செயற்கை கருப்பை மூலம் உருவாக்கப்படும் குழந்தைகள் ஜெர்மனியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் வெளியிட்ட காட்சிப்பதிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 17, 2022

செயற்கை கருப்பை மூலம் உருவாக்கப்படும் குழந்தைகள் ஜெர்மனியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் வெளியிட்ட காட்சிப்பதிவு

பெர்லின், டிச. 17- செயற்கை கரு மூலமாக குழந்தைகளை உருவாக்குவதை பற்றி ஜெர்மனியை சேர்ந்த நிறுவனம் ஒன்று வெளியிட்டிருக்கும் காட்சிப்பதிவு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் மறுபக்கம் அதிர்ச்சியும் ஏற்படுத்தி இருக்கிறது. மக்கள் தொகை அதிகரிப்பு உலகின் பெரும் பிரச்சினையாக இருந்த காலம் மாறி பல நாடுகள் ஒன்றுக்கும் அதிகமான குழந்தைகளை பெற்றுக்கொள்ள மக்களை ஊக்குவிக்கும் நிலையில் உள்ளனர். ஜப்பான், பல்கேரிய,தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் மக்கள் தொகை சரியத்தொடங்கி இருக்கிறது. இதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.

அதில் பிரசவத்தின் போது ஏற்படும் உயிரிழப்புகள், கருப்பை நீக்கம் என உடல் ரீதியான காரணங்கள், முதன்மை யாக கருதப்படுகின்றன. இது தொடர்பாக பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. அய்.வி.எஃப் சோதனை, குழாய்மூலம் குழந்தை பெறுவது என பல்வேறு முறைகளும் நடைமுறைக்கு வந்துவிட்டன. அதன் அடுத்தகட்டமாக செயற்கை கருமூலம் குழந்தை பெறுவது குறித்து வெர்லினை சேர்ந்த உயிரி தொழில்நுட்பவியலாளர் அசிம் அல்காயிலி என்பவர் காட்சிப்பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். எச்.ஓ.லைப் என்ற பெயரில் அவர் நடத்திவரும் ஆராய்ச்சி குறித்து அந்த காட்சிப்பதிவில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் குறைந்த மாதங்களில் பிரசவிப்பது, கரு கலைதல், பிரசவவலி, உடல் ரீதியான குறைபாடுகள். தலை முறையாக தொடரும் நோய்களின்றி குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாம் என காட்சிப்பதிவில் விளக்கமளிக்கப்பட்டு உள்ளது. மேலும் குழந்தையின் நிறம் , உயரம் என அனைத் தையும் தீர்மானித்து அதன்படி சிசுவின் வளர்ச்சியின்போதே மாற்றங்கள் ஏற்படுத்திக்கொள்ளமுடியும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு 30,000 குழந்தைகள் இதன் மூலம் பிறக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புற்றுநோயால் கருப்பையை நீக்கிய பெண்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும் என ஒரு பக்கம் பலர் இந்த ஆராய்ச்சியை வரவேற்றுள்ளனர். ஆனால் இயற்கையான குழந்தைபிறப்பை முற்றிலும் செயற் கைத் தனமாக மாற்றுவது மனித இனத்திற்கு பல்வேறு பிரச்சினைகளை உருவாக்கும் என்றும் இந்த காட்சிப்பதிவு அதிர்ச்சியையே ஏற்படுத்துவதாகவும் பலர் கூறிவருகின்றனர். 

No comments:

Post a Comment