Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
51 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட பெண்ணை குடும்பத்துடன் சேர்த்த அறிவியல்
December 08, 2022 • Viduthalai

குழந்தையாக இருந்தபோது கடத்தப்பட்ட பெண் 51 ஆண்டுகளுக்குப் பிறகு தனது குடும்பத்துடன் இணைந்துள்ளார். டிஎன்ஏ பரிசோதனை மூலம் இது சாத்தியமாகி இருக் கிறது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத் தைச் சேர்ந்த மெலிசா ஹைஸ்மித்துக்கு இப் போது வயது 53.  1971-ஆம் ஆண்டு அவர் 22 மாத குழந்தையாக இருந்தபோது ஃபோர்ட் வொர்த் நகரில்  உள்ள அவரது வீட்டில் இருந்து குழந்தை பராமரிப்பாளரால் கடத்தப்பட்டார்.

பல ஆண்டுகளாக குடும்பத்தினர் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. கடைசியாக ஓர் இணையதள நிறுவனத்துக்கு வந்த டிஎன்ஏ மாதிரிகள் பொருந்திப் போனபோதுதான் அவர் குடும்பத்துடன் சேர முடிந்தது. இந்த இணைய தளம் டிஎன்ஏ பரிசோதனைகளைச் செய்வது டன் மரபு ரீதியிலான குடும்ப வரைபடத்தையும் உருவாக்குவதற்கு உதவுகிறது. நீண்ட காலமாக "மெலனி" என்று அறியப்பட்டு வந்த, மெலிசா ஹைஸ்மித் இப்போது தனது பழைய பெய ரையே வைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளார். 

1971-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஹைஸ் மித்தின் கடத்தல் நடந்தது. அவரது தாயார் ஆல்டா அப்பாடெங்கோ, உள்ளூர் செய்தித் தாள் விளம்பரம் மூலமாக குழந்தையை பராமரிப்பதற்கு ஒரு பெண்ணை நியமித்தார். தனது வீட்டில் வைத்து மெலிசாவை பராமரிப் பதாக கூறிய அந்தப் பெண்தான் அவரைக் கடத்தியிருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படு கிறது.  குழந்தையை வீட்டுக்குக் கொண்டு சென்ற அந்தப் பெண் அத்துடன் காணாமல் போனார். மெலிசாவின் குடும்பம் அவரைத் தேடும் பணியைத் தொடங்கியது. பல பத் தாண்டுகள் கடந்தும் தேடுவதை மாத்திரம் விட்டுவிடவில்லை. காவல்துறையும், ஒன்றிய அரசின் அதிகாரிகளும் அவர்களுக்கு உதவி செய்து வந்தார்கள்.  

கடந்த செப்டம்பரில் மெலிசா, தெற்கு கரோ லினா மாநிலத்தில் இருப்பதாக அவரது குடும் பத்துக்கு ஒரு துப்புக் கிடைத்தது.  ஏற்கெனவே 50 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது ஹைஸ்மித்துக்கு தெரியவே தெரியாது. குடும்பத்தினர் அவரை ஃபேஸ்புக் மூலம் முதலில் தொடர்பு கொண்ட போது, அது ஏதோ மோசடி என்றுதான் அவர் கருதினார். கடந்த நவம்பர் 6-ஆம் தேதிதான் அந்த முடிச்சு அவிழ்ந்தது. 23 AndMe என்ற இணையதளத்தில் இருந்த டிஎன்ஏ பரிசோதனை முடிவுகள் ஹைஸ்மித்தின் குழந்தைகளுக்கும் மெலிசா ஹைஸ்மித்தை தேடிக்கொண்டிருந்த குடும்பத்தினருக்கும் மரபு ரீதியான தொடர்பு இருப்பதை உறுதி செய்தது. 

