திராவிடர் கழகம் சார்பில் ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் உயிர்நீத்த போராளிகளுக்கு தமிழ்நாடெங்கும் நடைபெற்ற வீர வணக்கப் பொதுக்கூட்டங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 30, 2022

திராவிடர் கழகம் சார்பில் ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் உயிர்நீத்த போராளிகளுக்கு தமிழ்நாடெங்கும் நடைபெற்ற வீர வணக்கப் பொதுக்கூட்டங்கள்

தருமபுரி

தருமபுரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் ஜாதி ஒழிப்பு போராளிகளுக்கு வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் தர்மபுரி மாவட்ட கழகம் சார்பில்  சிந்தல்பாடியில் 25-11-2022 வெள்ளிக் கிழமை மாலை 6 மணி அளவில் நடைபெற்றது. 

வீர வணக்க நாள் பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு திராவிட முன்னேற்றக் கழக மேனாள் மாநில தொண்டர் அணி அமைப்பாளரும், மத்தூர் கலைமகள் மேல்நிலைப் பள்ளியின் தாளாளருமான முனைவர் சிந்தை மு. ராஜேந்திரன் தலைமை வகித்தார். தர்மபுரி மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு மாவட்ட அமைப்பாளரும், விடுதலை வாசகர் வட்ட செயலாளருமான கோ. குபேந்திரன் வரவேற்புரை ஆற்றினார்.

திராவிடர் கழக மாவட்ட தலைவர்  வீ.சிவாஜி, மாவட்ட ஆசிரியர் அணி தலைவர் தீ.சிவாஜி, மாவட்ட ஆசிரியர் அணி செயலாளர் மு.பிரபாகரன்,  ஒன்றிய கழக தலைவர்  பெ.சிவலிங்கம், ஒன்றிய கழக செயலாளர் வே.தனசேகரன், ஒன்றிய கழக அமைப்பாளர் இளங்கோ, ஒன்றிய பகுத்தறிவாளர் தலைவர் பெ.அன்பழகன், சிந்தல்பாடி கழகத் தலைவர் லோகநாதன் என்கின்ற காந்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சியினுடைய சட்ட விழிப்புணர்வு மாவட்ட அமைப்பாளர் சிந்தை மா.தமிழன், நடராஜ், ஆகியோர் முன்னிலையேற்றனர். 

நிகழ்ச்சிக்கு முன்னதாக பொதுக்கூட்ட மேடை அருகே வைக்கப்பட்டிருந்த பெரிய அளவிலான தந்தை பெரியார் படத்திற்கு நிகழ்ச்சியின் தலைமையாளர் முனைவர் சிந்தை மு.இராசேந்திரன்  மாலை அணிவித்தார். அதைத்தொடர்ந்து அண்ணல் அம்பேத்கர்  சிலைக்கு மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர். தமிழ்செல்வி,அறிஞர் அண்ணா சிலைக்கு  மாநில அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், மேனாள் முதலமைச்சர் எம்ஜிஆர் சிலைக்கு வகுத்துப்பட்டி பெ. அன்பழ கன் ஆகியோர் மாலை அணிவித்துனர்.                          

நிகழ்ச்சியில் மாநில அமைப்புச் செயலாளர் வி.பன்னீர் செல்வம், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் அரூர்     சா.இராஜேந்திரன், மாநில கலைத்துறை செயலாளர் மாரி.கருணாநிதி, மாவட்ட கழக தொழிலாளர் அணி தலைவர் பெ.கோவிந்தராஜ், திராவிட முன்னேற்றக் கழக பொறுப்பாளர் அம்பை டி.ராஜேந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியினுடைய பொறுப்பாளர்  மாயவன், ஆகியோர் கருத்து ரையாற்றினர்.   

தந்தை பெரியார் போராட்ட அறிவிப்பு, ஜாதி ஒழிப்புக்காக சட்ட எரிப்பு  போராட்டங்கள், போராளிகள் சிறை சென்றது , சிறையில் மறைவுற்ற தோழர்களுக்கு வீர வணக்கம் செலுத்தி  திராவிடர் கழக மாநில அமைப்பு செயலாளர் ஊமை.ஜெயராமன், மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் அண்ணா .சரவணன், மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியை திராவிடர் கழக மண்டல தலைவர் தமிழ்ச்செல்வன் தொடக்க உரையாற்றி ஒருங்கிணைத்து நடத்தினர். 

