காரைக்குடி,நவ.25- திருப்பத்தூர் அருகே வேட்டங் குடிப்பட்டியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 50). இவர் மானகிரி பகுதியில் ஆசிரமம் வைத்து குறி சொல்லி வருகிறார். இந்நிலையில், அவரிடம் குடும்ப பிரச்சினைக் காக ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்கள் நலப் பணியா ளராக பணிபுரியும் 35 வயது பெண் ஒருவர் குறி கேட்கச் சென்றார். அப்போது அந்த பெண்ணுக்கும், சாமியாருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து தனது 10 வயது மகனையும், 8 வயது மகளையும் சாமியாரிடம் அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் ஆசிரமத்தில் அச்சிறுமிக்கு சாமியார் பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தந்தை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமாரிடம் புகார் கொடுத்தார். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் உத்தரவின்பேரில் நாச்சியார்புரம் காவல்துறை உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார் விசாரணை நடத்தி, மோசடி சாமியார் ராமகிருஷ்ணன், சிறுமியின் தாயார் ஆகிய 2 பேரையும் கைது செய்தார்.
ஆசிரமத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை சாமியார் உள்பட இருவர் கைது