Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
இலா பட் - பெண்களுக்கான தொழிற்சங்கத் தலைவர்!
November 29, 2022 • Viduthalai

’சேவா’, (Self Employed Women’s Association)  என்னும் நிறுவனம், உலகின் முறை சாராப் பெண் பணியாளர்களுக்கான (employees of informal sector)  மிகப் பெரும் தொழிற்சங்கம். இந்தியாவின் தொழிலாளர்களில் 92% பேர், முறை சாராத்தொழில்களில் பணிபுரிபவர்கள். இவர்கள் உரிமைகளுக்கான குரல், நிறுவனங்களில் பணிபுரி யும் தொழிலாளர்களுக்கான தொழிற்சங்கங்கள் போலப் பெரிதாக எழுவதில்லை. 15 லட்சத்துக்கும் அதிகமான பெண் உறுப்பினர்களைக் கொண்டு, பெண்களால் நிர்வகிக்கப்படும் நிறுவனம். இதன் தலைமையகம் அகமதாபாத்தில் உள்ளது.

இந்த சங்கமானது சங்கத்தின் பெண் உறுப்பினர்க ளுக்கு நிலையான வருமானம், அவர்கள் அடிப்ப டைத் தேவைகளான இருப்பிடம்,  மருத்துவ வசதி, குழந்தைகள் நலம் போன்றவற்றுக்காக உழைக்கிறது. தொழிலாளர்கள் ஒரு நிறுவனத்தின் ஊழியர்களாக இருந்தால், அந்த நிறுவனத்துடன் போராடி, பேரம் பேசி, தொழிலாளர்களுக்குச் சேர வேண்டிய அடிப் படை உரிமைகளைப் பெற்றுத் தரலாம். ஆனால், நிறுவனம் என ஒன்று இல்லாமல், முறைசாராப் பணிகளில், சீரான வருமானம் இல்லாத பெண்களுக் கான உரிமைகளை யாரிடம் இருந்து பெற்றுத் தரு வது? அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளை எவ்வாறு நிறைவேற்றுவது?

இலா பட், 1933 ஆம் ஆண்டு அகமதாபத்தில் பிறந்தார். தந்தை சுமந்த்ராய் பட் ஒரு வெற்றிகரமான வழக்கறிஞர். தாயார் வானலீலா வ்யாஸ் புகழ்பெற்ற பெண்ணியவாதி. கமலாதேவி சட்டோபாத்யாயா துவங்கிய, அகில இந்தியப் பெண்கள் மாநாட்டின் செயலர் (All India Women’s Conference).  சூரத் நகரில் பள்ளிக் கல்வி பயின்ற அவர், தனது சட்டப் படிப்பை அகமதாபாத்தில் முடித்தார். சிலகாலம், மும்பையின் எஸ்.என்.டி.டி என்னும் புகழ்பெற்ற கல்லூரியில் சிலகாலம் ஆசிரியராகப் பணியாற்றி னார். பின்னர் அகமபாத்தில் உள்ள ஜவுளித் தொழி லாளர் கூட்டமைப்பின் (Textile Labour Association - TLA)  சட்டப்பிரிவில் பணிக்குச் சேர்ந்தார்.

மோட்டா பென் (பெரிய அக்கா) என்றழைக்கப் பட்ட அனுசூயா சாராபாய், புகழ்பெற்ற குஜராத்தித் தொழிலதிபர் அம்பாலால் சாராபாயின் சகோதரி. குழந்தைத் திருமணம் செய்யப்பட்டு விதவையான அவர், பின் தன் சகோதரர் அம்பாலால் சாராபாயின் உதவியோடு, லண்டனில் மருத்துவம் பயிலச் சென்றார். படிப்புக்காக விலங்குகளை அறுப்பது, அவரது சமண மத வழிகளுக்கு முரணாக இருந்த தால், அதை விடுத்து, லண்டன் பொருளாதாரப் பள்ளியில் (London School of Economics)  பொருளாதாரம் பயின்றார். ஜனநாயக சோஷலி ஸத்தை முன்னெடுத்த ஃபேபியன் குழுவின் அனுதாபி. பெண் வாக்குரிமைக்காகக் குரல் கொடுத்த சஃப்ரகெட் இயக்கத்தில் (Suffragette Movement) பங்கெடுத்தவர். 1913 ஆம் ஆண்டு இந்தியா திரும்பி, பெண்களுக்காகவும், ஏழைகளுக் காகவும் உழைக்கத் துவங்கினார்.  36 மணி நேர ஷிஃப்டுகளில் பெண்கள் உழைக்க நேர்ந்த அவலத்தை எதிர்த்துக் குரல் கொடுத்தார். ஜவுளித் தொழிலாளர்களின் நலன்களுக்காக உழைத்தார்.

