பச்சைப் பயறின் பலன்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 5, 2022

பச்சைப் பயறின் பலன்கள்

பாசிப்பருப்பு பச்சை தோலுடன் இருப்பதை தான் பச்சைப் பயறு என்கிறோம். இந்த பச்சை பயறு தரும் பலன்களை பற்றி தெரிந்து கொள்வோம். 

* பச்சைப் பயறு போலேட், வைட்டமின் பி9 நிறைந்தது. இதனால் புது செல்கள் உருவாகின்றது. குறிப்பாக சிவப்பு ரத்த அணுக்கள் உருவாக உதவுகின்றது. 

* நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாலும் பிளேவறாய்ட்ஸ் இருப்பதாலும் ரத்த குழாய் கள் பாதுகாக்கப்படுகின்றது. வீக்கம் குறைகின்றது. 

* கர்ப்பம் தரிக்க நினைக்கும் தாய்மார் கள், கர்ப்பிணிகள் பச்சைப் பயறினை உண வில் நன்கு சேர்த்துக் கொள்ள வேண்டும். இது குருதி ஓட்டம் சீராக இயங்க உதவுகின்றது. வைட்டமின் பி9 சத்துக்களுடன் இணைந்து இருதய துடிப்பு சீராய் இயங்க உதவுகின்றது. வைட்டமின் பி9 போலிக் ஆசிட் கர்ப்ப காலத்தில் குழந்தை பாதுகாப்பிற்கு பெரிதும் உதவுகின்றது. 

* சிறந்த புரதம் கொண்டது. குறிப்பாக சைவ உணவு உட்கொள்பவர்களுக்கு சிறந்த புரதம் உள்ளது எனலாம். ஒரு கப் பாசிப் பயறு 30 சதவீதம் அன்றாட தேவைக் கான புரதத்தினை கொடுக்கின்றது. 

* பாசிப்பயறு கொழுப்பு குறைந்தது. இதில் உள்ள நார்ச்சத்தால் வயிறு நிரம்பும். இதன் காரணமாக அடிக்கடி நொறுக்குத் தீனி எடுப்பது வெகுவாய் குறையும். அதிக சத்துக்கள் கிடைப்பதோடு எடை குறைப் பிற்கும் வெகுவாய் உதவுகின்றது. 

* இன்று சிங்க் எனப்படும் இதன் அவசியத்தினை மருத்துவ உலகம் வலி யுறுத்தி வருகின்றது. சிங்க் மாலைக்கண் நோய் பாதிப்பினை நீக்குவதற்கு பெரிதும் உதவுகின்றது. 

* இதில் உள்ள பொட்டாசியம் உயர் ரத்த அழுத்த பாதிப்பினை குறைக்க உதவு கின்றது. 

* நார்ச் சத்து மிகுந்தது. ஒரு கப் வேக வைத்த பச்சை பயறு 40 சதவீதம் அன்றாட தேவைக்கான நார் சத்தினை கொடுக்கின்றது. 

* இதில் உள்ள பாஸ்பரஸ் கால்சியத்துடன் இணைந்து உறுதியான ஆரோக்கியமான எலும்பினை தருகின்றது. 

* ஒரு கப் பாசிப்பயறில் அன்றாட தேவைக்கான 20 சதவீதம் மக்னீசியம் இருக் கின்றது. எலும்பு, பல் இவற்றிற்கு மிகவும் முக்கியமானது. மனச்சோர்வு நீங்கும். வீக்கங்களை குறைக்கின்றது. ஆழ்ந்த தூக்கத்திற்கு உதவுகின்றது. 

* இதில் உள்ள வைட்டமின் பி சத்து உணவில் இருந்து முழு சத்தினை பெற உதவுகின்றது. 

* மூளை, மனநிலை நன்கு இருக்கும். 

* புற்றுநோயினை எதிர்க்கவல்லது. 

* சர்க்கரை நோய் பாதிப்பினை தடுக்க வல்லது. இத்தனை சக்தி கொண்ட பச்சைப் பயறினை தினமும் உணவில் சேர்ப்பது சிறந்தது.

No comments:

Post a Comment