காரைக்குடி முத்துப்பட்டினம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெரியார் 1000 வினா - விடை போட்டித் தேர்வில் பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு கேடயமும், பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கு நற்சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. நிகழ்வில் மாவட்ட செயலாளர் ம.கு.வைகறை, நகர செயலாளர் தி.க. கலைமணி, தலைமை ஆசிரியர் பரமேசுவரி, தமிழ் ஆசிரியர் சிவனேசுவரி ஆகியோர் பங்கேற்றனர்.
காரைக்குடி முத்துப்பட்டினம் மு.வி.அரசு மேல்நிலைப் பள்ளியில் பெரியார் 1000 வினா-விடை போட்டித் தேர்வில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களும், தேர்வில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் நற்சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. நிகழ்வில் பள்ளித் தமிழாசிரியர் பாண்டிகுமார் காரைக்குடி மாவட்ட கழக செயலாளர் வைகறை, நகர செயலாளர் தி.க கலைமணி ஆகியோர் பங்கேற்றனர்.
காரைக்குடி வித்யா கிரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பெரியார் 1000 வினா-விடை போட்டித் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களும், பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. நிகழ்வில் பள்ளி முதல்வர், தமிழாசிரியர் செயங்கொண்டான், காரைக்குடி கழக மாவட்ட செயலாளர் ம.கு.வைகறை, நகர செயலாளர் தி.க. கலைமணி ஆகியோர் பங்கேற்றனர்.



No comments:
Post a Comment