குறுந்தொழில், அல்லது முறைசாராத் துறைகளில் பணிபுரிபவர்கள், இந்தியாவின் மொத்தத் தொழிலா ளர்களில் 92% ஆகும். இவர்கள் ஊரக சமுகத்தின் விளிம்புகளிலும், நகர்ப்புரங்களின் சேரிகளிலும் பெரும்பாலும் வசிக்கிறார்கள். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தவர்கள் என அனைத்து ஜாதி வேற்றுமைகளையும் கடந்து, இவர்களுக்கிருக்கும் ஒரே ஒற்றுமை ஏழ்மை. ‘சேவா’, ஒரு சராசரி தொழிற்சங்கம் என்பதைத் தாண்டி, இவர்களை ஒரே சமூகமாக ஒருங்கி ணைக்கும் நிறுவனமாகவும் திகழ்கிறது.

’சேவா’ வின் முக்கியக் குறிக்கோள், மகளிருக்கு, வேலை, வருமானம், உணவு, சமூகம் என நான்கு தளங்களில் பாதுகாப்பை உறுதி செய்வதாகும். சமூக நலத்தில், வீடு, உடல் நலம், குழந்தைகள் நலம் ஆகியவையும் அடங்கும். இந்தத் தளங்களில், மகளிர் தனியாகவோ, குழுவாகவோ, தற்சார்பை எய்தி, தங்கள் வருங்காலத்தைத் தாங்களே முடிவு செய்யும் சுதந்திரத்தையே ‘சேவா’, பாதுகாப்பு என வரையறுக்கிறது. காந்திய வழிகளான, வாய்மை, அகிம்சை, சர்வதர்ம சமத்துவம் மற்றும் சிறு தொழில் கள் மூலம் சமூக மாற்றத்தை அடைவதே, ‘சேவா’ வின் வழி.

இந்த உறுப்பினர்களை, பொதுவாக நான்கு வகையாகப் பிரிக்கிறார்கள்:

தெருமுனை / குறு வணிகர்கள்: காய்கறி, முட்டை, மீன், இறைச்சி, வீட்டுப் பொருட்கள், துணிகள் போன்ற பொருட்களை விற்பவர்கள்.

வீட்டில் இருந்து உழைப்பவர்கள்: நெசவாளிகள், குயவர்கள், பீடி / அகர்பத்தி சுற்றுபவர்கள், அப்பளம் செய்பவர்கள், ஆயத்த ஆடை தைப்பவர்கள், கைவினைப் பொருட்கள் செய்பவர்கள் போன்றவர் கள். 

உடல் உழைப்பாளிகள்: வேளாண் தொழிலா ளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள், கைவண்டி இழுப்பவர்கள், தலைச் சுமை சுமப்பவர்கள், வீட்டு வேலை செய்பவர்கள் போன்றவர்கள்

சேவை மற்றும் உற்பத்தியில் ஈடுபடுபவர்கள்: உழவர்கள், மாடு மேய்ப்பவர்கள், உப்பு உற்பத்தி யாளர்கள், சிறு அளவில் உணவு தயாரித்து விற்ப வர்கள் போன்றவர்கள்.

சேவா வங்கி, ஏழைகளுக்கான தேசிய ஓய்வுத் திட்டத்தையும் நடத்தி வருகிறது. இதில் 40,000 உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். இதன் மூலம், மிக எளிதாக சேமிக்கவும், அரசு மானியத்தைப் பெறவும் முடிகிறது. இது ஏழைகளின் முதிய வயதில், ஒரு குறைந்தபட்ச பொருளாதாரப் பாதுகாப்புக்கு உதவுகிறது.

Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
''அரசமைப்புச் சட்டமும் - ஆளுநரின் அதிகார எல்லையும்'' தி.மு.க. சட்டக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம்!
January 21, 2023 • Viduthalai
Image
முதலமைச்சர் மோடியைப் பார்த்து, பிரதமர் வாஜ்பேயி ''ராஜதர்மத்தைக் காப்பாற்றுங்கள்'' என்று சொல்லவேண்டிய அவசியம் என்ன?
January 27, 2023 • Viduthalai
Image
பெரியார் நினைவிடத்தில் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் மரியாதை - தமிழர் தலைவர் வாழ்த்து
January 23, 2023 • Viduthalai
Image
ஒரத்தநாட்டில் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி
January 22, 2023 • Viduthalai
ஆசிரியர் விடையளிக்கிறார்
January 21, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn