நாசா அனுப்பிய ஓரியன் விண்கலம் பூமிக்கு திரும்பியது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 15, 2022

நாசா அனுப்பிய ஓரியன் விண்கலம் பூமிக்கு திரும்பியது

வாசிங்டன் டிச 15- சோதனை முயற்சியாக நிலவுக்கு அனுப்பப்பட்ட நாசா வின் ‘ஓரியன்’ விண்கலம் பூமிக்கு திரும்பியது. அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா 2025ஆ-ம் ஆண்டுக் குள் நிலவுக்கு மீண்டும் மனிதரை அனுப்ப 'ஆர் டெமிஸ்' என்கிற திட் டத்தை தொடங்கியுள்ளது. 

இந்த திட்டத்தின் கீழ் மனிதர்களை நிலவுக்கு கொண்டு செல்ல 'ஓரியன்' என்கிற விண்கலத்தை நாசா உருவாக்கியுள்ளது. சோதனை முயற்சியாக ஆளில்லா ஓரியன் விண் கலத்தை நிலவுக்கு அனுப்ப நாசா திட்டமிட்ட நிலை யில், ராக்கெட்டில் ஏற் பட்ட தொழில்நுட்ப கோளாறுகளால் அந்த முயற்சி பலமுறை ஒத்தி வைக்கப்பட்டது. 

அதைதொடர்ந்து, கடந்த மாதம் 16-ஆம் தேதி 'ஆர்டெமிஸ்-1' ராக் கெட் மூலம் 'ஓரியன்' விண் கலம் வெற்றிகரமாக நில வுக்கு அனுப்பப்பட்டது. பின்னர் ராக்கெட்டில் இருந்து பிரிந்த 'ஓரியன்' விண்கலம் நிலவை நோக்கி தனது பயணத்தை மேற்கொண்டது. 6 நாட் கள் பயணத்துக்கு பின் 'ஓரியன்' விண்கலம் நிலவின் சுற்றுவட்டப் பாதையை அடைந்தது. சுமார் 26 நாட்கள் நிலவின் சுற்று வப் பட்டப்பாதையில் சுற்றி வந்த 'ஓரியன்' விண் கலம் தனது பயணத்தை முடித்துக்கொண்டு பூமிக்கு புறப்பட்டது.  பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்த விண்கலம் பசிபிக் பெருங் கடல் பகுதியில் பாதுகாப் பாக தரையிறங்கியது.

No comments:

Post a Comment