இந்திய எல்லையில் இந்திய சீன ராணுவம் மோதல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 13, 2022

இந்திய எல்லையில் இந்திய சீன ராணுவம் மோதல்

இடாநகர், டிச. 13- அருணாச்சலபிரதேசம் அருகே தவாங் பகுதியில் சீன ராணுவத்தின் அத்துமீறல் முயற் சியை இந்தியா முறியடித்தது.

 லடாக் எல்லை உள்ளிட்ட இந்திய எல்லைகளில் சீனா தொடர்ந்து வாலாட்டி வருகிறது. இந்திய எல்லைப் பகுதிகளில் சீனா கிராமங்களை நவீன வசதிகளுடன் கட்டமைத்து குடியேற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. சீனாவின் இத்தகைய நடவடிக்கைகளால் எல்லைகளில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. இந்தப் பதற்றத்தை தணிக்க பல்வேறு கட்டப் பேச்சு வார்த்தைகளை இருதரப்பும் மேற்கொண்டு வருகிறது. இந்தியா- சீனா ராணுவ தளபதிகளுக்கிடையே இதுவரை 16 சுற்றுக்கும் மேற்பட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று உள்ளன. 

பேச்சுவார்த்தையின் போது பிரச்சினைகளுக்கு பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை உருவாக்கவும் இருதரப்பும் அவ் வப்போதும் ஒப்புக் கொண்டதா கவும் தெரிவிக்கப்பட்டது. 

இந்தநிலையில் அருணாச்சல பிரதேசம் தவாங் பகுதியில் சீன ராணுவம் மீண்டும் தனது வாலை நுழைத்தது. சீன ராணுவத்தின் அத்துமீறலை இந்திய ராணுவம் விரட்டி அடித்து முறியடித்தது. இருதரப்புக்கும் இடையே நடந்த சிறுமோதலில் இரு தரப்பிலும் சில வீரர்களுக்கு காயம் ஏற்பட்ட தாகவும், மோதலுக்கு பிறகு இரு தரப்பு ராணுவத்தினரும் தங்கள் நிலைகளுக்கு திரும்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

லடாக்கின் பேன்காங் ஏரியை மய்யப்படுத்தி சீனா எல்லையில் புதிய நகரத்தையே அந்நாட்டு ராணுவம் நிர்மாணித்து வருகிறது; இதற்காக நவீன கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான செயற்கை கோள் படங் கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment