குடலில் பரவும் கெட்ட பாக்டீரியாக்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 5, 2022

குடலில் பரவும் கெட்ட பாக்டீரியாக்கள்

குடல் உணர்வு பற்றி பலர் அடிக்கடி கூறக் கேட்டிருப்போம். அல்லது நாமே இந்த அனுபவத் தினை பலமுறை பெற்றிருப்போம். உங்கள் வயிறு, குடல் உங்களுக்கு சொல்வதினை கேளுங்கள். சில உணர்வுகள் மற்றும் எண்ணங்களை உங்கள் வயிறு சொல்லும். நீங்கள் அதனை கூர்ந்து கவனித்தாலே தெரிந்து விடும். இந்த குரல்கள் உங்களை கவனித்துக் கொண்டிருக்கின்றன. 

நீங்கள் ஏதேனும் ஒரு முடிவு எடுக்க குழம்பு கின்றீர்களா? தனிமையில் அமைதியான சூழ் நிலையில் உங்கள் பிரச்சினையை வாய் விட்டு சொல்லுங்கள். உங்கள் மனதிற்கு மிக நெருக்க மானவர் யாராவது ஒருவரிடம் கூறுவதாக நினைத்து கூறுங்கள். சற்று நிதானம் கொடுங்கள். குடல் உணர்வுகள் உங்களுக்கு வழிகாட்டும். அதனை தெளிவாய் உணர முடியும்.

நீங்கள் எப்பொழுதுமே தனியாக இல்லை. நீங்கள் வழி நடத்தப்படுகின்றீர்கள். உங்கள் உள்ளுணர்வுகள் உங்களிடம் பேசும் பொழுது, வலியுறுத்தும் பொழுது அவற்றைக் கேளுங்கள். அவை உங்கள் நன்மைக்காகவே என நமது குடல் உணர்வு, உள்ளுணர்வு பற்றி பொதுவில் கூறுவார் கள். இதையே நாம் இப்பொழுது மருத்துவ ரீதியாகப் பார்ப்போம். நமது வாய் முதல் ஆசன வாயில் வரை நம் உடலை பாதுகாக்க நல்ல பாக்டீரியாக்கள் உள்ளன. இவை சிறுகுடல், பெருங்குடல் இவற்றில் அதிகமாகவே உள்ளன. இவைகளை புரோபயாட்டிக் நுண்ணுயிர்கள் என்று சொல்கிறோம். இவைகளால் ஏராளமான நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றன. இந்த நல்ல பாக்டீரியாக்களை தான் நாம் புரோபயாடிக் என்கிறோம்.

உணவு செரித்து இன்னும் சத்துக்களை பெற இந்த பாக்டீரியாக்கள் நமக்கு அவசியம் தேவை. இது குறையும் பொழுதுதான் கெட்ட பாக்டீரியாக் கள் அதிகரித்து செரிமானமின்மை, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு என ஆரம்பித்து விடும். பல நோய்களின் மூலவேர் குடலில் இருந்தே உரு வாகிறது. நம்ம ஊரு உணவுக்கு புரோபயாட்டிக் குறைவது என்பதும் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் இருப்பது என்பதும் நம் முந்தைய தலைமுறையில் சற்று குறைவான ஒன்றே என்று சொல்லலாம். ஏனெனில் நமது உணவுமுறை புரோபயாடிக் நிறைந்த உணவாகத்தான் இருந்தது. இட்லி, தோசை போன்ற புளித்த உணவுகள், தயிர், மோர் அதிக எண்ணெய் காரமில்லாத ஊறு காய்கள் இவை அனைத்துமே புரோபயாடிக் நிறைந்த உணவுதான். இன்று பெரிய ஓட்டல்களில் கூட வழங்கப்படும் பழைய சாதம், ஊறுகாய் கூட புரோபயாடிக் நிறைந்த உணவுதான். குடலை உணவு மண்டலத்தை பாதுகாத்தாலே நம் உடல் நன்கு இருக்கும். இன்றும் கூட பலர் நீராகாரம் என்ற பெயரில் இரவு நீரில் ஊறவைத்த பழைய சாதம், மோர், ஊறுகாய் என்று காலையில் சாப்பிடு பவர்கள் உண்டு. அவர்களை பார்த்தால் சுறுசுறுப் புடன் இனிமையாகவும் ஆக்கப்பூர்வமான சிந்தனைகளோடும் இருப்பார்கள். பாலை சார்ந்த உணவான தயிர், மோர், சீஸ் இவைகள் எல்லாமே புரோபயாடிக் உணவுகள் தான். இவை கெட்ட கொழுப்பைத் தவிர்க்கும். நோய் எதிர்ப்பு சக்தி யினைக் கூட்டும்.

சர்க்கரை நோயாளிகளுக்கும் அதிக எடை கூடியவர்களுக்கும் நன்மை பெற இந்த புரோப யாடிக்கும் அவசியம் ஆகின்றது. இப்பொழுது மீண்டும் குடல் உணர்வு என்பதனை பற்றி பார்ப் போம். நல்ல பாக்டீரியாக்கள் இருந்தால் குடல் நல்ல உணர்வுகளை மூளைக்கு அனுப்பும். நாமும் ஆக்கப்பூர்வமாக இருந்து சாதனைகளை செய்வோம். கெட்ட பாக்டீரியாக்கள் அதிகமாக இருந்தால் மூளையின் செயல்பாடும் மாறாகத்தான் இருக்கும். பிரீபயாடிக்ஸ் என்றும் சொல்கிறோம். பிரீபயாடிக்ஸ் என்றால் என்ன? புரோபயோடிக் என்பது நல்ல பாக்டீரியா. இந்த நல்ல பாக்டீரியாக் கள் நன்கு இருப்பதற்கும் அதிகரிப்பதற்கும் உணவு அளிப்பவை தான் இந்த பிரீயோடிக். வெங்காயம், பூண்டு, வாழை, நார்ச்சத்து நிறைந்த ஓட்ஸ், பிரவுன் அரிசி, பிளாக்ஸ் விதைகள், காய் கறிகள், முழு தானிய உணவு இவை பிரீபயாடிக் நிறைந்த உணவுகள். இனிமேல் உங்களுக்கும் சரி உங்கள் வீட்டிற்கு வரும் விருந்தாளிகளுக்கும் சரி மேற்கூறிய உணவு வகைகளையே கொடுங் கள். நவீன உணவு வகைகள் வேண்டாம்.

No comments:

Post a Comment