பதிலடிப் பக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 30, 2022

பதிலடிப் பக்கம்

ஆளுநர் மாளிகையா? பஜனை மடமா?

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், 

ஆர்.எஸ்.எஸ்.,  சங் பரிவார், 

பிஜேபி வகையறாக்களுக்குப் 

பதிலடிகளும் வழங்கப்படும்)

கிறிஸ்து பிறப்பதற்கு 3100 ஆண்டுகளுக்கு முன்பாகவே  முன்னோர்கள் கோள்களின் நிலையை கண்டறிந்து பஞ்சாங்கத்தை உருவாக்கி வைத்திருந் தனர். இதுபோன்ற இந்தியாவின் பழைமையை இன்றைய இளைஞர்கள் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்து உள்ளார்.

எதைப்பற்றி இளைஞர்களைப் படிக்கச் சொல்கிறார் ஆளுநர்?

பஞ்சாங்கம் என்ன சொல்கிறது?

சந்திரனையும் கோள் என்று சொல்லும் பஞ்சாங்கத்தைப் படிக்கச்சொல்கிறாரா? ஜேம்ஸ் வெப் என்னும் தொலைநோக்கி இந்தப் பெருவெளி தோன்றிய போது கிளம்பிய ஒளியை நமக்கு படம் பிடித்துக் காட்டியுள்ளதே! அப்படி இருக்கும் போது இவர் இப்போது பஞ்சாங்கத்தைப் படியுங்கள் என்கிறார்.

பஞ்சாங்கம் என்ன சொல்கிறது? ராமன் பிறந்த நவமியும் கிருஷ்ணன் பிறந்த அஷ்டமியும் கெட்ட நாள் என்கிறது - இதையும் இவர் படிக்கச்சொல்கிறாரா? ஞானதேவி, சுகீர்த்தி, ரோகிணி, தாரா, உஷா, பிரத் யுஷா, சாந்திதேவி, சித்ரலேகா, நீலா, ஸிம்ஹி இவர்கள் எல்லாம் யார் தெரியுமா? 1970 களில் வெளிவந்த மாயாஜால திரைப்படங்களின் கதாநாயகிகள் அல்ல  - இவர்கள் அனைவரும் பஞ்சாங்கத்தில் குறிப் பிட்டுள்ள நவ கிரகங்களின் மனைவிகள்

இவர்கள் தான் அந்த ஜோடிகள். புதன் மனைவி ஞானதேவி, சுக்கிரன் மனைவி சுகீர்த்தி, சந்திரன் மனைவி ரோகிணி, குரு மனைவி தாரா, சூரியன் மனைவி ஷா, பிரத்யுஷா, செவ்வாய் - சாந்தி தேவி, கேது - சித்திரலேகா, சனி- நீலா. ராகு - ஸிம்ஹி,

ராகு கேது என்ற பாம்பு சூரியனையும் சந்திர னையும் விழுங்குகிறது ஆகையால் கிரஹணங்கள் தோன்றுகிறது என்று எழுதிவைத்துள்ளார்களே அதைப் படிக்கச்சொல்கிறாரா? தமிழ்நாட்டை மீண் டும் கற்காலத்திற்கு கொண்டு செல்லாமல் ஓயமாட் டேன் என்று இரவு பகலாக வேலை பார்க்கிறார் ஆளுநர். 

ஆளுநர் மாளிகையில் கொலு பூஜை, ஆளுநர் மாளிகை அரசு வாகனங்களுக்கு ஆயுதபூஜை, யாகம் வளர்த்து தசராகொண்டாட்டம் என்று கிட்டத்தட்ட ஆளுநர் மாளிகையை பஜனை மடமாக்கி விட்டார். இப்போது நம் பிள்ளைகளையும் பஞ்சாங்கம் படி யுங்கள் என்கிறார்.

சந்திரனில் போய் இறங்கிய நீல் ஆர்ம்ஸ்ட் ராங், எட்வின் ஆல்ட்ரின் ஆகியவர்கள் அங்கே ரோகிணி யைப் பார்த்தார்களா என்று ஆளுநரிடம் மாணவர்கள் கேட்டிருக்கவேண்டும்.

No comments:

Post a Comment