'கலி' காலம் என்கிறார்கள்! உத்தரப் பிரதேசத்தில் நடப்பதைப் பார்த்தால் எனக்கென் னவோ இது 'எலி'க் காலமாக இருக்குமோ என்று நினைக்கத் தோன்றுகிறது!

-கி.தளபதிராஜ், மயிலாடுதுறை

சமூகநீதிக்காகவே பாடுபட்டார் பெரியார்

தமிழர் தலைவர் உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் 'விடுதலை' ஆசிரியர் தந்தை பெரியாரின் ஒரே வாரிசு கி.வீரமணி அவர்களுக்கு வணக்கம்.

சத்தியமங்கலத்தில் தமிழ்நாட்டின் விடி வெள்ளி தந்தை பெரியாரின் 144ஆவது பிறந்த நாள் விழா. 20 ஆண்டு காலம் இடைவெளியில் தாங்கள் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளீர்கள். அறிவு ஆசான் தந்தை பெரியாரின் கொள்கைப் பிரச்சாரத் திருவிழாவில் தாங்கள் பேசியது மிக மிக நன்று.

தந்தை பெரியாரின் கொள்கை வெற்றி பெற்றது.   நகர்மன்றத் தலைவராக வெற்றி பெற்ற ஒரு மகளிர் கூட்ட மேடையில் அமர்ந்து இருந்தார். அதுதான் சாதனை - அய்யாவின் வெற்றி!

"நமக்கு எதிரி யாரும் இல்லை. சனா தனத்தைத் தவிர, மனித உரிமை வளரட்டும்! சனாதனம் அழியட்டும்" எனக் கூறினீர்கள். சமூகநீதிக்காகவே பாடு பட்டார் பெரியார். 

வாழ்க அவர் தொண்டு 

வளர்க அவரின் சீரிய கருத்துகள்.

- ஆ.மு.ரா. இளங்கோவன்

விழுப்புரம் (தெ.ஆ. மாவட்ட மேனாள் செயலாளர் மறைந்த மு. இராமச்சந்திரன் அவர்களின் மகன் ஆவார்)


No comments:

Post a Comment