எல்லைப் பிரச்சினை நாடாளுமன்ற வளாக காந்தி சிலை முன்பு 12 எதிர்க்கட்சிகள் கூட்டாக ஆர்ப்பாட்டம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 22, 2022

எல்லைப் பிரச்சினை நாடாளுமன்ற வளாக காந்தி சிலை முன்பு 12 எதிர்க்கட்சிகள் கூட்டாக ஆர்ப்பாட்டம்!

புதுடில்லி,டிச.22- சீன உடனான எல்லைப் பிரச் சினை குறித்து, நாடாளு மன்றத்தில் விவாதம் நடத்த அனுமதி மறுக்கும் ஒன்றிய பாஜக அரசைக்  கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்திலுள்ள காந்தி சிலை முன்பு எதிர்க் கட்சிகள் போராட்டம் நடத்தின. காங்கிரஸ் கட் சியின் மேனாள் தலைவர் சோனியா காந்தி தலை மையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், காங் கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, விடுதலைச் சிறுத்தைகள், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 12 கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பி னர்கள் கலந்து கொண் டனர். அருணாச்சலப் பிரதேச எல்லையில், தவாங் பகுதியில் சீனாவின் ஊடுருவல் முயற்சிகள் குறித்து, நாடாளுமன்றத் தின் இரு அவைகளிலும் விவாதம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, எதிர்க்கட் சிகள் கடந்த ஒரு வாரத் திற்கும் மேலாக போராட் டம் நடத்தி வருகின்றனர். ஒத்திவைப்புத் தீர்மா னங்களையும் அளித்து வருகின்றனர். எனினும், மோடி அரசு  விவாதம் நடத்துவதற்கு தயா ரில்லை. 

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்-கின் விளக்க அறிக் கையோடு சரி, அதன்பிறகு, அது ஓடி ஒளியும் வேலை யில் ஈடுபட்டு வருகிறது. இதனைக் கண்டித்து, எதிர்க்கட்சிகள் நாடா ளுமன்றத்தின் இரு அவை களையும் வெளிநடப்புச் செய்து தொடர் போராட் டம் நடத்தி வருகின்றனர். 

இதனால் அவை நட வடிக்கைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், நேற்றும் நாடாளுமன்றம் கூடிய போது, சீனாவின் ஊடு ருவல் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க் கட்சி உறுப்பினர்கள் வலி யுறுத்தினர். 

மக்களவை நேற்று காலை 11 மணிக்குக் கூடி யதும், இந்திய - சீன எல்லை விவகாரம் குறித்து விவா தித்தே ஆக வேண்டும் என வலியுறுத்தி காங்  கிரஸ்  உறுப்பினர்கள் அமளி யில் ஈடுபட்ட னர். இதனால், கூடிய உட னேயே மக்களவையை தலைவர் ஓம்  பிர்லா ஒத்தி வைத்தார். இதே போல மாநிலங்களவையும் ஒத்தி வைக்கப்பட்டது.  அதைத் தொடர்ந்து, அவைகளி லிருந்து வெளியே வந்த எதிர்க் கட்சி உறுப்பி னர்கள், நாடாளுமன்ற வளாகத் திலுள்ள காந்தி சிலை முன்பு, “சீனாவின் ஊடு ருவல் குறித்து நாடா ளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும்” என்ற கோரிக்கையை முன் வைத்து, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தலைமையில் ஆர்ப் பாட்டம் நடத்தினர்.

இதில், காங்கிரஸ், திமுக,சிபிஅய், சிபிஅய்(எம்), ராஷ்ட்ரிய ஜனதா தளம், அய்க்கிய ஜனதாதளம், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட 12  கட்சிகளின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

மோடி அரசு ஜனநாயகத்தை அவமதிக்கிறது 

நேற்று காலை, நாடா ளுமன்றம் கூடுவதற்கு முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழு கூட்டம் சோனியா காந்தி தலைமையில் நடை பெற்றது. இதில் அக் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை குழு தலைவருமான மல்லிகார் ஜூன கார்கே, மக்களவைக் குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட் டோர் கலந்து கொண் டனர். நாடாளுமன்ற மய்ய மண்டபத்தில் நடந்த இந்த கூட்டத்தில் ஒன்றிய அரசுக்கு எதிரான வியூகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. 

கூட்டத்தில் சோனியா காந்தி பேசுகையில், 

சீனாவின் ஊடுருவல் தொடர்பாக நாடாளு மன்றத்தில் விவாதிக்க மறுத்து ஒன்றிய அரசு அடம்பிடித்து வருகிறது. எல்லையில் என்னதான் நிலைமை என்கிற உண் மையை நாடும், நாட்டு மக்களும் அறிந்து கொள்ள முடியாத நிலைமை இருக் கிறது. நமது எல்லையில் ஊடுருவும் சீனாவுக்கு பொருளாதார வகையில் தக்க பதிலடியைத் தர ஏன் ஒன்றிய அரசு தயங்கு கிறது? நாடாளுமன்றத் தில் ஒன்றிய பாஜக அரசு விவாதம் நடத்த மறுப்பது என்பது ஜனநாயகத்தை அவமதிக்கும் செயல் என்றார்.


No comments:

Post a Comment