ராகுல்காந்திபற்றி பி.ஜே.பி. தனிநபர் விமர்சனம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 25, 2022

ராகுல்காந்திபற்றி பி.ஜே.பி. தனிநபர் விமர்சனம்!

புதுடில்லி, நவ.25 ராகுல்காந்தி தோற்றம் பற்றிய அசாம் முதலமைச் சரின் விமர்சனத்துக்கு ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பதில் அளித் தார்.  நடைப் பயணம் மேற் கொண் டுள்ள காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல்காந்தி தாடியுடன் காணப் படுகிறார். அவரது தோற்றம், ஈராக் மேனாள் அதிபர் சதாம் உசேன் போல் மாறி விட்டதாக அசாம் மாநில முதலமைச்சரும் பா.ஜனதா மூத்த தலைவருமான ஹிமந்த பிஸ்வா சர்மா கூறியிருந்தார். 

இந்தநிலையில்,  டில்லியில் ஆங்கில செய்தி சேனல் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒன்றிய உள்துறை அமைச் சர் அமித்ஷாவிடம் இதுகுறித்து கேட்கப்பட்டது. அதற்கு அமித்ஷா கூறியதாவது:- 

தேர்தல் சமயத்தில் இதுபோன்ற விஷயங்கள் பேசப்படுவது வழக்கம் தான். மக்களும் கேட்டு மகிழ்வார்கள். ஆனால், ஓட்டு விஷயத்தில் எந்த மாறுதலும் வரப் போவதில்லை. எனவே, இதுபோன்ற விவகாரங்களை நீண்ட காலத்துக்கு ஜவ்வாக இழுக்கக் கூடாது என்று  கூறினார்.

No comments:

Post a Comment