கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுப்பதா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 29, 2022

கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுப்பதா?

மாவட்ட ஆட்சியர் மறுக்கப்பட்டவர்களை கோயிலுக்குள் அழைத்துச் சென்று வழிபட ஏற்பாடு!

புதுக்கோட்டை,டிச.29- கடவுள், மதம், பக்தியின் பெய ரால் பிறப்பின் அடிப்படையில் ஜாதி ஏற்றத்தாழ்வுக் கொடுமை களால் மனித உரிமை பறிப்புகள் தொடர்ந்து கொண்டிருக் கின்றன. தீண்டாமையை ஒழிப்ப தாகக் கூறுகின்ற அந்தத் தீண்டா மைக்கு காரணமான ஜாதி அரச மைப்புச்சட்டத்தில் ஒரு குற்றமாக ஆக்கப்படாமல் உள்ளது. அதனா லேயே, நாடு முழுவதும் ஜாதி ஆணவ வெறியாட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. 

புதுக்கோட்டையில் 5 தலை முறைகளாக கோயிலுக்குள் நுழைய மறுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூக மக்களை மாவட்ட ஆட்சியர் கோவிலுக்குள் அழைத்துச்சென்று சுவாமி தரிசனம் செய்யவைத்தார். 

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் கிராமம் அருகே வேங்கை வயல் பகுதியில் தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட அவலம் நிகழ்ந்தது. இந்த விவகாரம் தொடர் பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது 5 பிரிவுகள் கீழ் காவல் துறையினர் வழக்கு பதிவு செய் துள்ளனர். தொடர்ந்து சம்பவம் நடந்த வேங்கை வயல் பகுதியில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மற்றும் காவல் கண்காணிப் பாளர் வண்டிதாபாண்டே ஆகியோர் ஆய்வு செய்தனர்.

அப்போது ஆட்சியரிடம் பேசிய தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் தங் களை 5 தலைமுறைகளாக அய்ய னார் கோயிலுக்குள் சென்று வழி பட அனுமதி மறுத்து ஒதுக்கியுள் ளதாக வேதனை தெரிவித்தனர். 

இதனை அடுத்து உடனடியாக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அம்மக்களை அழைத்துக்கொண்டு சம்பந்தப்பட்ட கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய நடவ டிக்கை மேற் கொண்டார். முன்ன தாக கோவில் பூசாரியான மாற்று சமூகத்தை சேர்ந்த ராஜன் என்ப வரின் மனைவி சாமி வந்ததை போல்ஆடி தாழ்த்தப்பட்ட சமூக மக்களை இழிவான சொற்களை பயன்படுத்தி பேசியுள்ளார். 

இதனால் அதிர்ச்சி அடைந்த ஆட்சியர் அப்பெண் மீது நடவ டிக்கை எடுக்க காவல்துறையின ருக்கு உத்தரவிட்டார். இதனை அடுத்து அந்த பெண்ணிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


No comments:

Post a Comment