நிகழ்ச்சியில் விடுதலை வாசகர் வட்ட தலைவர் வா நட ராஜன் ஒன்றிய பகுத்தறிவாளர் கழக செயலாளர் சொ.பாண்டி யன், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய பகுத்தறிவாளர் கழகத் தலை வர் கூ தங்கராஜ்,  ஒன்றிய திமுக பொருளாளர் கோ.முருகன், ஒன்றிய திமுக தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் கொ.கண் ணப்பன்,  சிந்தல்பாடி திராவிட முன்னேற்றக் கழக பொறுப்பா ளர்கள் நாகேந்திரன், சிவக்குமார், தேசங்கு, விஸ்வநாதன், பொன்னுசாமி, சேகர், அம்பாளபட்டி தீப்பாச்சி  மற்றும் சிந்தல்பாடி தந்தை பெரியார் பகுத்தறிவு பாசறை இளைஞர் மன்ற தோழர்கள் பெரும் அளவில் பங்கு கொண்டனர்.

நிகழ்ச்சியின் இறுதியாக ஜாதி ஒழிப்பிற்காக சிறைச்சென்று மறைவுற்ற தோழர்களுக்கு வீரவணக்க முழக்கமிட்டு அமைதி காத்தனர்.     மாவட்ட ஆசிரியர் அணி பொறுப்பாளர்  சிந்தை  மூ.சிவகுமார் கடந்த காலங்களில் நடைபெற்ற இயக்க நிகழ்ச்சிகள், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியரின்  பங்கேற்பு பற்றி நினைவு கூர்ந்து நன்றி உரையாற்றினார். 

சிவகங்கை

ஜாதி ஒழிப்பு போராளிகளுக்கு வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் சிவகங்கையில் 26 11 2022 சனிக்கிழமை மாலை 6 மணி அளவில் சுயமரியாதை சுடரொளி ராமச்சந்திரனார் நினைவு பூங்கா, கோர்ட் வாசல், அண்ணா சிலை அருகில் மிக எழுச்சியுடன் நடைபெற்றது. 

கூட்டத்திற்கு நகர் கழக தலைவர் இரா. புகழேந்தி வரவேற்புரை ஆற்றினார். வழக்குரைஞர் ச.இன்பலாதன் 

பி எஸ் சி பி எல் (மாவட்ட தலைவர், திராவிடர் கழகம்)  தலை மையில் இக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு கழக மண்டல தலைவர்  சிகாமணி, மண்டல செயலாளர் அ. மகேந்திர ராசா  பொதுக்குழு உறுப் பினர் மணிமேகலை சுப்பையா, மாவட்ட துணைத் தலைவர் ஜெ தனபாலன், மாவட்ட செயலாளர் பெரு.ராசாராம், மாவட்ட அமைப்பாளர் ச.அனந்தவேல், மானா மதுரை நகரக் கழக தலைவர்  வள்ளிநாயகம், முன்னிலை வகித்தார்கள்.  

திராவிடர் கழக மாநில மகளிர் அணி அமைப்பாளர் குடி யாத்தம்  நா.தேன்மொழி, பேராசிரியர் முனைவர்  மு.சு.கண் மணி சிறப்புரையாற்றினார்கள். இக்கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக திராவிட முன்னேற்றக் கழகத்தின் நகர் மன்ற துணைத் தலைவர் வழக்குரைஞர்  கார் கண்ணன்  சிறப்புரை யாற்றினார்கள். 

இக்கூட்டத்தில் ஜாதி ஒழிப்பு போராட்டத்தின் போது சிறை சென்ற சிவகங்கை பெரியார் பெருந்தொண்டர் வீர ஜெய ராமன் அவர்களின் படத்திற்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. மேலும் தந்தை பெரியார் அவர்களால் பெயருக்கு பின்னால் இருக்கும் ஜாதி பட்டத்தை துறக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றிய  பொழுது, அத் தீர்மானத்தை முன்மொழிந்ததோடு அல்லாமல் தன் பெய ருக்கு பின்னால் இருந்த சேர்வை பட்டத்தை எடுத்து இன்று முதல் ராமச்சந்திரன் என்று முதன் முதலில் அறிவித்த சிவகங்கை ராமச்சந்திரனார் அவர்களின் சிலைக்கு மலர் மாலை சூட்டி சிறப்பு செய்யப்பட்டது.

கூட்டத்தில் ஓய்வு பெற்றோர் அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர்  செல்லமுத்து, தமிழாசிரியர் நீ.இளங்கோ, இரவிச் சந்திரன், வேம்பத்தூர் ஜெயராமன், சிவகங்கை நேரு, கவிஞர் தங்கராசு, தமிழ்வாணன் மதகுபட்டி பிச்சை முத்து, பிரமனூர் குமார், சுந்தராசன் தி.கா.பாலு, திருப்புவனம் ராசாங்கம் செம்பராயநேந்தல் லட்சுமணன் திருபுவனம் அக்னி சாலை கிராமம் சக்திவேல் கீழ பூங்குடி முருகேசன் சாலைகிராமம் பழனி வட்டன், காஞ்சரங்கால் மீனாட்சியம்மாள் காஞ்சரங்கால் துரைசிங்கம் காஞ்சரங்கால் சோனை சிவக்குமார், மூர்த்தி, வேம்பத்தூர் வேலு மற்றும் பெரியார் பிஞ்சுகள் பு. கா. யாழிசை மொழி,  பு.கா.யாழினி சத்தியபாமா ஆகியோர் பங்கேற்று சிறப் பித்தனர் இறுதியில் வேம்பத்தூர் ஜெயராமன்  நன்றி கூறினார்.

