ஜனவரி 4ஆம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 21, 2022

ஜனவரி 4ஆம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்

சென்னை, டிச 21. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவை கூட்டம் ஜனவரி மாதம் 4ஆம் தேதி நடைபெறுகிறது. 

தமிழ்நாட்டில் தி.மு.க. அரசு 2021ஆம் ஆண்டு மே மாதம் பொறுப்பேற்றது. அதைத் தொடர்ந்து பலமுறை அமைச்ச ரவை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. அமைச்சரவையில் இதுவரை இரண்டு மாற்றங்கள் செய்யப் பட்டுள்ளன. ஆட்சி அமைந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக அமைச்சரவையில் புதிய அமைச்ச ருக்கு இடம் அளிக்கப்பட்டது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அமைச்சரவை கூட்டம் வரும் ஜனவரி மாதம் 4ஆம் தேதி காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் கூட்டப்பட் டுள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டப்படும் இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்பார்கள். ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் ஆளுநர் உரையுடன் சட்டசபை கூட்டத்தொடர் தொடங் குவது வழக்கம். அதன்படி வரும் ஜனவரி மாதம் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. முதல் நாள் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுவார். ஆளுநர் ஆற்றும் உரையில் இடம் பெறும் கருத்துகள், திட்டங்கள் தொடர்பான அங்கீகாரத்தை, ஜனவரி 4ஆம்தேதி கூடும் அமைச்சரவை வழங்கும் என்று கூறப்படுகிறது.


No comments:

Post a Comment