பாபர் மசூதி வழக்கு : 32 பேர் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ஏ.அய்.எம்.பி.எல்.பி. முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 9, 2022

பாபர் மசூதி வழக்கு : 32 பேர் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ஏ.அய்.எம்.பி.எல்.பி. முடிவு

புதுடில்லி, டிச.9 பாபர் மசூதி இடிப்பு வழக்கில் 32 பேர் விடுதலை செய்யப் பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய செயற்குழு உறுப்பினரும் செய்தித் தொடர்பாளருமான சையத் காசில் ரசூல் இலியாஸ் கூறினார்.

1992-ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப் பட்ட 32 பேரையும் சி.பிஅய். சிறப்பு நீதிமன்றம் விடுவித்ததை எதிர்த்து அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் (ஏ.அய்.எம்.பி.எல்.பி) உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளது என்று வாரியத்தின் அலுவலக உறுப்பினர்  தெரிவித்தார். இந்த வழக்கில் மேனாள் துணைப் பிரதமர் எல்.கே. அத்வானி உட்பட குற்றம் சாட்டப் பட்டவர்களை செப்டம்பர் 30, 2020-இல் சிபிஅய் நீதிமன்றம் விடுவித்தது. இதைத் தொடர்ந்து அயோத்தியைச் சேர்ந்த ஹாஜி மஹ்பூப் மற்றும் சையத் அக்லக் ஆகியோர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தனர்.

அலகாபாத் உயர் நீதிமன் றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த ஆண்டு நவம்பர் 9-ஆம் தேதி மறுசீராய்வு மனுவை நிராகரித்தது. மேலும், மேல் முறையீடு செய்தவர்கள் வழக்கில் பாதிக்கப்படாததால் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய உரிமை இல்லை என்று கூறினர். அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய செயற்குழு உறுப் பினரும், வாரியத்தின் செய்தித் தொடர்பாளருமான சையத் காசில் ரசூல் இலியாஸ், 32 பேரின் விடுதலைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாட வாரியம் முடிவு செய்துள்ளதாகக் கூறினார். பாபர் மசூதி இடிப்பு குற்றச் செயல் என் பதை அயோத்தி தீர்ப்பில் உச்ச நீதிமன்றமே ஏற்றுக் கொண்டுள்ளதால், நாங்கள் நிச்சயமாக உச்சநீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்று சையத் காசில் ரசூல் இலியாஸ் பி.டி.அய் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அயோத்தி தீர்ப்பை வழங்கிய 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, பாபர் மசூதி இடிப்பு சட்டத்தின் ஆட்சியை கடுமையாக மீறுவதாக உள்ளது என்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இன்னும் சட்டத்தின் பிடிக்கு வெளியே இருக் கிறார்கள் என்று கூறியுள்ளது என்று அவர் கூறினார். இந்த வழக்கில் மேல்முறையீடு செய்த ஹாஜி மஹ் பூப் மற்றும் சையத் அக்லக் ஆகியோர் சி.பி.அய். சாட்சிகள் என்றும், அங்கே கூடியிருந்த ஒரு கும்பலில் குற்றம் சாட்டப்பட்டவர்களால் 1992 டிசம்பர் 6 ஆம் தேதி அவர்களது வீடுகள் தாக்கப்பட்டு எரிக்கப்பட்ட தாகவும் அவர் கூறினார். மஹ் பூப்பும் அக்லக்கும் பாபர் மசூதிக்கு அருகா மையில் வசித்து வந் தனர்.சி.பி.அய். நீதி மன்றத் தீர்ப்பை எதிர்த்து மஹ்பூப் மற்றும் அக்லக் ஆகியோர் 2021 ஜனவரி 8ஆ-ம் தேதி உயர்நீதிமன் றத்தில் மேல் முறையீடு செய்தனர்.

இந்த மனுவை நிராகரித்த உயர் நீதிமன்றம், “இந்த வழக்கில் வாதங் களின் அடிப்படையில், வழக்கின் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளின் கீழ், குற்ற விசாரணை நடைமுறைச் சட்டப் பிரிவு 372 கீழ், மேல் முறையீட்டு மனுதாரர்களின் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட உடனடி குற்றவியல் மேல்முறை யீட்டு மனு செய்பவர்களின் வீடு, இருப்பிடம் அந்த இடத்தில் இல் லாத காரணத்தால் தள்ளுபடி செய்யப்பட வேண்டும். செப்டம்பர், 30, 2020 தேதியிட்ட தீர்ப்பு, உத் தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்பவர்களின் இருப் பிடம் அந்த இடத்தில் இல்லாத காரணத்தால் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்பதால் தள்ளுபடி செய்யப்படு கிறது'' என்று உத்தர விட்டது.

 

No comments:

Post a Comment