உள்ளூர் உணவு, ஊட்டச்சத்து உணவு என்ற பெயரில் அசைவ உணவுகளை நீக்கும் ரயில்வே நிர்வாகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 16, 2022

உள்ளூர் உணவு, ஊட்டச்சத்து உணவு என்ற பெயரில் அசைவ உணவுகளை நீக்கும் ரயில்வே நிர்வாகம்

புதுடில்லி, நவ.16  ஒன்றியத்தில் மோடி அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து பெரும்பான்மை மக்களின் உணவு முறையை அழித்து வருகிறது.

 முதல் படியாக அரசு விருந்துகள் மற்றும் இதர நிகழ்ச்சிகளில் அசைவம் அகற்றப் பட்டது, தற்போது ரயில்வேயிலிருந்து அசைவம் அகற்றப்பட்டுக்கொண்டு இருக் கிறது. இதற்கு கடுமையாக எதிர்ப்பு வந்த நிலையில் தந்திரமாக ஊட்டச்சத்து உணவு, பாரம்பரிய உணவு என்ற பெயரில் அசைவத்தை அட்டவணையில் இருந்து நீக்கி வருகிறது.

ரயில்களில் உணவு வழங்கும் சேவை களை மேம்படுத்தப் போகிறோம் என்று ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு உணவு வழங்குவதில் கூடுதல் விருப்பங்கள் வழங்க இருப்பதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

 இது தொடர்பாக இந்திய உணவு மற்றும் சுற்றுலாக் கழகத்துக்கு (அய்.ஆர்.சி.டி.சி) ரயில்வே வாரியம் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- 

ரயில்வே வாரியம் அதன் கேட்டரிங் மற் றும் சுற்றுலாப் பிரிவான அய்.ஆர்.சி.டி.சி-க்கு உள்ளூர் மற்றும் மண்டல உணவு வகை களையும், நீரிழிவு நோயாளிகள், கைக் குழந் தைகள் மற்றும் ஆரோக்கிய ஆர்வலர் களுக்கு ஏற்ற உணவுகளையும் உள்ளடக்கும் வகையில் அதன் உணவு வகைகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாம். 

இந்த உணவு வகைகளில் பருவகால சுவையான உணவுகள், விழாக் கால உண வுகள், விருப்பங்களுக்கு ஏற்ப உணவுப் பொருள்களும் உள்ளடங்கும். மேலும் நீரிழிவு நோயாளிகளுக்கான உணவு வகைகள், குழந்தைகளுக்கான உணவுகள், ஆரோக்கிய உணவு விருப்பங்கள், ஊட்டசத்து மிக்க உள் ளூர் தயாரிப்புகள் உள்பட பயணிகள் விருப் பத்திற்கேற்ப உணவுகளை தேர்ந்தெடுக்கும் வகையில் உணவு வகைகள் தயாரிக்கப்பட்டு பயணிகளுக்கு வழங்கப்பட உள்ளதாம். 

புதிய உணவு வகைகள் பயணிகளுக்கு புதிய அனுபவத்தை தரும் என எதிர்பார்க் கப்படுகிறதாம். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது. 

ஏற்கெனவே வட இந்தியாவில் பெரும் பாலான ரயில்களில் ‘புனிதப் பயணம்' ரயில் என்ற பெயரில் அனைத்து அசைவ உணவும் அகற்றப்பட்டுவிட்டது, தற்போது இதர ரயில்களிலும் அசைவத்தை அகற்றும் பணி கமுக்கமாக நடந்துவருகிறது. நேரடியாக அசைவத்தை அகற்றினால் பெரும் எதிர்ப்புக் கிளம்பும் என்பதால், தந்திரமாக சுகாதார உணவு, பாரம்பரிய உணவு, ஊட்டச்சத்து உணவு, உள்ளூர் உணவு என்ற பெயரில் பெரும்பான்மையினரில் உணவுச் சுதந் திரத்தில் கைவைக்கிறார்கள்.

No comments:

Post a Comment