மோடி கொடி அசைத்து துவக்கி வைத்த வந்தே பாரத் ரயில் குறித்து அதிர்ச்சியான தகவல்கள் நாடாளுமன்றத்தில் வெளியீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 15, 2022

மோடி கொடி அசைத்து துவக்கி வைத்த வந்தே பாரத் ரயில் குறித்து அதிர்ச்சியான தகவல்கள் நாடாளுமன்றத்தில் வெளியீடு

புதுடில்லி, டிச.15  புல்லட் ரயிலைக் கொண்டு வரமுடியாது என்று தெரிந்த பிறகு மக்களை திசை திருப்ப புல்லட் ரயில் போன்றே முன்பகுதியை வடிவமைத்து 'வந்தே பாரத்' என்று பெயர் சூட்டப்பட்ட ரயில்களை நாடுமுழுவதும் மோடி கொடி அசைத்து துவங்கி வைக்கிறார். 

ஆனால் இந்த ரயில்கள் தொடர்ந்து விபத்தில் சிக்கிகொண்ட செய்திகள் வந்துகொண்டே இருக் கிறது, முக்கியமாக ஆடு, மாடுகள்மீது மோதியதால் சேதம், தண்டவாளத்தில் ரயிலின் அடிப்பாகம் உரசுவது, பிரேக் பிடிக்கும் போது பெரும் ஓசை மற்றும் அதிர்வுகளை ஏற்படுத்துவது மேலும் கழி வறைக்குச் செல்லும் தண்ணீர் ரயிலின் உட்பகுதி யில் அருவில் போல் ஒழுகுவது போன்ற புகார்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. 

 இது தொடர்பாக வந்தே பாரத் ரயில் இதுவரை எத்தனை முறை கால்நடைகள் மற்றும் விலங்குகள் மீது மோதியிருக்கிறது? தரமற்ற பொருட்களை உபயோகப்படுத்தி தயாரிக்கப்பட்டதா என்பது குறித்து உதிரிப்பாகங்கள் வழங்கிய நிறுவனங்களி டம் விசாரணை நடைபெற்றதா? என்று நாடாளு மன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது 

இந்தக்கேள்வியை திமுகவைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் ஆ.ராசா எழுப்பி இருந் தார். இதற்கு ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவா பதிலளித்துள்ளார்.

அதில், 2022 ஜூன் மாதம் ஒன்றாம் தேதி முதல் இதுவரை 68 முறை கால்நடைகள் மற்றும் விலங்குகள் மீது மோதியுள்ளதாக தெரிவித்துள் ளார். ரயிலின் அனைத்து உதிரிப்பாகங்களும் தர சோதனைக்கு பின்னரே பயன்பாட்டுக்கு அனு மதிக்கப்பட்டதாகவும் ரயிலின் வேகம் காரணமாக ஏற்படும் காற்றின் அழுத்தத்தை தாங்கும் வகை யில் முகப்பில் ஃபைபர் ரீஇன்போர்ஸ் பிளாஸ்டிக் மூலம் மூக்கு போன்ற பகுதி வடிவமைக்கப்பட்ட தாகவும், மேலும் இதனால் ரயிலின் மீது எதுவும் மோதாமல் தவிர்க்கவும் உதவும் என்று குறிப்பிட் டுள்ளார்.

உதிரிப் பாகங்கள் அனைத்தும் முன்னரே தரநிர்ணயம் செய்யப்பட்டு தயாரிக்கப்பட்டதாக வும், அவ்வாறு தயாரித்த பொருட்கள் தரக்கட்டுப் பாடு சோதனைக்குப் பிறகே வாங்கப்பட்டதால் இதில் தவறு ஏதும் நிகழ வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தார். இருப்பினும் தரமற்ற உதிரிப்பாகங்கள் கொடுத்தது தெரியவந்தால் அந்த நிறுவனங்கள் மீது ஒப்பந்த நிபந்தனைகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment