பெரியார் மருந்தியல் கல்லூரியில் தேசிய மருந்தியல் வாரவிழா - புத்தாக்கப்பயிற்சி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 30, 2022

பெரியார் மருந்தியல் கல்லூரியில் தேசிய மருந்தியல் வாரவிழா - புத்தாக்கப்பயிற்சி

திருச்சி, நவ. 30- தேசிய மருந்தியல் வாரவிழாவினை முன்னிட்டு பெரியார் மருந்தியல் கல்லூரி, தமிழ்நாடு மருந்தியல் கழகம் மற்றும் தமிழ்நாடு அனைத்து பதிவுற்ற மருந்தாளுநர் நல சங்கம் இணைந்து 26.11.2022 அன்று பதிவுற்ற மருந்தாளுநர்களுக்கான ஒரு நாள் புத்தாக்கப் பயிற்சியினை நடத்தியது.  இப்பயிற்சிக்கான துவக்கவிழா காலை 10 மணியளவில் கல்லூரி அரங்கத்தில் நடைபெற் றது. 

பெரியார் மருந்தியல் கல்லூரி யின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை தலைமையில் மூலிகை மருந்தியல் துறைத் தலைவர் முனைவர் த. சிறீ விஜய கிருபா வரவேற்புரையாற்றினார். 

தமிழ்நாடு மருந்தியல் கழகத் தின் பதிவாளரும் பெரியார் மருந்தி யல் கல்லூரியின் மேனாள் மாணவி யுமான முனைவர் எம். தமிழ்மொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மருந்தாளுநர்களிடையே உரையாற்றினார். 

அவர் தமது உரையில் மருந்தா ளுநர்களின் தேவையை கரோனா காலகட்டம் நம் அனைவருக்கும் தெளிவாக உணர்த்தியுள்ளது. உயிர்காக்கும் துறையில் பணியாற் றக்கூடிய மருந்தாளுநர்களுக்கான உரிய அங்கீகாரம் கிடைப்பதற்கும் அவர்களுக்கான வாய்ப்புக்களை பெற்றுத் தருவதற்கும் தமிழ்நாடு மருந்தியல் கழகம் நிச்சயம் பாடு படும் என்று கூறினார். 

துவக்க விழா நிகழ்ச்சிக்கு மருந் தாக்க வேதியியல் துறை பேராசிரி யர் முனைவர் எஸ். சகிலா பானு நன்றியுரையாற்றினார். அதனை தொடர்ந்து மருந்தியல் ஒழுங்கு முறைகளுக்கான பயிலரங்கத்தை பதிவாளர் முனைவர் எம். தமிழ் மொழி தொடர்ந்து நடத்தினார். பேராசிரியர் முனைவர் அ.மு. இஸ்மாயில் நீரிழிவு நோய்க்கான மருந்துகள் மற்றும் தீர்வுகள் குறித்து இரண்டாம் பயிலரங் கத்தை நிறைவு செய்தார். 

புத்தாக்கப் பயிற்சி

திருச்சி  மண்டல மருந்து கட் டுப்பாட்டுத் துறை மருந்து ஆய்வா ளர் பி. செந்தில் ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள் குறித்த மூன்றாவது பயிலரங்கத்தை மருந்தாளுநர்க ளுக்கு வழங்கினார். அதனைத் தொடர்ந்து மாலை 4.30 மணியள வில் புத்தாக்கப்பயிற்சியின் நிறைவு விழா முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை தலைமையில் நடை பெற்றது. 

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அனைத்து பதிவுற்ற மருந்தாளுநர் நல சங்கத்தின் மாநிலத் தலைவர் கார்த்திக் வரவேற்புரையாற்றினார். திருச்சி  மண்டல மருந்து கட்டுப் பாட்டுத் துறை மருந்து ஆய்வாளர் பி. செந்தில் தமது சிறப்புரையில் மருந்தாளுநர் என்பவர்கள் மருந் தியல் தொடர்பான ஆராய்ச்சி, தயாரிப்பு, கண்டுபிடிப்பு, மருந்தி யல் வெள்ளோட்டம், சந்தைப்படுத் துதல், கல்வி, நிர்வாகம், மருந்தகம், மருத்துவமனை மருந்தாளுநர்கள்,  என பிறப்பிலிருந்து ஒரு மனிதனின் இறப்பு வரையில் மருந்தாளுநர்க ளின் சேவை நலவாழ்வுத் துறைக்கு தேவைப்படுகிறது. 

கரோனா பாதித்த காலங்களில் இரவு, பகல் பாராது மருந்து தட் டுப்பாடுகள் இல்லாமல் மக்களின் உயிர் காக்கும் பெரும் பணியை மருந்தாளுநர்களும், தயாரிப்பு நிறுவனங்களும் வெற்றிகரமாக செய்ததன் முயற்சிதான் இன்று பெரும்போராட்டத்திற்கு தீர்வு கிடைத்துள்ளது. எனவே சுகா தாரத்துறையில் மருந்தாளுநர் என் பதில் எப்போதும் நாம் பெருமை யுடனும் கடமையுணர்வுடனும் செயல்பட வேண்டும். மருந்தியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டு நலமான சமுதாயம் உருவாக பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டு தேசிய மருந்தியல் வாரவிழாவினை யொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவர்க ளுக்கு பரிசுகள் மற்றும் புத்தாக்கப்பயிற்சியில் ஈடுபட்ட பதிவுற்ற மருந் தாளுநர்களுக்கு பாராட்டுச் சான் றிதழ்கள் வழங்கி சிறப்பித்தார்.  

முன்னதாக பெரியார் மருந்தி யல் கல்லூரியின் பேராசிரியர் முனைவர் அ.மு. இஸ்மாயில் மற் றும் துணை முதல்வர் முனைவர் கோ. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  தமிழ்நாடு அனைத்து பதிவுற்ற மருந்தாளுநர் நல சங்கத்தின் மாநில டிரஸ்டி டி.சந்தோஷ் குமார், மாநில செய லாளர் பி. கிருஷ்ணகுமார் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். பெரியார் மருந்தியல் கல்லூரியின் மருந்தியல் பயிற்சித் துறையின் பேராசிரியர் ச. இராஜேஷ் நன்றியு ரையாற்ற நிகழ்ச்சி நிறைவுற்றது. 

இந்நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் 108 பதிவுற்ற மருந்தாளுநர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர் என் பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment