நியூசிலாந்தில் சிறப்பான அறிவிப்பு 2008ஆம் ஆண்டுகக்குப் பிறகு பிறந்தவர்களுக்கு சிகரெட் விற்கத் தடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 16, 2022

நியூசிலாந்தில் சிறப்பான அறிவிப்பு 2008ஆம் ஆண்டுகக்குப் பிறகு பிறந்தவர்களுக்கு சிகரெட் விற்கத் தடை

வெலிங்டன், டிச. 16- நியூசிலாந்து நாட்டை 2025ஆம் ஆண் டுக்குள் புகைப்பிடிக்காத நாடாக மாற்ற அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா தலை மையிலான அரசு பல் வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

அதன் ஓர் அங்கமாக நியூசிலாந்து அண்மை யில் நாடாளுமன்றத்தில் புதிய சட்டத்தை அறிமு கப்படுத்தியுள்ளது. அந்தப் புதிய சட்டம்படி ஜனவரி 1, 2009 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்த எவருக்கும் புகை யிலைப் பொருட்கள் விற்க முடியாது. இதன் படி, சிகரெட் வாங்குவ தற்கான குறைந்தபட்ச வயதை நியூசிலாந்து அதிகரிக்கிறது .அதாவது, நியூசிலாந்தில் சிகரெட் வாங்க அந்த நபர் 63 வயது அல்லது அந்த வயதைத் தாண்டிய நபராக இருக்க வேண்டும்.

இதுகுறித்து நியூசி லாந்தின் சுகாதாரத் துறை  துணை அமைச்சர் ஆயிஷா கூறும்போது, “பாதி மக்களைக் கொல்லும் ஒரு பொருளை விற்க அனுமதிப்பதற்கு எந்த நல்ல காரணமும் இங்கு இல்லை. இந்தச் சட் டத்தை நிறைவேற்றும் போது, ​​எதிர்காலத்தில் நியூசிலாந்தில் புகைப் பிடிக்கும் பழக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருவோம் என்று நான் உங்களுக்கு உறுதியாக சொல்ல முடியும்” என்றார்.

ஆனால், இந்தச் சட்டத்தை நியூசிலாந்தின் எதிர்க்கட்சியினர் கடு மையாக விமர்சித்துள்ள னர். இந்தச் சட்டத்தால் சிறு வணிகர்கள் கடுமை யாக பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர்கள் கூறி யுள்ளனர்.

இதுகுறித்து எதிர்க் கட்சியான ஏடிசியின் துணைத் தலைவர் ப்ரூக் வாப் வெல்டன் கூறும் போது, "இந்தச் சட் டத்தை நாங்கள் எதிர்க் கிறோம், 

ஏனெனில் இது ஒரு மோசமான சட்டம். இது நியூசிலாந்து மக்களுக்கு உகந்ததாக இருக்காது" என்றார்.

No comments:

Post a Comment