உயர் வகுப்பினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு: உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் தாக்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 6, 2022

உயர் வகுப்பினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு: உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் தாக்கல்

புதுடில்லி, டிச. 6- உயர் வகுப்பினருக்கான 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கியது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எஸ்சி, எஸ்டி (தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர்) மற்றும் ஓபிசி அல்லாத பொருளாதாரத்தில் நலிவடைந்த பொது பிரிவினருக்கு பிரத்யேகமாக கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் வகையில் ஒன்றிய அரசு கொண்டு வந்த 103ஆவது அரசியல் சாசன சட்ட திருத்த மசோதா கடந்த 2019ஆம் ஆண்டு ஜன.8ஆம் தேதி மக்களவை யிலும் மறுநாள் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.

அப்போதே இந்த இடஒதுக்கீட்டுக்கு தமிழ்நாட்டில் பலத்த எதிர்ப்பு கிளம் பியது. ஒன்றிய அரசின் இந்த சட்ட திருத்தம் செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி, மனிதநேய மக்கள் கட்சி சார்பில் பேராசிரியர் ஜவாஹிருல்லா, விடு தலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர், தனி யார் அமைப்புகள், தனி நபர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடர்ந் திருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, 10 விழுக்காடு இடஒதுக்கீடு செல்லும் என தீர்ப்பளித்தது.

இந்நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது குறித்து தமிழ் நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்தினார். அதன்படி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி சார்பில் திமுக மூத்த வழக்குரை ஞரும் மாநிலங்களவை உறுப்பினரு மாகிய பி.வில்சன் உச்சநீதிமன்றத்தில் நேற்று (5.12.2022) சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தார்.

அதில், இந்த 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அமல்படுத்தினால் தமிழ் நாட்டில் இடஒதுக்கீடு என்பது 79 விழுக்காடாகி விடும். அதுவே மற்ற மாநிலங்களில் 60 விழுக்காடாகி விடும். அப்படி இடஒதுக்கீடு வழங்கினால் சமூக நீதிக்கும், உச்ச நீதிமன்ற தீர்ப்புக் கும் எதிராகி விடும். இந்த இடஒதுக் கீட்டை அமல்படுத்தினால் பிற சமூகத் தைச் சேர்ந்த திறமைசாலி மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவர். ஆண் டுக்கு ரூ.8 லட்சத்துக்கு குறைவான வருமானத்தை பெறுபவர்கள் பொரு ளாதாரத்தில் பின்தங்கியவர்கள் என இந்த சட்டம் வரையறை செய்கிறது. இந்தியாவில் 97 விழுக்காட்டினரின் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு கீழ் உள்ளது என்ற நிலையில் இந்த இடஒதுக்கீடு மேலும் குழப்பத்தை ஏற்படுத்தும். இந்த சட்டத் திருத்தம் அரசமைப்பு சாசனப் பிரிவு 14-அய் கேள்விக்குறியாக்கி உள்ளது. இந்திரா சாவ்ஹ்னி வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புக்கு விரோதமானது.

சமூகத்தில் பொருளாதாரத்தில் நலி வடைந்த பொது பிரிவினரைக் காட் டிலும், பட்டியலினத்தவர்கள், பழங் குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப் பட்ட வகுப்பினர் இன்னும் மோசமான நலிவுற்ற நிலையில் உள்ளனர். இதை உச்ச நீதிமன்றம் கருத்தில்கொள்ள மறந்துவிட்டது.

10 விழுக்காடு இடஒதுக்கீட்டால் இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவர். இந்த சீராய்வு மனுவை நீதிபதிகளின் அறையில் நடத்தாமல் நீதிமன்ற அறையில் நடத்த வேண்டும். குறிப்பாக எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினரை இந்த 10 விழுக்காடு இடஒதுக்கீட்டுக்குள் கொண்டுவராமல் புறம்தள்ளியிருப்பது சமத்துவ கட்டமைப்புக்கும் அரசியல் சாசனத்துக்கும் எதிரானது. ஜாதியை ஒழிப்பதற்காக இடஒதுக்கீட்டை பலி கடாவாக்கக் கூடாது. உச்ச நீதிமன்றத் தின் தீர்ப்பில் ஜாதியை ஒழிக்க வேண்டு மென்றால் இடஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும் என்ற கூற்றை திரும்பப்பெற வேண்டும். அத்துடன் இந்த 10 விழுக் காடு இடஒதுக்கீடு செல்லாது என அறி விக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment