புத்தாண்டு சபதங்கள் - செயல் மலர்களா - வெறும் கானல் வேட்டையா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 31, 2022

புத்தாண்டு சபதங்கள் - செயல் மலர்களா - வெறும் கானல் வேட்டையா?

 புத்தாண்டு சபதங்கள் - செயல் மலர்களா - வெறும் கானல் வேட்டையா?

ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் வருகிற புத்தாண்டு முதல் நாள் முதல் நாம் புதிய முடிவுகளை ஏற்று, அதனை அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிக்க முடிவு செய்வது வழமை; வாடிக்கைதான். ஆனால் இறுதிவரை அந்த மாற்றத்தை உறுதியாகப் பின்பற்றாமல், இடையிலேயே உறுதிகளை காற்றில் பறக்க விட்டோ, அல்லது அவைகள் 'நீர் எழுத்துகளே' என்று அலட்சியமாக கைவிட்டு 'பழைய கருப்பனாகவே' மீண்டும் நடந்து கொள்வதும் பெரும்பாலோரிடம் காணப்படும் குறைபாடுதான்!

இந்த ஆண்டு நாம் அப்படி நடந்து கொள்ளக் கூடாது - முடிவினை வாழ்க்கை முறையாகவே  (Way of Life) கடைப்பிடித்தொழுகல் வேண்டும் என்ற பிடிவாதத்துடன் முடிவு எடுக்க வேண்டும்.

"அதிகாலையில் எழுவதன் மூலம் உங்கள் உழைப்பிற்காக - கடமையாற்றுவதற்காக அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரத்தை நீங்கள் கூடுதலாக்கிக் கொள்ள முடியும்" என்று பல சிந்தனையாளர்கள் அறிவுறுத்தியதோடு நிற்காது, செயலுருவில் காலை 5 மணி அல்லது 5.30 மணிக்கு எழுவோர் சங்கத்தையே அமெரிக்கா வில் ஒரு சிறு நகரில் துவக்கி, அது அமெரிக்க நாடு முழுவதும் பரவி "காலை 5.00 மணிக்கு எழுந்து கடமையாற்றி மகிழ்வோர் சங்கம்" பல கிளைகளுடன் ஆல்போல் தழைத்து, அருகுபோல் வேரோடிக் கொண்டிருப்பது நமக்கு வியப் பளிக்கும் வினோதச் செய்தியாகும்!

'Night Birds' என்ற இரவு நேரப் பறவைகளாக நமது பிள்ளைகள், நண்பர்கள் பலரும் மேலை நாட்டிலும் இருப்பதால் தான் -  'Burning the mid night oil -  என்று "இரவு நேர வெளிச்சத்திற்காக எண்ணெய் மூலம் செலவழிப்பது'' என்றொரு சொற்றொடரே உண்டாகி விட்டது!

"அதிகாலை 5 மணி புரட்சி" என்ற தலைப்பில் ஓர் அரிய தமிழாக்க நூலை கடந்த 19.12.2022இல் தஞ்சையில் நமது அன்பிற்குரிய பேராசிரியர் - சிறந்த மொழிபெயர்ப்பாளரும், ஆங்கில மொழி வல்லுநருமான மேனாள் பெரியார் உய்ராய்வு மய்யத்தின் பேராசிரியர் பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தில் தொண்டாற்றிய பழனி அரங்கசாமி தந்தார். படித்தேன் - பயன் அடைந்தேன்; அதைப் பகிர்ந்து மகிழ வேண் டாமா?

"மாபெரும் சாதனையாளர்கள் ஏன் அதி காலையில் விழிக்கிறார்கள்? அதை நீங்களும் எப்படி செய்யலாம்?" என்பதை டேன் லூகா

"என் பெயர் டேலூகா. வாழ்க்கையில் சிறந்த முன்னேற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு மாறு தலுக்கு ஏற்ப, உங்களை நான் வழிப்படுத்த விரும்புகிறேன்" என்று துவங்கும் அவர் மேலும் கூறுகிறார் படியுங்கள்.

"நான் ஒரு தொழில் அதிபர். சிறந்த உற்பத்தியாளர், பணியாளருக்கேற்ற வழிகாட்டி, உங்கள் தந்தையாரைப் போன்ற முதியவர்" என்ற அறிமுகத்துடன் அதிகாலை அய்ந்து மணிக்கு எழுதல் மூலம் எப்படி யெல்லாம் சாதிக்கலாம் என்பதை இந்த 145 பக்க நூல் விளக்குகிறது!

"முதலில் அதிகாலையில் 5 மணிக்கு விழித்தெழ வேண்டும் என்ற உறுதியிருந்தால்தான் அய்ந்து மணிக்கு எழுந்திருக்கும் பழக்கத்தை நடைமுறைப்படுத்த முடியும். உங்களது தனிப் பட்ட, திட்டமிட்ட கருத்துகளுக்கு முன்னுரிமை கொடுத்தால்தான், அதிகாலை விழிப்பினைத் தொடர்ந்து செய்வீர்கள். இத்திட்டத்தில் மாறு தலைப் புகுத்தினால், உங்கள் குறிக்கோளும் மாறி, செயல்திட்டங்களும் மாறியிருக்கும். உங்கள் விருப்பமும் திசை மாறிவிடும்."

உலகப் பிரபலங்களான, டிஸ்னி என்னும் உலகளாவிய தொலைத் தொடர்பு நிறுவன தலைமை நிர்வாகி ராபர்ட் அய்கர்,  காபி நிறுவனத் தலைவர் தி ஹோவர்டு சூல்ட்ஸ், ஆப்பிள் கம்பெனி (டி.வி. செல்போன், கடிகாரம் தயாரிப்பு நிறுவனம்) தலைவர், பங்குதாரர் டிம்குக், பணப் பரிமாற்றம், ஊடகம் மற்றும்  தொலைத் தொடர்பு நிறுவனத் தலைமை அதிகாரி ரிச்சர்ட் பிரான்சன், நூலாசிரியர், பேச்சாளர், தொழிலதிபர் ஆன்டனி ராபின்ஸ்,  ஒன் (own) - அமெரிக்க இணையதளக் கம்பெனி தலைவர் ஒப்ரே வின்பிரே,   அமேசான் தலைவர் ஜெப் பீஜோஸ், டெஸ்லா, ஸ்பேஸ் மற்றும் சோலார் சிட்டி தலைவர் எலன் மஸ்க்,  பெர்க்ஷர் ஹதாவே தலைவர் வாரன் பபெட், மைக்ரோசாப்ட் கம்பெனி நிறுவன தலைவர் பில்கேட்ஸ் முதலியோர் அதிகாலை எழுந்து வளர்ந்தவர்கள்.

‘வைகறையில் துயிலெழு' என்ற நாம் துவக்கப் பள்ளியில் பாடம் படித்து மறந்தோம்!

பிற நாட்டவர்கள் அதன் பலனை அடைந்தனர்.

நம் நாட்டு பட்டியலிலும் ஏராளம் உண்டு.

புதிய உறுதியேற்கிறீர்களா இனி?

No comments:

Post a Comment