தொழிலாளர் நலத்துறை சார்பில் அய்டிஅய், விடுதிக் கட்டடங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலியில் திறந்து வைத்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 17, 2022

தொழிலாளர் நலத்துறை சார்பில் அய்டிஅய், விடுதிக் கட்டடங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலியில் திறந்து வைத்தார்

சென்னை,டிச.17- தொழிலாளர் நலத் துறை சார்பில் ரூ.18.80 கோடியில் கட்டப்பட்டுள்ள அரசு அய்டிஅய் கட்டடங்கள், விடுதிகள், மண்டல இணை இயக்குநர் அலுவலகம் ஆகிய வற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

மாணவர்கள் தொழிற்பயிற்சி பெறு வதன் மூலம், வேலைக்கேற்ற திறனைப் பெற்று தகுதியான வேலைவாய்ப்பை பெறவும், தங்களது சமூக பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ளவும் இயலும் என்பதைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொழிற்பயிற்சி நிலையங்கள் (அய்டிஅய்) தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையால், நடத்தப்பட்டு வருகின்றன.

இத்தகைய தொழில்திறன் பெற்ற மனிதவளத்தை உருவாக்கிட புதிய அய்டிஅய்க்களை தொடங்குதல், அவற் றின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம் படுத்துதல், புதிய தொழிற்பிரிவுகளை தொடங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல் படுத்தி வருகிறது.

அந்த வகையில், ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையத்தில் ரூ.7.06 கோடியிலும், திருவாரூர் மாவட்டம், கோட்டூரில் ரூ.7.46 கோடியிலும் புதிய அய்டிஅய் கட்டடங்கள் கட்டப்பட் டுள்ளன. அதேபோல், தருமபுரியில் ரூ.3.20 கோடியில் அய்டிஅய்யில் மகளிர் விடுதிக் கட்டடம், சென்னை, அம்பத்தூரில் ரூ.1.07 கோடியில் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கான சென்னை மண்டல இணை இயக்குநர் (பயிற்சி) அலுவலகத்துக்கு புதிய கட்ட டம் ஆகியவையும் கட்டப்பட் டுள்ளன. மொத்தம் ரூ.18.80 கோடியில் கட்டப் பட்டுள்ள கட்டடங்களை முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் நேற்று (16.12.2022) காணொலியில் திறந்துவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சி.வி.கணேசன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, தொழிலாளர் துறை செயலர் முகமது நசிமுத்தின், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் கொ.வீரராகவராவ் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.


No comments:

Post a Comment