பதிலடிப் பக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 9, 2022

பதிலடிப் பக்கம்

இந்தியாவின் மானம் அமெரிக்கா வரை சந்தி சிரிக்கிறதே!

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., 

சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் 

பதிலடிகளும் வழங்கப்படும்)

- கவிஞர் கலி.பூங்குன்றன்

துணைத் தலைவர், திராவிடர் கழகம்

மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு என்ற பெயரால் நடப்பது பி.ஜே.பி. ஆட்சிதான். அதைவிட சரியாகச் சொல்ல வேண்டு மானால் பிஜேபி யின் காதைத் திருகிக் கட்டளையிடுவது - நாக்பூர் - ஆம்! அதுதான் ஆர்.எஸ்.எஸின் தலைமைப் பீடம். அதன் கட்டளைகளை நிறை வேற்றாமல் ஒரே ஒரு நொடி கூட மோடி ஆட்சிச் சக்கரத்தைச் சுழற்ற முடியாது - முடியவே முடியாது.

2014இல் 56 அங்குல மார்பளவு உள்ள மோடி ஆட்சி நாற்காலியில் அமர்ந்தாலும் அமர்ந்தார் - நாட்டின் அமைதியும், சகோத ரத்துவமும் ஆட்டுக் குட்டிகளாகக் காவு வாங்கப்பட ஆரம்பித்தது.

கோமாதா எனும் பெயரில் 'பசு பாதுகாப்பு'  என்னும் பெயரில் மனிதர்களைப் பலி வாங்க ஆரம்பித்து விட்டனர். வீட்டுக் குள் புகுந்து ‘ஃப்ரிஜுக்குள்' என்ன இருக்கிறது என்று முகர்ந்து பார்த்து வீட்டு உரிமை யாளரைப் பட்டப் பகலில் படுகொலை செய்யவில் லையா?

செத்துப்போன பசு மாட்டின் தோலை உரித்த, தாழ்த்தப்பட்ட தோழர்களின் தோலை உரித்து, உடம் பைத் தூக்கி எறிய வில்லையா?

சந்தைக்கு மாட்டை ஓட்டிச் சென்றவர்களை மடக்கிப் பிடித்து, கார் சக்கரத்தில் கட்டி வீதி வீதியாக இழுத்துச் செல்லவில் லையா?

தாழ்த்தப்பட்ட தோழர் மீசை வைத்திருந்தார் என்பதற்காக உதை - கோயில் திரு விழாவை வேடிக்கைப் பார்த்த பஞ்சம னுக்கு அடி - குதிரை மீது வந்தான் என்பதற் காக செருப்படி இன்னும் எத்தனை எத்த னையோ உண்டு.

பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கோ அள வில்லை - காஷ்மீரில் 7 வயது பெண்ணை கோயில் கர்ப்பக் கிரகத்துக்குள் அடைத்து, கோயில் அர்ச்சகன் உட்பட, உள்ளூர் பிஜேபிகாரன், காவல்துறையைச் சேர்ந்த மிருகங்கள் எல்லாம் பல நாள்கள் வன்புணர்ச்சி செய்து கடைசியில் கல்லில் மோதிப் பிணமாகத் தூக்கி எறியவில்லையா?

அந்தக் குற்றவாளிகளைக் காப்பாற்ற ஆளும் கட்சி அமைச்சர்களும், பிஜேபி வழக்குரைஞர்களும் வெளிப்படையாக ஆதரவுக் குரல் கொடுக்கவில் லையா?

இந்தக் கதை அமெரிக்கா வரை சென்று இந்தியா வின் மானம் நார் நாராகக் கிழித்துத் தொங்கவிடப் படுகிறதே!

இதோ அந்தத் தகவல்கள்:

இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக, குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதி ரான தாக்குதல், ஹிந்துமதவாத  குழுக்களின் வன்முறை செயல்கள் தொடர்ந்து அதிகரித் துள்ளன என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இறைச்சிக்காக பசுக்களை கொண்டு சென்றார்கள். பசு இறைச்சியை வைத்திருந் தார்கள் என்ற வதந்தி களால் இஸ்லாமியர்கள் மீது நாட்டில் பெரும்பாலான இடங்களில் பசுக் குண்டர்களால் தாக்குதல் நடத்தப் பட்டு உள்ளது என்று அமெரிக்க அரசின் அறிக் கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் பன்னாட்டு மதச்சுதந்திரம் குறித்த 2018ஆம் ஆண்டுக் கான அறிக்கையை வெளியிட்டது.

அதில் இந்தியாவில் 2018ஆம் ஆண்டு ஜூலை மாத கணக்கின்படி  130 கோடி மக்கள் வாழ்கிறார்கள். 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந் துக்கள் 79.8 சதவீதம் பேரும், இஸ்லாமி யர்கள்  14.2 சதவீதம் பேரும், கிறிஸ்தவர்கள் 2.3 சதவீதமும், சீக்கியர்கள் 1.7 சதவீதமும் வாழ்கிறார்கள். பவுத்தம், சமணம் உள்ளிட்ட மதங்களைச்  சேர்ந்தவர்கள் ஒரு சதவீதம் பேர் இருக்கின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிக்கை என்பது உலக நாடுகள் அனைத்தும் தங்கள் குடிமக்களின் அடிப் படை மனித உரிமைகளுக்கு எவ்வாறு மதிப்பளிக்கிறார்கள் என் பதை குறிப்பிடும் முக்கிய அறிக்கை ஆகும்

இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதா வது:

இந்தியாவில் கடந்த 2018ஆம் ஆண்டில் சிறுபான் மையினருக்கு எதிராக குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராக தீவிர ஹிந்துத்துவா குழுக்கள் கும்பலாகச் சேர்ந்து அவர்கள் மீது பல்வேறு இடங்களில் ஆண்டு முழுவதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இஸ்லாமியர்கள் பசு இறைச்சியை வைத்திருக்கிறார்கள், பசுக்களை விற்பனைக்காக கொண்டு செல்கிறார்கள் என்ற வதந்திகளால் முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல்கள் அதிகமாக நடந் துள்ளன. சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்கள் மீது நடத்தப் படும் தாக்குதல்களைத் தடுக்க அரசு தவறிவிட்டது என்று அறிக்கையில் கண்டிக்கப்பட்டுள்ளது.

ஆளும் பாஜக அரசில் இருக்கும் மூத்த அமைச் சர்கள், தலைவர்கள் பலரும் இஸ் லாமியர்களுக்கு எதிராக பல்வேறு கண்ட னத்துக்குரிய, கொதிப்படை யும் கருத்துக் களை தொடர்ந்து கூறியுள்ளனர். பல அரசு சாரா தொண்டு நிறுவனங்களை தாக்கியவர் களை அடையாளம் கண்டு கைது செய்ய முயலும் போது, அவர்களைக் கைது செய்ய விடாமல் அரசியல் வாதிகளும், உயர் அதி காரிகளும் பாதுகாத்துள்ளார்கள். 2018ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் கும்பல் வன்முறை காரணமாக எட்டுப் பேர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். 18 முறை தாக்குதல்கள் நடத்தப் பட்டுள்ளன.

இதில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இரு காவல் துறை அதிகாரிகள், கும்பல் வன்முறையால் காய மடைந்த இஸ்லாமிய வியாபாரி ஒருவரை மருத்துவ மனைக்கு உரிய நேரத்தில் கொண்டு செல்லாமல் அவரின் சாவுக்கு காரணமாகியுள்ளதாக குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது. இஸ்லாமி யர்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட மத சிறு பான்மையினர், விளிம்புநிலை சமூகத்தினர் நடத்தும் அரசு சாரா தொண்டு நிறு வனங்கள் பலமுறை கும்பல் வன்முறை மூலம் தாக்கப் பட்டுள்ளன. ஆனால், அவர்களை தடுக்க அரசு தவறிவிட்டது.

ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகள், அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் பலர் எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் காரண மாக, இஸ்லாமிய சமுகத்தினர் பலர் பாதிக் கப்பட்டுள்ளனர். இந்திய உச்ச நீதிமன்றத் தில் இஸ்லாமிய  கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை தகுதி வழங்க இன்னும் இந்திய அரசு எதிர்ப்புத் தெரிவித்து வரு கிறது.   அதுமட்டுமல்லாமல், இஸ்லாமிய பெயர்கள் கொண்ட மாவட்டங்கள், நகரங்கள் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. குறிப் பாக அலகாபாத் நகரம் பரயாக்ராஜ் என மாற்றப்பட்டது. இந்த செயல் பாடுகள் இந் திய வரலாற்றில் இஸ்லாமிய  சமூகத்தின ரின் பங்களிப்புகளை நீக்கவும், மதங்களுக்கு இடையே பதற்றத்தை அதிகரிக்கவும் செய் யும்.

மதரீதியான கொலைகள், தாக்குதல்கள், கலவ ரங்கள், பாகுபாடுகள், சூறையாடுதல், தனிநபர்ககள் தங்களின் விருப்பமான மதத்தையும், நம்பிக்கை யையும் பின்பற்ற கட் டுப்பாடு விதித்தல் போன்றவை கடந்த ஆண்டு அதிகரித்துள்ளன. ஆண்டு முழு வதும் மக்களின் மதரீதியான சுதந்திரத்தை மதிக்கவும், மக்களிடையே சகிப்புத்தன்மையை அதிகரிக்கவும் ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும், சிவில் குழுக்கள், மதச்சுதந்திர ஆர்வலர்கள், பல்வேறு மதங் களைச் சேர்ந்த தலைவர்கள் ஆகியோர் மூலம்  நடவடிக்கை எடுப்பது முக்கியம் என்று அமெரிக்க அரசு அதி காரிகள் தெரிவித்துள்ளார்கள்.   இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வெட்கம் கெட்ட பிஜேபி அரசு குய்யோ முறையோ என்று குதிக்கிறது.

இந்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்ச கத்தின் செய்தித் தொடர்பாளர் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்தியா வலிமையான சக்தி மிகுந்த ஜனநாயகத் தைக் கொண்டது. இங்கு அனைத்து மக்களுக்கும் அடிப்படை உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. குறிப் பாக சிறுபான்மையினரின் உரிமைகள் அரசமைப்புச் சட்டத்தால் பாதுகாக்கப்பட்டு உள்ளன. எந்த வெளி நாட்டு அரசும், நிறுவனமும் எங்கள் நாட்டு குடிமக் களின் உரி மைகளை சட்ட ரீதியாகப் பாதுகாக்கிறோம் என்ற கூற வேண்டிய அவசியமில்லை. மத சுதந்திரம் குறித்து கேள்வி எழுப்பவும் தேவையில்லை. மதச் சிறுபான்மைக்கு அதிகமான முக்கியத்துவம் வழங்கு வதை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது என்று கொஞ்சமும் கூச்சமின்றி வெட்கமின்றி சொல்கிறார்!

இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் சார்பில் கூறுவதைக் கண்டு வாயால் சிரிக்க முடியுமா?

மோடி அரசில் மதச் சார்பின்மையின் வண்டவாளம் அமெரிக்கா வரை ஊளை நாற்றமடிக்கிறது.

இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் ஆவதற்குள், ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார், காவிகளின் அட்டகாசம் ஆகாயத்தைத் தொடுகிறது. ரயிலில் பயணம் செய்பவர் முசுலிம் என்று தெரிந்தால் வந்தே மாதரம் என்று சொல் என்று வற்புறுத்துவதும், அந்த முசுலிம் தோழர் மறுத்தால் அடித்துத் துவைத்து ஓடும் ரயிலில் இருந்து வெளியே தூக்கி எறிவதும் - என்ன அராஜகம்!

இது நாடா - ஓநாய்களின் வேட்டைக் காடா? வெட்கம்! வெட்கம்!! மகா வெட்கம்!!!

No comments:

Post a Comment