செய்திச் சுருக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 6, 2022

செய்திச் சுருக்கம்

பரிசோதிக்கலாம்

அதிக மின் அழுத்தத்தால் மின் மீட்டர் எரிவது போன்ற பிரச்சினைகளை பொதுமக்களே களையும் வகையில், தனியார் ஆய்வகத்தில் மின் மீட்டர்களை கொண்டு பரிசோதனை பராமரிப்புப் பணிகளை தங்கள் சொந்த செலவில் செய்து கொள்ளலாம் என மின் வாரியம் தெரிவித்துள்ளது.

பாம்பன்

இராமேஸ்வரம் தீவை நிலப்பரப்புடன் இணைக்கும் புதிய பாம்பன் ரயில் பாலம் கட்டுமானப் பணியை மார்ச்சுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தகவல்.

ஒதுக்கீடு

பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டத்தை ஒசூர் வரை நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிப்பதற் காக தமிழ்நாடு அரசு ரூ.75 லட்சம் நிதி ஒதுக்கி உள்ளது.

உரிமம்

பொதுமக்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங் களுக்கு நேரில் செல்லாமலேயே 2.26 லட்சம் பேர் ஆன்லைன் மூலம் ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ளதாக தகவல்.

தவிர்ப்பு

பண்ருட்டி அருகே ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் குறித்து தகவல் கொடுத்த பெண்ணால், விபத்து தவிர்க்கப்பட்டது.

தேர்வு

தேசிய மாநாட்டு கட்சித் தலைவராக பரூக் அப்துல்லா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அரசியல் பிர முகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பரிந்துரை

தனிநபர் மின்னணு சாதனங்களை பறிமுதல் செய் யும் நடைமுறையில் சிபிஅய்யின் வழிகாட்டு நெறி முறைகளை காலத்திற்கு ஏற்ப புதுப்பிக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

வலியுறுத்தல்

‘ஜி20' சின்னத்தில் தாமரைக்கு பதிலாக தேசிய சின்னங்களில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்த வேண்டும் என மம்தா வலியுறுத்தல்.


No comments:

Post a Comment