நமது பண்பாடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 26, 2022

நமது பண்பாடு

புத்தர் பிறந்த காலத்தில் பெரிய இனக்குழுக்கள் வகைப்படுத்தப்பட்டன அவை திராவிடர்கள். ஆரியர்கள், அரேபியர்கள், ரோமர்கள், சீனர்கள், கிரேக்கர்கள் மற்றவை அனைத்துமே மிகவும் சிறிய இனக்குழுக்கள்தான்

கிரேக்கர்கள் தங்களை கிரேக்கர்கள் என்று  அழைத்துக் கொண்டதோடு மற்றவர்களை பிசாசுகள் என அழைத்தனர். அவர்கள் கிரேக்கமொழி பேசினார்கள்.

 ரோமர்கள் தங்களை ஆளப்பிறந்தவர்கள் எனவும் மற்றவர்கள் வாழத் தகுதியற்றவர்கள் எனவும் கருதினர் - ரோமானிய மொழியைப் பேசினார்கள். அரேபியர்கள் தங்களைப் பேசத் தெரிந்தவர்கள் எனவும், மற்ற மக்களை அஜமிகள். அதாவது, ஊமையர்கள் எனவும் கூறினர் - அரபிக் மற்றும் ஹிப்ரூ மொழிகளைப் பேசினார்கள். ஆரியர்கள் தங்களை உயர்ந்தவர்களாகவும் கடவுளுக்கு நிகரானவர்கள் என்றும், மற்றவர்களை மிலேச்சர்களாக அதாவது கீழானவர்களாகவும் கருதினர். இவர்கள் தாங்கள் சென்ற நிலப்பகுதியில் வாழ்ந்த மக்கள் பேசிய மொழியை பேசினர் - பாலி, கடிபோலி உள்ளிட்ட மொழிகள். ரகசிய மொழியாக தங்களுக்குள் சமஸ்கிருத்தை எழுதிக்கொண்டனர்.

சீனர்கள் தங்களை முதலாளிகளாகவும் மற்றவர்களை அடிமைகளாகவும் கருதினர் - சீனமொழி பேசினர். திராவிடர்கள் மட்டும்தான் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்றனர். தமிழ்மொழியில் பேசினர். ஏனென்றால் தமிழர்கள் மட்டும்தான் இந்த உலகில் இருக்கும் அனைத்து உயிர்களையும் நேசிக்கத் தெரிந்தவர்கள். இதுவே நமது பண்பாடு!

No comments:

Post a Comment