மரபணு நிபுணர் ஒருவர் இந்த சந்தேகத்தை விலக்குவதற்கு உதவி செய்திருக்கிறார்.எங்கள் குழந்தையைக் கண்டுபிடித்தது டிஎன்ஏவால் மட்டுமே சாத்தியமாகி இருக்கிறது. காவல்துறை, எஃப்பிஅய் போன்றவற்றால் அல்ல. குடும்பத் தின் தனிப்பட்ட புலனாய்வுகளும்கூட உதவ வில்லை” என்று மெலனியின் குடும்பத்தினர் தங்களது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளனர். கூடுதலாக அதிகாரப்பூர்வமான, சட்டப்படியான டிஎன்ஏ பரிசோதனை செய்திருப்பதாகவும், முடிவுகளுக்காகக் காத்திருப்பதாகவும் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஹைஸ்மித்தும் அவரது குடும்பத்தினரும் நவம்பர் 26-ஆம் தேதி நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டார்கள்.  "இது மிகப்பெரியது, அதே நேரத்தில் அற்புதமானது" என்று பிபிசியின் அமெரிக்க கூட்டாளி நிறுவனமான சிபிஎஸ்ஸி டம் ஹைஸ்மித் கூறினார். ஹைஸ்மித்தை பெற் றெடுத்த தாயான அப்பாடெங்கோ இவ்வளவு காலத்துக்குப் பிறகு குடும்பம் ஒன்று சேர்ந் திருப்பதை தம்மால் நம்ப முடியவில்லை என்று கூறியிருக்கிறார்.  "நான் அவளை மீண்டும் பார்க்க மாட்டேன் என்றுதான் நினைத்திருந் தேன்" என்று அவர் தெரிவித்துள்ளார். 

ஹைஸ்மித் குழந்தையாக இருந்தபோது அவரை யார் கடத்திச் சென்றார் என்ற எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. எனினும் தன்னை இத்தனை ஆண்டுகளாக வளர்த்தவ ருக்கு தான் கடத்தப்பட்டவள் என்பது தெரியும் என்று ஹைஸ்மித் தெரிவித்தார். நீண்ட காலமாகிவிட்டதால் கடத்தல் தொடர்பான சட்டவரம்புகள் காலாவதியாகி விட்டாலும் இந்த விவகாரத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பதை தொடர்ந்து விசாரிக்கப் போவதாக ஃபோர்ட் வொர்த் காவல்துறை கூறியிருக்கிறது. இழந்துவிட்ட காலத்தை மீட்கும் வகையிலான முயற்சிகளை மேற்கொள்ளப் போவதாகவும்,  ஒருவருக்கொருவர் அறிந்து கொண்டு வருவதாகவும் குடும்பத்தினர் கூறு கிறார்கள். 

எடுத்துக்காட்டாக ஹைஸ்மித் தனது திருமணத்தை இப்போதைய கணவருடன் மீண்டும் நடத்துவதற்கு திட்டமிட்டிருப்பதாகவும் அப்போது அவருடைய தந்தை மணப் பெண்ணை அழைத்து வரும் பழக்கத்தை செய் யலாம் என்றும் ஹைஸ்மித்தின் சகோதரிகள் வாசிங்டன் போஸ்ட்டிடம் கூறியுள்ளார்கள். "இப்போது என் இதயம் நிரம்பியுள்ளது, உணர்ச்சிகளால் பொங்குகிறது. நான் மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன்" என்று சிபிஎஸ்சிடம் ஹைஸ்மித்  கூறினார்.

Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
''அரசமைப்புச் சட்டமும் - ஆளுநரின் அதிகார எல்லையும்'' தி.மு.க. சட்டக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம்!
January 21, 2023 • Viduthalai
Image
முதலமைச்சர் மோடியைப் பார்த்து, பிரதமர் வாஜ்பேயி ''ராஜதர்மத்தைக் காப்பாற்றுங்கள்'' என்று சொல்லவேண்டிய அவசியம் என்ன?
January 27, 2023 • Viduthalai
Image
பெரியார் நினைவிடத்தில் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் மரியாதை - தமிழர் தலைவர் வாழ்த்து
January 23, 2023 • Viduthalai
Image
ஒரத்தநாட்டில் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி
January 22, 2023 • Viduthalai
ஆசிரியர் விடையளிக்கிறார்
January 21, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn