தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 1, 2022

தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு...

கழகத் தலைவரின் உயிருக்குக் குறி வைக்கத் திட்டமா?

உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா?

‘தினமலர்' குரூப் ‘காலைக்கதிர்' என்ற ஏட்டையும் நடத்தி வருகிறது.

அதன் 30.10.2022 நாளிட்ட ஏட்டில், ‘‘அன்புமணி பதில்கள்'' என்ற தலைப்பில் கீழ்க்கண்ட கேள்வி- பதிலை வெளியிட்டுள்ளது.

கே.மாரியப்பன், பெருந்துறை

கேள்வி: ‘‘தன்னைத் தானே, ‘தமிழர் தலைவர்' எனக் கூறிக் கொள்ளும், தி.க., தலைவர், வீரமணி, ஹிந்து மதத்தில் உள்ள, ஒரு ஜாதியை மட்டும் விடாமல் திட்டியும், மட்டம் தட்டியும் வருகிறாரே... மற்ற ஜாதிக்காரர்களைப்பற்றி, வாய் திறப்ப தில்லையே... இது ஏன்?

பதில்: இவர் திட்டும் ஜாதியினர் கம்போ, தடியோ கையில் எடுக்கமாட்டார்கள் என்ற தைரி யம்தான்! அதே ஜாதிக்காரனான, வட மாநிலத் தைச் சேர்ந்த ஒருவன், கோபம் வந்தபோது, இத்தேச விடுதலைக்காக தலைமை நின்றவரை என்ன செய்தான்... அதற்குமுன், மணியாச்சி ரயில் நிலையத்தில், ஆஷ் என்ற வெள்ளைக்கார கலெக்டரை சுட்டுக்கொன்று, தானும் சுட்டுச் செத்தான் இதே ஜாதிக்காரன்.

ஹிந்து மதத்தையும், அதில் ஓர் அங்கமான அந்த ஜாதியையும் எதிர்ப்பவர்கள், ஒன்றுகூடி, பொதுக்கூட்டம் நடத்த வாய்ப்புள்ளது.

அப்போது, அதே ஜாதியைச் சேர்ந்த வெறி கொண்ட இளைஞன் ஒருவன், இவர்களை ‘கவனிக்க' வாய்ப்பு ஏற்பட்டுவிட்டால்...

எனவே, இவர்கள் கவனமாக இருக்க வேண் டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

என்று ‘காலைக்கதிர்' ஏட்டில் (30.10.2022) வெளி வந்துள்ளது.

2019 மார்ச் 3 ஆம் தேதி ‘தினமலர்' வார மலரில்,

கே.வெங்கட்ராமன், தென்காசி என்பவர் பெயரால் வெளிவந்துள்ள கேள்வி - பதில் வருமாறு:

‘‘தன்னைத் தானே ‘தமிழர் தலைவர்' எனக் கூறிக் கொள்ளும் தி.க. தலைவர் வீரமணி ஹிந்து மதத்தில் உள்ள ஒரு ஜாதியை மட்டும் விடாமல் திட்டியும், மட்டம் தட்டியும் வருகிறாரே - மற்ற ஜாதிக் காரர்களைப்பற்றி வாய் திறப்பதில்லையே, இது ஏன்?

பதில்: இவர் திட்டும் ஜாதியினர் கம்போ, தடியோ கையில் எடுக்கமாட்டார்கள் என்ற தைரியம்தான்.

அதே ஜாதிக்காரரான வட மாநிலத்தைச் சேர்ந்த ஒருவன் கோபம் வந்தபோது இத்தேச விடுதலைக்காக தலைமை நின்றவரை என்ன செய்தான்... அதற்கு முன் மணியாச்சி ரயில் நிலையத்தில் ஆஷ் என்ற வெள்ளைக்கார கலெக்டரை சுட்டுக்கொன்று, தானும் சுட்டுச் செத்தான் இந்த ஜாதிக்காரன்.

இப்பொழுது தேர்தல்கள் நெருங்குகின்றன. இந்து மதத்தையும், அதில் ஓர் அங்கமான அந்த ஜாதியையும் எதிர்ப்பவர்கள் ஒன்று கூடி பொதுக்கூட்டம் நடத்த வாய்ப்புள்ளது. 

அப்போது, அதே ஜாதியைச் சேர்ந்த வெறி கொண்ட இளைஞன் ஒருவன் இவர்களை ‘கவனிக்க' வாய்ப்பு ஏற்பட்டுவிட்டால்...

எனவே, இவர்கள் கவனமாக இருக்கவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்'' என்று குறிப்பிடப்பட்டது. (‘தினமலர்', 3.3.2019).

29.3.2019 ‘தினமலர்' வார இதழில் கேள்வி கேட்டவர் பெயர் கே.வெங்கட்ராமன் - 30.10.2022 நாளிட்ட ‘காலைக்கதிர்' ஏட்டில் கேள்வி கேட்டவர் பெயர் கே.மாரியப்பன், பெருந்துறை.

இரண்டிலும் கேள்விகளும், பதில்களும் வாசகம் மாறாமல் அப்படியே இருக்கின்றன.

இது ‘தினமலர்' கூட்டத்திற்கே உரிய தில்லு முல்லு - பித்தலாட்டம் எத்தகைய யோக்கியதையானது என்பது இதன்மூலம் தெரிகிறது.

தினமலரின் நோக்கமும் காலைக்கதிர் நோக்கமும் திராவிடர் கழகத் தலைவரின் உயிர்மீது குறி வைப்பதே!

கோட்சே, காந்தியாரைச் சுட்டுக் கொன்றது போலவும், வாஞ்சி நாதன் ஆஷ் துரையை சுட்டுக் கொன்றதுபோலவும்,  திராவிடர் கழகத் தலைவரின் உயிருக்குக் குறி வைக்கத் தூண்டும் நோக்கம் இதன் மூலம் வெளிப்படையாகவே தெரிகிறது.

ஏற்கெனவே திட்டம் தீட்டி வைத்துள்ளனர் என்று கருதுவதற்கும் இடம் இருக்கிறது.

இதன்மீது தமிழ்நாடு அரசு, காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் - எடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம்!

உரிய முறையில்  புகாரும் அளிக்கப்படும் என்ப தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தோழர்கள் பதற்றம் அடையவேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

கலி.பூங்குன்றன்,

துணைத் தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

1.11.2022

1 comment:

  1. தமிழ்நாட்டு ஆட்சியின் வழிகாட்டியாக இருக்கும் தமிழர் தலைவர்- R.S.S-பி.ஜே.பி, பார்ப்பனர்கள் பற்றி ஆதாரபூர்வமாக எழுதியும், பேசியும் வருகிறார். இதனால் R.S.S பார்ப்பன வகையறாக்கள் தமிழர் தலைவர் மீது குறிவைத்துள்ளார்கள் என்பது தெளிவாகிறது எனவே ஒரே மாதரியாக செய்தி வெளியிட்டிருக்கும் தினமலர், காலைக்கதிர் ஆசிரியர் குழுவை காவல்வளையத்திற்குள் கொண்டுவந்து தக்க முறையில் கவனித்தால் சதித்திட்டம் வெளிவரும். தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும். ஈரோடு த.சண்முகம்

    ReplyDelete