தடையை கொண்டுவராமல் இருக்க ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் கோடிகளை செலவு செய்ய தயாராக உள்ளன ஆய்வுக்குழு தலைவர் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 16, 2022

தடையை கொண்டுவராமல் இருக்க ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் கோடிகளை செலவு செய்ய தயாராக உள்ளன ஆய்வுக்குழு தலைவர் தகவல்

 

சென்னை,டிச.16- சட்டத்தின் மூலம் தடையை கொண்டுவராமல் இருக்க ஆன்லைன் ரம்மி நிறு வனங்கள் எத்தனை கோடிகளை வேண்டுமானாலும் செலவு செய்ய தயாராக இருப்பதாக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தெரிவித் துள்ளார். தமிழ்நாட்டில் ஆன் லைன் சூதாட்டத்தை தடை செய்யும் நோக்கில் அதன் பாதிப் புகளை ஆய்வு செய்வதற்காக ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி சந்துரு தலைமையில் தமிழ்நாடு அரசு குழு அமைத்தது.

இக்குழுவின் பரிந்துரை அடிப்படையில், தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை நிறைவேற்றி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பிவைத்தது. இந்த சட்ட மசோதாவுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஒப்புதல் அழைக்காமல் காலதாமதம் செய்ததால் மசோதா காலாவதியானது.

இந்நிலையில், சட்டத்தின் மூலமாக தடையை கொண்டு வராமல் இருப்பதற்கு ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் எத்தனை கோடி ரூபாய்கள் வேண்டுமானா லும் செலவு செய்ய தயாராக இருப்பதாக தமிழ்நாடு அரசு அமைத்த ஆன்லைன் சூதாட்ட ஆய்வு குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஒரு வார இதழில் நீதிபதி சந்துரு எழுதியுள்ள கட்டுரையில், ஆன்லைன் சூதாட்ட விளை யாட்டு மூலம் ஒன்றிய அரசு கோடிக்கணக்கில் வருமான வரி ஈட்டுவதாகவும், மாநில அரசு களும் 28 விழுக்காடு வரி வசூலித்துக்கொள்ள ஒன்றிய அரசு வழிவகை செய் துள்ளதாகவும் கூறியுள்ளார். இதன் மூலம் ஆன்லைன் சூதாட் டங்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தடை போடா மறுப்பதற்கு பின்னணியில் இருப்பது யார் என தெரிந்து கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆன்லைன் சூதாட் டம் குறித்த ஆய்வு காலத்தில் தனது தலைமையிலான குழு விற்கு அழுத்தம் கொடுக்கப் பட்டதாகவும் நீதிபதி சந்துரு தனது கட்டுரையில் கூறியுள்ளார்.   ஆன்லைன் சூதாட்டத்தால் பாதிக் கப்பட்டு இதுவரை 38 பேர்  தற் கொலை செய்து கொண்டுள்ளனர். 

No comments:

Post a Comment