தஞ்சாவூர் 

தஞ்சாவூர், இரயில் நிலையம் அருகில் தஞ்சாவூர் மாநகர கழக சார்பில் ஜாதி ஒழிப்பு வீரர்களுக்கு வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் 27.11.2022 ஞாயிறு அன்று மாலை 6 மணியளவில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரையும் வரவேற்று மாநகர கழக அமைப்பாளர் செ. தமிழ்செல்வன் வரவேற்புரையாற்றினார். தஞ்சை மாநகர கழக தலைவர் பா.நரேந்திரன் தலைமையேற்று உரையாற்றினார். தஞ்சை மாநகர செயலாளர் கரந்தை அ.டேவிட், மாநகர துணைச் செயலாளர் பழக்கடை கணேசன், புதிய பேருந்து நிலைய பகுதி செயலாளர் இரா.இளவரசன், மருத்துவக் கல்லூரி பகுதி செயலாளர் கோவிந்தராசு, ஆகியோர் முன்னிலையேற்றனர்.

தஞ்சை மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், தஞ்சை மண் டல தலைவர் மு.அய்யனார் ஆகியோர் கலந்து கொண்டு தொடக்கவுரையாற்றினர். கழக மாநில மகளிர் பாசறைச் செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை  சிறப்புரை யாற்றினார்.

இந்நிகழ்வின் தொடக்கத்தில் மாநில ப.க. துணை தலைவர் கோபு.பழனிவேல், தஞ்சை மாவட்ட ப.க. செயலாளர் பாவலர் பொன்னரசு ஆகியோர் பகுத்தறிவுப் பாடல்களை பாடினர். இறுதியாக மாநகர கழக தோழர் இரா வீரக்குமார் நன்றி கூறினார்.

இந்நிகழ்வில் மாநில ப.க. ஊடகப்பிரிவு தலைவர் மா.அழ கிரிசாமி, மாநில கலைத்துறை செயலாளர் ச.சித்தார்த்தன், மாவட்ட துணை செயலாளர் அ.உத்திராபதி, கழக சொற்பொழி வாளர் பூவை புலிகேசி, மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன், பெரியார் வீர விளையாட்டு கழக மாநில செயலாளர் நா.இராமகிருஷ்ணன், மண்டல மகளிரணி செயலாளர் அ.கலைச்செல்வி, மண்டல இளைஞரணி செயலாளர் முனைவர் வே.இராஜவேல், மாவட்ட ப.க. தலைவர் ச.அழகிரி, மாவட்ட ப.க. துணைத் தலைவர் பெரியார் கண்ணன், மாவட்டத் தொழிலாளரணி தலைவர் ச.சந்துரு, மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் செ.ஏகாம்பரம். மாவட்ட தொழிலாளர் அணி பொருளாளர் போட்டோ மூர்த்தி, தஞ்சை தெற்கு ஒன்றிய தலைவர் இரா. சேகர், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லு பட்டு அ.இராமலிங்கம், தஞ்சை வடக்கு ஒன்றிய தலைவர் மாத்தூர் பா.சுதாகர், உரத்தநாடு ஒன்றிய தலைவர் த.ஜெகநாதன், உரத்தநாடு ஒன்றிய துணைத் தலைவர் இரா.துரைராசு, மாவட்ட மகளிர் பாசறை அமைப்பாளர் ச.அஞ்சுகம், மாநகர இளைஞரணி துணை தலைவர் அ.பெரியார் செல்வன், மாநகர பகுத்தறிவாளர் கழக தோழர்கள் பொறியாளர் ஜெய ராமன், சாமி.தமிழ்ச்செல்வன், மன்றாயன் குடிக்காடு மதியழ கன், மாவட்ட மாணவர் கழக துணை தலைவர் ச.சிந்தனை அரசு, மாவட்ட மாணவர் கழக துணை செயலாளர் ஏ.விடு தலை அரசி,  பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மாண வர் கழக அமைப்பாளர் ஜா.இரா.நிலவன், மகளிர் அணி தோழர் பாக்கியம், ஒக்கநாடு துரை.தன்மானம், பொறியாளர் பாலகிருஷ்ணன், தென்னகம், பெரியார் பெருந்தொண்டர் ராமையன், ச.வீரமணி மற்றும் கழக பொறுப்பாளர்கள் தோழர் கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

குடியாத்தம் - வேலூர் 

வேலூர் மாவட்ட கழக சார்பில் ஜாதி ஒழிப்பு போராளி களுக்கு வீரவணக்கம் நாள் பொதுக்கூட்டம் 27.11.2022 ஞாயிறு மாலை 6.00 மணிக்கு குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரில் நடை பெற்றது.

