சென்னிமலை, டிச. 15- ஈரோடு சென்னிமலை அருகே வெள்ளோட்டில் இருந்து பெருந்துறை ஆர்.எஸ். செல்லும் வழி யில் உள்ளது சின்னக் குளம். இங்கு பல ஏக்கர் பரப்பளவில் குளம் ஒன்று உள்ளது. இந்த குளத்தின் கரையில் உள்ள வேப்ப மரத்தில் கடந்த ஒரு வாரமாக பால் வடிந்தது.
இதுபற்றி அறிந்ததும் வெள்ளோடு மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த நூற் றுக்கணக்கான பக்தர்கள் அங்கு சென்று வேப்ப மரத்திற்கு பூஜைகள் செய்து வழிபட்டனராம்.
இதையொட்டி அந்த வேப்ப மரத்தில் மஞ்சள் துணி கட்டப்பட்டு அதில் மஞ்சள், குங்குமம் ஆகியவையும் வைக்கப் பட்டனவாம்.
வேப்ப மரத்தில் பால் வடிவது இயற்கையான நிகழ்வாகும். அதை சற் றும் உணராது 2022ஆம் ஆண்டிலும் வேப்ப மரத்தில் பால் வடிவதைப் பார்த்து பூஜை போட்டு மரத்தைக் கும்பிடும் மக் கள் உள்ளனரே என்று இதைக்கண்ட பலரும் வியப்புத் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment