ரிஷிகள் பாரதத்தை உருவாக்கினார்களாம்! ரிஷிகளை உருவாக்கியவர்கள் யார் தெரியுமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 12, 2022

ரிஷிகள் பாரதத்தை உருவாக்கினார்களாம்! ரிஷிகளை உருவாக்கியவர்கள் யார் தெரியுமா?

மணிமேகலை என்னும் காப்பியத்தில் ஆபுத்திரன் ஒரு கதைப்பாத்திரம். அள்ள அள்ளக் குறையாமல் உணவு சுரக்கின்ற அட்சயபாத்திரம் என்ணும் அமுதசுரபியைக் கையில் ஏந்தி உலகோர்க்கு உணவளித்து பசிப்பிணி போக்கிய வள்ளல்தான் அந்த மணிமேகலை.

பார்ப்பனர்கள் வேள்வியில் வெட்டுவதற்காகக் கட்டி வைத்திருந்த பசுவை விடுவித்துக் காப்பாற்ற முயல்கிறார். வேள்வியில் அவித்து உணவாகச் சுவைக்கப் போகும்போது பசுவைக் காப்பாற்றிய ஆபுத்திரன்மேல் சீற்றத்துடன் எரிந்துவிழும் வேள்விப் பார்ப்பனக் கட்டம் ஆபுத்திரனை இகழ்ந்து பேசுகிறது. "நீ வேதங்கள் அறியாதவன். வேள்வியின் பெருமை தெரியாதவன்; மாட்டுக்குப் பிறந்தவன்” என்று அவரை வசைபாடுகின்றது.

அப்போது ஆபுத்திரன் சொல்கிறார், 

"ஆன்மகன் அசலன் மான்மகன் சிருங்கி

புலிமகன் விரிஞ்சி புரையோர் போற்றும்

நரிமகன் அல்லனோ கேச கம்பளன்

ஈங்கிவர் நுங்குலத் திருடி கணங்களென்

றோங்குயர் பெருஞ்சிறப் புரைத்தலு முண்டால்

ஆவொடு வந்த அழிகுலம் உண்டோ

நான்மறை மாக்காள் நன்னூ லகத்தென''

உரை: ஆண்மகன் அசலன் - அசலன் என்பவன பசுவின் மகன்,

மான் மகன் சிருங்கி - சிருங்கி என்பான் மானின் மகன்,

புலி மகன் விரிஞ்சி - விரிஞ்சி யென்பவன் புலியின் மகன்,

புரையோர் போற்றும் நரிமகன் அல்லனோ கேச கம்பளன் - மேலோர் போற்றும் கேசகம்பளன் நரியின் மகன் அல்லனோ,

ஈங்கிவர் நும்குலத்து இருடி கணங்கள் என்று - இவர்களெல்லாம் நும் குலத்து வந்த முனிவர் கூட்டம் என்று,

ஓங்குயர் பெருஞ் சிறப்பு உரைத்தலும் உண்டால் - மிக உயர்ந்த பெருஞ் சிறப்புக் கூறுதலும் உண்டாகலால்,

ஆவொடு வந்த அழிகுலம் உண்டோ நான்மறை மாக்காள் நன்னூல் அகத்து என - நான்மறை யந்தணீர் நும் மறை நூலிடத்து ஆவால் வந்த அழிகுலம் உண்டோ என வினவ;

சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை என்றும் காப்பியத்தில் 13ஆம் பிரிவாகிய ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை வரிகள் 61-69 வழங்கும் செய்திதான் இது.


No comments:

Post a Comment