வேலூர் மாவட்ட தலைவர் இர.அன்பரசன் தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் வி.இ.சிவக்குமார் வர வேற்புரை ஆற்றினார். பெரியார் மருத்துவரணி செயலாளர் மரு.பழ.ஜெகன்பாபு, மாவட்ட மகளிரணி தலைவர் ச.கலை மணி, வேலூர் மாவட்ட மகளிரணி செயலாளர் ச.இரம்யா, மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் மா.அழகிரிதாசன், வேலூர் மாநகர பகுத்தறிவாளர் கழக செயலாளர் அ.மொ.வீரமணி, குடியாத்தம் நகர தலைவர் சி. சாந்தகுமார், நகர அமைப்பாளர் வி. மோகன், குடியாத்தம் மகளிரணி பெ. இந்திராகாந்தி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வேலூர் மண்டல தலைவர் வி.சடகோபன் துவக்க உரை ஆற்றினார். காஞ்சி மண்டல செயலாளர் காஞ்சி பா.கதிரவன் மற்றும் மாநில திராவிட மாணவர் கழக செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் சிறப்பரை ஆற்றினார்கள்.

இக்கூட்டத்திற்கு அணைக்கட்டு ஒன்றிய அமைப்பாளர் பொ.இரவீந்திரன், மாவட்ட திராவிட மாணவர் கழக அமைப்பாளர் அ.ஜெ.ஓவியா,   குடியாத்தம் கழக ஓவியர் சிவா, குடியாத்தம் மாணவர் கழகம் இரா. க. இனியன், இரா. க. அறிவு சுடர், தசரதன்,  மருத்துவர் சிவா, சுனில்,  மற்றும் கழக தோழர்கள்,  பொது மக்கள் கலந்து கொண்டனர். இறுதியில் மாவட்ட திராவிட மாணவர் கழக தலைவர் வி.சி.தமிழ்நேசன் நன்றி கூறினார்.

திருமருகல் 

நாகப்பட்டினம் மாவட்டம், திருமருகலில் ஜாதி ஒழிப்பு போராளிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் 26-11-2022 அன்று மிக எழுச்சியுடன் நடைபெற்றது. 

கூட்டத்திற்கு நாகை மாவட்ட தலைவர்  வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன்  தலைமை தாங்கினார். அனைவரையும் வரவேற்று மாவட்ட இளைஞரணி தலைவர் சு.ராஜ்மோகன் உரையாற்றினார். கூட்டத்திற்கு திராவிடர் கழக ஒன்றிய தலைவர் கு.சின்னதுரை, ஒன்றிய செயலாளர் இரா.ரமேஷ், மண்டல இளைஞரணி அணி செயலாளர் நாத்திக.பொன்முடி, மண்டல மாணவர் கழக செயலாளர் இராச. மு. இளமாறன் ஆகியோர் முன்னிலை ஏற்று உரை நிகழ்த்தினார்கள். 

மாவட்ட கழக செயலாளர் ஜெ.புபேஸ் குப்தா இணைப் புரை வழங்கினார் ஜாதி ஒழிப்பு வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி கழக பேச்சாளர் முனைவர் அதிரடி. அன்பழகன் சிறப்புரை ஆற்றினார்.

நிகழ்ச்சியில் நாகை நகர செயலாளர் செந்தில்குமார் உட்பட இளைஞரணி துணைத் தலைவர் வி.ஆர்.அறிவுமணி, திருவாரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் கரிகாலன், திருவாரூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகளின் பொறுப்பாளர் காவாலி ராஜேந்திரன், மாவட்ட மாணவர் கழக தலைவர் சே.பாக்கியராஜ், மாவட்ட மாணவர் கழக செயலாளர் மு.குட்டி மணி, மாணவரணி பொறுப்பாளர் ம.இளமாறன், நாகை ரவி மற்றும் கழகத் தோழர்களும் மகளிர் அணி தோழர்களும் திரளாக பங்கேற்று சிறப்பித்தனர். கூட்டம் இரவு 9:45 மணி அளவில் நிறைவு பெற்றது.

No comments:

Post a Comment