இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராக போட்டியின்றி தேர்வானார் ஓட்டப்பந்தய வீராங்கனை பி.டி. உஷா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 28, 2022

இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராக போட்டியின்றி தேர்வானார் ஓட்டப்பந்தய வீராங்கனை பி.டி. உஷா

புதுடில்லி, நவ. 28- இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராக  ஓட்டப்பந்தய மேனாள் வீராங்கனையும், நாடா ளுமன்ற உறுப்பினருமான கேரளா வைச் சேர்ந்த பி.டி.உஷா  போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள் ளார். இதன் மூலம் இந்திய ஒலிம் பிக் சங்கத்திற்கு முதன்முதறையாக பெண் ஒருவர் தலைமைப் பொறுப் புக்கு வரும் வாய்ப்பை பெற்று, இந்திய ஒலிம்பிக் சங்க சரித்திரத்தில் இடம் பிடித்துள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த மேனாள் ஓட்டப்பந்தய வீராங்கனை பிடி உஷா. இவர் ஆசிய போட்டிகளில் பல பதக்கங்களை வென்றவரும், 1984ஆ-ம் ஆண்டு ஒலிம்பிக் போட் டியில் 400 மீட்டர் தடை ஓட்டத் தில் 4ஆ-வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.  தற் போது 58 வயதாகும் பிடி உஷா கடந்த ஜூலை மாதம் ஒன்றிய பாஜ்கா அரசால் மாநிலங்களவை நியமன உறுப்பினராக அறிவிக்கப் பட்டு, பதவி ஏற்றார். 

இதற்கிடையில்,. இந்திய ஒலிம் பிக் சங்கத் தலைவர் மற்றும் உறுப் பினர்கள் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு டிசம்பர் 10ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடை பெறும் அறிவிக்கப்பட்டது. 

இதற்கான வேட்புமனுத் தாக் கல் கடந்த 25ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை வேட்பு மனுத் தாக்கல் செய்யலாம் என அறிவிக் கப்பட்டிருந்தது. வேட்புமனு திரும்பப்பெற டிசம்பர் 1ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை என கூறப் பட்டிருந்தது.

இந்த நிலையில், மேனாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா  இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதாக அறிவித்தார்.  சக வீரர்கள் மற்றும் தேசிய விளையாட்டு சம்மேள னங்களின் ஆதரவை ஏற்று இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக அவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருந் தார். இதையடுத்து  பி.டி.உஷா. 27ஆம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிட மனுத்தாக்கல் செய்ய வில்லை. ஆனால், துணைத்தலைவர் மற்றும் பல்வேறு பதவிகளுக்கு மொத்தம் 24 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ள னர். ஒரு துணைத் தலைவர் (பெண்), இணைச் செயலாளர் (பெண்) பதவிகளுக்குப் போட்டி இருக்கும். நான்கு செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில் 12 பேர் போட்டியியில் உள்ளனர்.

வேட்புமனுத்தாக்கல் முடிவ டைந்த நிலையில், பி.டி.உஷா போட்டியின்றி தேர்வாகி உள் ளார்.  இதன் மூலம் இந்திய ஒலிம் பிக் சங்கத்தின் முதல் பெண் தலை வர் என்ற பெருமையை பி.டி. உஷா பெறுகிறார்.

No comments:

Post a Comment