ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க இடைக்கால தடை - அமெரிக்கா கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 22, 2022

ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க இடைக்கால தடை - அமெரிக்கா கண்டனம்

காபூல் , டிச.   22- ஆப்கானிஸ் தானில் பெண்களுக்கு பல கடுமையான கட்டுப்பா டுகள் விதிக்கப்பட்டுள் ளன. காபூல், ஆப்கானிஸ் தானில் ஒரு ஆண்டுக்கும் மேலாக ஆட்சி செய்து வரும் தலிபான்கள் அந் நாட்டு மக்களுக்கு பல் வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். 

குறிப்பாக, அந்த நாட் டின் பெண்கள் பாலின பாகுபாட்டால் பல சிக் கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். ஆறாம் வகுப்பு மேல் கல்வி கற்க தடை, ஆண்கள் துணை யின்றி விமானங்களில் பயணிக்க தடை, பொது இடங்களில் ஆடை கட் டுப்பாடு, பொழுதுபோக்கு பூங்கா மற்றும் உடற்பயிற்சிக் கூடம் செல்ல தடை என பெண்களுக்கு பல கடுமையான கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டுள் ளன. இந்நிலையில், ஆப் கானிஸ்தான் பல்கலைக் கழகங்களில் பெண்கள் படிப்பதற்கு தலிபான்கள் இடைக்கால தடை விதித் துள்ளனர். 

 உலக நாடுகள் கண்டனம்

அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் இந்த உத்தரவு செல்லும். அடுத்த உத்தரவு வரும் வரை இது அமலில் இருக் கும் என தெரிவித்துள் ளனர். இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி கற்க தாலிபான்கள் விதித்துள்ள கட்டுப்பாடுகளுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் அட்ரியன் வாட்சன் வெளியிட்டுள்ள அறிக் கையில், ஆப்கானிஸ்தா னில் பல்கலைக் கழகங் களில் பெண்கள் படிப்ப தற்கு இடைக்கால தடை விதித்துள்ள தலிபான்க ளின் முடிவை அமெ ரிக்கா கண்டிக்கிறது. 

இந்த மோசமான முடிவுவானது ஆப்கா னிஸ்தானில் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கவும், அவர்களின் மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங் களைப் பயன்படுத்துவ தைத் தடுக்கவும் தலி பான்கள் தலைமையின் எடுக்கப்பட்ட சமீபத்திய முயற்சியாகும். ஆப்கானிஸ் தானின் மக்கள்தொகை யில் பாதியளவு உள்ள பெண்களின் கல்வியை தடுத்து நிறுத்தும் இந்த ஏற்றுக்கொள்ள முடி யாத நிலைப்பாட்டின் விளைவாக, தலிபான்கள் சர்வதேச சமூகத்திலிருந்து மேலும் விலகி அவர்கள் விரும்பும் சட்டபூர்வ மான தன்மை மறுக்கப் படும். 

இந்தப் பிரச்சினையில் எங்களின் கூட்டு நாடுகள் மற்றும் நட்பு நாடுகளு டன் அமெரிக்கா தொடர் பில் உள்ளது. ஆப்கானிஸ் தான் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு ஆதரவாக வும், அந்நாட்டு மக்க ளுக்கு மனிதாபிமான ஆதரவை வழங்குவதற் கும் எங்களின் முயற்சி களை முன்னெடுப்பதற்கு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ் வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment