37ஆவது தேசிய அளவிலான தேகுவாண்டோ போட்டிகள் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள கந்துபாய் தேசிய அரங்கத்தில் டிசம்பர் 24, 25 ஆகிய நாள்களில் நடைபெற்றது. 300க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் குஜராத், தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, மகாராட்டிரா, உத்தரப்பிரதேசம், ஒரிசா, மேற்கு வங்காளம், சண்டிகர் உத்தரகாண்ட், ஜம்மு காஷ்மீர், அரியானா, டையூ உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து பங்கேற்றனர்.
இந்திய தேகுவாண்டோ சங்கத் தலைவர் கிராண்ட் மாஸ்டர் பி.வி.ரமணய்யா, சீனியர் மாஸ்டர் டி.வி.வி.பிரசாத், மாஸ்டர் ஜி. பாலகிருஷ் ணன் ஆகியோர் மேற்பார்வையில் போட்டிகள் நடைபெற்றன.
தமிழ்நாட்டிலிருந்து மாஸ்டர் ஜி.பாலகிருஷ் ணன் தலைமையில் போட்டியாளர்களும், பயிற்று நர்களும் பங்கேற்றனர்.
காஞ்சிபுரத்திலிருந்து 10 போட்டியாளர்களும், பயிற்றுநர்களும் முனைவர் பா. கதிரவன் தலை மையில் பங்கேற்றனர்.
ஜி. கபிலன் ஒரு வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கமும், ராம்கிஷன் ஒரு வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கமும், சஞ்சித் இரண்டு வெண்கலப் பதக்கமும், விக்னேஷ், நந்தகுமார், லோகேஷ், கவுதம் ஆகியோர் தலா ஒரு வெண்கலப் பதக்கமும் பெற்றனர். 10 பேர் பங்கேற்று 10 பதக்கங்களை வென்றனர்.
மணிகண்டன், அறிவரசி, பரத், அஜித் குமார், சந்தோஷ் ஆகியோர் நடுவர்களாகப் பணியாற் றினர்.
ஒட்டுமொத்தக் கோப்பையை போட்டியை நடத்திய குஜராத் அணி வென்றது. போட்டியை குஜராத் மாநில பொதுச் செயலாளர் அனில் சோலங்கி ஒருங்கிணைத்து நடத்தினார்.