அமெரிக்காவில் 2020 முதல் இதுவரை கரோனா பாதிப்பு 10 கோடியை தாண்டியது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 22, 2022

அமெரிக்காவில் 2020 முதல் இதுவரை கரோனா பாதிப்பு 10 கோடியை தாண்டியது

வாசிங்டன், டிச.22- அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப் கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆய்வறிக்கை யில் கூறியிருப்பதாவது: கரோனா தொற்று கடந்த 2020ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஏற்பட்டு உலகம் முழுவதும் பரவியது. அமெரிக்காவில் 2020 ஆம் ஆண்டு முதல் நேற்றுவரை (2022, டிசம்பர்) கரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10 கோடியே 3 ஆயிரத்து 814. இது உலகிலேயே மிக அதிகம். மொத்த உயிரிழப்பு 10,88,236. இதுவும் உலகிலேயே மிக அதிகம்.

அமெரிக்க மாகாணங்களில் அதிக அளவாக கலிபோர்னியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு கோடியே 16 லட்சம். 2ஆவது இடத்தில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் 81 லட்சம், 3ஆவது இடத்தில் உள்ள புளோரிடாவில் 73 லட்சம், நியூயார்க்கில் 65 லட்சம் பேருக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை உலகளவில் 15 சதவிகிதமாகவும், உயிரிழப்பு எண் ணிக்கை உலகளவில் 16 சதவீதமாகவும் உள்ளன.

கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்காவின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 5 கோடியை எட்டியது. கடந்த ஜனவரி 9ஆம் தேதி 6 கோடியையும், ஜனவரி 21 இல் 7 கோடியையும், மார்ச் 29 இல் 8 கோடியையும், ஜூலை 21 இல் 9 கோடி யையும், தற்போது 10 கோடியையும் கடந்துள்ளது.

No comments:

Post a Comment