பள்ளி, கல்லூரியில் சைகை மொழிப் பாடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 1, 2022

பள்ளி, கல்லூரியில் சைகை மொழிப் பாடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை, டிச. 1- பள்ளி, கல்லூரிகளில் சைகை மொழிப் பாடங்கள் அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழ்நாட்டின் மேனாள் முதலமைச்சரும், எம்ஜிஆரின் மனைவியுமான ஜானகியின் நூற் றாண்டு தொடக்க விழா சென்னை அடையாறு எம்ஜிஆர் ஜானகி கல்லூரிவளாகத்தில் நேற்று (30.11.2022) நடைபெற்றது. 

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கல்லூரி வளாகத் தில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளூ வர் சிலையைதிறந்து வைத்தார். மேலும், அன்னை ஜானகி எம்ஜிஆர் நூற்றாண்டு சிறப்பு மலர், ஜானகியின் ஆவணப்பட குறுந்தகடு, எம்ஜிஆர் வாழ்க்கை நூல் ஆகியவற்றையும் வெளியிட் டார்.

தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் ஜானகிதான். அவரது நூற்றாண்டு விழாவில் பங்கேற்பது பெருமையாக உள் ளது.  வரலாறு அடிப்படையில் சிந்திப்பவர்களுக்கு இந்நிகழ்வு அதிர்ச்சி தராது. ஏனெனில், எம்ஜிஆர் 20 ஆண்டுகள் திமுகவில் இருந்தார்.

திமுகவின் சமூக, சமத்துவ, பொதுவுடைமை கருத்துகளை திரைப்படம் வாயிலாக மக்களிடம் கொண்டு சென்றார். காலத்தின் சூழலால் அதிமுக எனும் ஒரு தனி இயக்கத்தை தொடங்கினார். அந்த இயக்கத்திலும் அவரது பங்களிப்பு 15 ஆண்டுகள்தான். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பது எனது கடமையாகும்.

இந்த கல்லூரி தொடங்குவதற்கு 1991 முதல் 1995ஆம் ஆண்டு வரை ஜானகியால் அனுமதி பெற முடியாமல் இருந்தது. அதன்பின் திமுகஆட்சி வந்ததும் இந்த கல்லூரிக்கு அனுமதி வழங்கி, இது உருவாகக் காரணமாக இருந்தவர் மறைந்த முதலமைச்சர் கலைஞர். அதேபோல், எம்ஜிஆர் என் மீது அளவு கடந்த பாசம் கொண்டவர். அவருடன் நெருங்கி பழகும் வாய்ப்பு எனக்குகிடைத்தது. நன் றாக படிக்க வேண்டுமெனவும் எனக்கு அவர் அறிவுறுத்தினார்.

நூற்றாண்டு விழா காணும் ஜானகி தமிழ் திரையுலகில் முன் னணி நட்சத்திரமாக விளங்கியவர். பரதநாட்டியம், மணிப்பூரி, சிலம் பம், கத்தி சண்டை உட்பட பல் வேறு தனித்திறன்களை பெற்றவர். தமிழ், மலையாளம் உட்பட 6 மொழிகள் அறிந்தவர். எம்ஜிஆர் போல் கொடைத்தன்மை கொண் டவர். திரையுலகில் மட்டுமல்ல, அரசியலிலும் அவருக்கு பக்கபல மாக இருந்தார்.

சைகை மொழியை பள்ளி, கல்லூரிகளில் மொழிப் பாடமாக வைக்க வேண்டும் என்று எம்ஜிஆர் ஜானகி கல்லூரி தாளாளர் லதா ராஜேந்திரன் கோரிக்கை வைத்து உள்ளார். இந்த கோரிக்கை செயல் திட்டமாக்க நடவடிக்கை எடுக் கப்படும்.

எம்ஜிஆர் தனி இயக்கத்துடன் செயல்பட்டாலும் அண்ணாவின் கொள்கையை கட்டிக் காத்தார்.திராவிட கொள்கைகளைக் காப்ப தும், அதன் மூலமாக தமிழ்நாட்டை மேம்படுத்துவம்தான் எம்ஜிஆர்-ஜானகிக்கு நாம் செய்யும் மரியா தையாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார். 

இந்நிகழ்வில் தமிழ்நாடு அமைச் சர்கள் க.பொன்முடி, மா.சுப்ரமணி யன், சு.முத்துசாமி, ஆர்.சக்கரபாணி, எம்ஜிஆர்-ஜானகி மகளிர் கலை, அறிவியல் கல்லூரியின் தலைவர் குமார் ராஜேந்திரன், தாளாளர் லதா ராஜேந்திரன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment