'அண்ணாமலைக்கு அரோகரா!' அந்தோ பரிதாபம்!! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 8, 2022

'அண்ணாமலைக்கு அரோகரா!' அந்தோ பரிதாபம்!!

திருவண்ணாமலை தீப விழாவுக்கு சென்று திரும்பியபோது விபத்து : 6 பக்தர்கள் உடல் நசுங்கி சாவு

செங்கல்பட்டு, டிச.8 செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் , திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 15க்கும் மேற்பட்டவர்களுடன் டாடா ஏஸ் வாகனம் ஜானகிபுரம் என்ற இடத்தில் சென்றுக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக முன்னால் சென்று கொண்டிருந்த, ஈச்சர் லாரி மீது மோதியது. முன்னால் சென்ற லாரி மீது டாடா ஏஸ் மோதிய நிலையில், பின்னால் வந்த கனகர வாகனம் டாடா ஏஸ் மீது பயங்கரமாக மோதியது.

இரண்டு வாகனங்களுக்கு இடையே சிக்கிய டாடா ஏஸ் வாகனம் அப்பளம் போல் நொறுங்கியது.   தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியை துரிதப்படுத்தினர். இதில், பயணம் செய்த 6 பேர் ரத்த வெள்ளத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 5 பேர் படுகாயம் அடைந்துள் ளனர். படுகாயம் அடைந்த 5 பேரையும், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். 

 மேலும் உயிரிழந்த 6 பேரின் உடல்களும் செங்கல்பட்டு அரசு மருத் துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசார ணையில் , திருவண்ணாமலை அண்ணா மலையார் கார்த்திகை தீப திருவிழாவிற்கு,  சென்றுவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்த போது, இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. அதிகாலை நடந்த விபத்தால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதி காலையில் நடைபெற்ற இந்த  விபத்தில் உயிரிழந்த ஆறு பேரும், சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் பகுதியைச் சேர்ந்த  சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. சந்திரசேகர்( 70), தாமோதரன் (28), சசிகுமார் ( 35 ), சேகர் (55), ஏழுமலை (65), கோகுல் (33) ஆறு பேரும் உயிரிழந்தனர். ராமமூர்த்தி ( 35), சதீஷ்குமார் ( 27), ரவி ( 26), சேகர் ( 37) ,அய்யனார் ( 34), ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து முதற்கட்ட விசாரணையை தொடங்கி யுள்ளனர் இதுதொடர்பாக வாகன ஓட்டுநர் பாலமுருகன் என்பவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். இந்த விபத்து எவ்வாறு ஏற்பட்டது , என விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை தீப திருவிழாவுக்கு சென்ற வாலிபர் விபத்தில் பலி

சென்னை _ தாம்பரம் சேலையூர் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 22). இவர்   திருவண்ணாமலையில் நடைபெற்ற தீபத்திரு விழாவுக்காக இரு சக்கர வாகனத்தில் அவரது நண்பர் நந்தகுமாருடன் திருவண்ணாமலைக்கு சென்று கொண்டிருந்தார். இவர்கள் செஞ்சி அருகே ஆலம்பூண்டி பகுதியில் சென்றபோது எதிரே வந்த முதியவர் மீது மோதாமல் இருக்க திடீர் 'பிரேக்' போட்ட போது நிலை தடுமாறி தவறி விழுந்ததில் வாலிபர் நந்தகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். மேலும் வாகனம் ஓட்டிச் சென்ற மோகன் தலைக்கவசம் போட்டிருந்ததால் சிறு காயங்களுடன் செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து  காவல்துறையினர் உடலைக்  கைப்பற்றி விசாரணை செய்து வருகிறார்கள்.


No comments:

Post a Comment