திருவையாறு தியாகராஜய்யர் உற்சவமும் சென்னை மியூசிக் அகாடமியும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 27, 2022

திருவையாறு தியாகராஜய்யர் உற்சவமும் சென்னை மியூசிக் அகாடமியும்!

சென்னையில் மியூசிக் அகாடமி யின் 96-ஆவது இசை விழாவை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசியிருக்கிறார்.

"மியூசிக் அகாடமி போன்ற இசைக் கலை அமைப்புகளும், மன்றங்களும் தமிழிசைக்கும், தமிழ்ப்பாடல்களுக்கும் முக்கியத்துவம் தரவேண்டும். தமிழ் இலக்கியத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ்ப்பாடல்கள் இருக்கின்றன. அந்தப் பாடல்களும் இதுபோன்ற இசை மன்றங் களில் தவறாது ஒலிக்க வேண்டும். பக்தி இசையாக இருந்தாலும், மெல்லிசை, திரையிசை, ராக் இசை என எதுவாக இருந்தாலும் அது தமிழிசையாக இருக்க வேண்டும்” எனக் கூறியிருக்கிறார்.

தமிழ்நாட்டின் தலைநகரில் நடத்தப் படும் ஒரு இசை விழாவில் 'தமிழிலும் பாடுங்கள்' என ஒரு முதலமைச்சர் வேண்டுகோள் வைக்கவேண்டிய நிலை தான் இன்றும் இருக்கிறது என்று சொன் னால் இதை என்னவென்று சொல்வது?

"எங்கே பார்ப்பனீயம்" என்போர் சிந்தித்துப் பார்க்க வேண்டும். 

75 ஆண்டுகளுக்கு முன்னால் திருவையாறு தியாகராஜர் உற்சவத்தில் தண்டபாணி தேசிகர் தமிழில் பாடினார் என்பதால் மேடை தீட்டாகிவிட்டதாக சொல்லி அடுத்து பாட மறுத்தார் அரியக் குடி ராமானுஜ அய்யங்கார். அதைக் கேள்வியுற்ற முத்தமிழறிஞர் கலைஞர் அதைக்கண்டித்து 'குடிஅரசு' பத்திரிகை யில்  'தீட்டாயிடுத்து!' என தலைப்பிட்டு கட்டுரை எழுதினார் 

"இந்த ஆண்டு திருவையாற்றில் நடைபெற்ற தியாகராஜ அய்யர் உற்ச வத்தில், இசையரசு தண்டபாணி தேசிகர் ஆரம்பத்தில் சித்தி விநாய கனே என்ற பாட்டைப் பாடினாராம். அடுத்தபடி கச்சேரி செய்யவந்த அரியக் குடி ராமானுஜ அய்யங்கார் - தேசிகர் தமிழ் பாடி சன்னி தானத்தைத் தீட்டுப் படுத்திவிட்டார். நான் இந்த மேடையில் பாடமாட்டேன் என்று கூச்சலிட்டுத் தாம்தோம் எனத் தாண்டிக் குதித்தாராம்.

இது இன்று நேற்றல்ல, மனுமுந்தாதா காலத்திலிருந்து தமிழ் பாஷை நீச்ச பாஷை என்றும், பிராமணாள் ஸ்நானம் செய்து விட்டு சாப்பிடும் வரை தமிழ் பேசக்கூடாது என்றும், வீட்டில் விசேஷ காலங்களில் தமிழ் வாயில் நுழையக் கூடாதென்றும் கூறி வந்ததோடு அனுஷ்டானத்திலும் இருந்து வரு கிறது. அகத் திலும், அக்கிரகாரத்திலும் இருந்துவந்த இந்த அகம்பாவம் அய்யர்வாள் உற்ச வத்திலும் புகுந்து விட்டது.

தமிழ்நாட்டிலே - தமிழர்கள் உயி ரோடு வாழும் நாட்டிலே - தமிழர்களு டைய மொழிக்குத் தடையுத்தரவு! ஆங்கில அரசாங்கமல்ல - ஆரிய அர சாங்கத்தின் ஆணை! தமிழ் மொழியில் பாடியதால் மேடை தீட்டாகிவிட்டது என்ற ஆணவப் பேச்சு கிளம்பியதற்குக் காரணம் தமிழர்கள் அடிமைகளாக - அனுமார்களாக வாழ்வதுதான், தமிழர் இனம் சூத்திர இனமாகவும், தமிழர் மொழி தீட்டுப்பட்ட மொழியாகவும் போய்விட்டது.

தியாகராஜர் திருநாளுக்கு நன் கொடை வழங்கும் முட்டாள் தமிழர் களும், தொண்டர்க்குத் தொண்டராம் சிஷ்யகோடிகளின் வரிசையிலுள்ள அழகப்ப செட்டியார் போன்ற விபீஷ ணர்களும் உள்ளவரை அரியக் குடி வர்க்கம் அகம்பாவத்தோடுதான் வாழும்."

('குடிஅரசு', 9.02.1946) என்று எழுதி னார்.

காலம் மாறிக்கொண்டே இருக்கிறது. அவாள் மன நிலையில் மட்டும் கிஞ்சித்தும் மாற்றமில்லை!

- கி.தளபதிராஜ்


No comments:

Post a Comment