பெரியார் மணியம்மை நிகர் நிலை பல்கலைக் கழகத்தின் 21ஆவது தமிழ் இணைய மாநாடு வேந்தர் டாக்டர் கி. வீரமணி உரையாற்றினார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 17, 2022

பெரியார் மணியம்மை நிகர் நிலை பல்கலைக் கழகத்தின் 21ஆவது தமிழ் இணைய மாநாடு வேந்தர் டாக்டர் கி. வீரமணி உரையாற்றினார்

தஞ்சை, டிச.17 தமிழ்ப் பல்கலைக்கழகம், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் மற்றும் இந்திய மொழிகள் நிறுவனம் (மைசூர்) உத்தமம் இணைந்து நடந்தும் 21ஆவது தமிழ் இணைய மாநாட்டின் இரண்டாவது நிகழ்வு 16.12.2022 அன்று காலை  பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் துவங்கியது. 

இந்த இனிய விழாவில் நான்காவது அமர்வில் 'தந்தை பெரியாரும் தமிழ் எழுத்துச் சீர்திருத்தமும்' என்ற தலைப்பில்  பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றும் போது  தந்தை பெரியார் அவர்கள் தமிழ் மொழிக்கு எண்ணற்ற தொண்டுகள் செய்தவர் கல்வி நிலையங்களுக்கே செல்லாமல் ஒரு பூரண பகுத்தறிவுவாதியாக இருந்து கொண்டு சமூக சீர்திருத்த கருத்துகள் மொழி பண்பாட்டு கருத்துக்களை தமிழ் மொழிக்கு தொண்டு செய்தார்.  மனிதனுக்கு மூன்று பற்றுகள் அதாவது அறிவுப் பற்று, மனிதப் பற்று, வளர்ச்சிப் பற்று தேவை என்று கூறினார். 

1935ஆம் ஆண்டு தமிழ் எழுத்துச் சீர்த் திருத்தங்களை பழைமையான கருத்துக்களை புறந்தள்ளி புதுமையான கருத்துக்களை ஏற்றுக் கொண்டு மொழி சிந்தனையை வளர்க்க வேண்டும். மொழி என்பது ஒரு கருவி என்று தந்தை பெரியார் குறிப்பிட்டார். 

அது  ஒரு போர்க் கருவியாக விளங்க வேண்டும் என்றும் கூறினார். காலத்திற்கேற்ப  வேகப்படுத்த வேண்டும். பண்பாட்டு படை யெடுப்புகள் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் முன்னேற வேண்டும் என்று தந்த பெரியார் அவர்கள்  1938ஆம் ஆண்டின் தமிழ் வாழ்க, ஹிந்தி ஒழிக என்று முழக்கம் மிட்டார். 

தந்தை பெரியாரின் மொழி சீர்திருத்தம் 1935 முதல் 1980 வரை மாற்றங்களின் வளர்ச்சி சிந்தனை ஓங்க வேண்டும். என்று வளர்ச்சியின்  அடிப் படையில் புதியன புகுதலும் பழையன கழிதலும் என்று சிந்தனைகளை அறிவுறுத்தி ஏற்றமடைய மாற்றம் வேண்டும் என்று கருத்துரை வழங்கினார். 


No comments:

Post a Comment