வராக் கடனை மக்கள் மீது சுமத்தும் ஒன்றிய அரசு இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் குற்றச்சாட்டு..!! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 20, 2022

வராக் கடனை மக்கள் மீது சுமத்தும் ஒன்றிய அரசு இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் குற்றச்சாட்டு..!!

 சேலம், டிச. 20- இந்தியாவில் வராக்கடனாக உள்ள 10.28 லட்ச கோடி ரூபாயை சேவைக் கட்டணம் என்ற பெயரில் வங்கிகள் மூலம் பொதுமக்கள் மீது ஒன்றிய அரசு சுமத்து வதாக வங்கி ஊழியர் சம்மேளனம் குற்றம்சாட்டியுள்ளது. சேலத்தில் தொடங்கியுள்ள இந்தியன் வங்கி ஊழியர் சம்மேளனத்தின் 13ஆவது மாநில   மாநாட்டில் ஒன்றிய அரசின் கொள்கைகளுக்கு எதிராக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தின் மாநில பொது செயலாளர் ராஜகோபால் கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் சுமார் 10 அரை லட்சம் கோடி ரூபாய் வராக்கடனாக உள்ளதை சுட்டிக்காட்டினார். இந்த வராக்கடன் தொகையை சேவைக் கட்டணம் என்ற பெயரில் வங்கிகள் மூலம் ஒன்றிய அரசு மக்கள் மீது திணித்துள்ளதாக அவர் கூறினார்.

மாநில கூட்டுறவுவங்கிகளையும், மாவட்ட, மத்திய கூட்டுறவு வங்கிகளையும் இணைத்து தமிழ்நாடு வங்கி ஏன் மாற்றம் செய்யப்படவேண்டும் என்று ராஜகோபால் கூறினார். 43 கிராம வங்கிகளை தேசிய கிராம வங்கி என்ற நிதியத்தை உருவாக்கி ஒன்றிணைக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.


No comments:

Post a Comment