ஆர்.எஸ்.எஸ். தொண்டரா ஆளுநர்? தொல்.திருமாவளவன் கேள்வி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 1, 2022

ஆர்.எஸ்.எஸ். தொண்டரா ஆளுநர்? தொல்.திருமாவளவன் கேள்வி

கடலூர்,நவ.1- விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர்,  சிதம்பரம் மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன்  நேற்று (31.10.2022) கடலூரில் செய்தியாளர்களிடம் கூறியது: “குஜராத் மாநிலத்தில் தொங்கு பாலம் விழுந்து ஏற்பட்ட விபத்தில் இதுவரை 130 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர். இந்த கோர விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் குஜராத் அரசும், ஒன்றிய அரசும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும். வருங்காலத்தில் இது போன்ற விபத்துக்கள் நடைபெறாதவாறு முன்னெச் சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கோவையில் நடந்த சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் பாஜகவும், ஆளுநரும் செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. அவர் வகிக்கும் பதவியை மறந்து ஆளுநரே ஆர்எஸ்எஸ் தொண்டராக செயல்படுகின்றார்.

ஆன்மிகம் என்னும் பெயரில் ஆளுநர் மதவாதம் பேசுகின்றார். மதவாத அரசியலுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை. சிலிண்டர் விபத்து தொடர்பாக உளவுத் துறை எந்தவொரு தகவலும் அளிக்கவில்லை என்று அரசுக்கு களங்கம் விளைவிக்கவே பாஜகவினர் இது போன்று பேசி வருகின்றனர். இதற்காக பாஜகவை கடுமையாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டிக் கின்றது. இவ்வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் முடிவை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்கின்றது. பாஜக தமிழ்நாடுதலைவர் அண்ணாமலைக்கு விளம்பரமே னியா உள்ளது. தனிநபர் பெயரை உச்சரித்து விமர்சனம் செய்வது அரசியல் அநாகரிகமானது. ‌அரசியலை அரசியலாக எதிர்கொள்ள வேண்டும். காசுகொடுத்து கூட்டம் கூட்டி பாஜக கூட்டம் போட்டு போய் உள்ளனர்.

கடலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு, மாவட்டத் தின் வளர்ச்சியை மேற்கொண்டு வரும் மாவட்ட அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மற்றும் என்னை குறித்து அவதூறாக பேசி இருப்பதை வன்மையாக கண்டிக்கின்றோம்.

ஹிந்தியை ஒன்றிய அரசு திணிக்கிறது. ஆங்கி லத்தை யார் திணிப்பது? பாஜக சொல்வது வேடிக் கையாக உள்ளது. ஹிந்தி திணிப்பு என்பது ஒன்றிய அரசின் கொள்கையாக உள்ளது. நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஆங்கிலத்திலிருந்து ஹிந்திக்கு மாற்றிவிட்டனர். 70 சதவீதம் மாற்றிவிட்டோம் என பெருமை பேசுகின்றனர். அதிகம் ஹிந்தி உள்ள மாநி லங்களில் இம்முடிவு எடுக்கலாம்.மற்ற மாநிலங்களில் இதை திணிப்பதை ஏற்கமுடியாது. மாநிலங்களின் உரிமையை பறிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து எனது தலைமையில் இன்று (நவ.1) சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது” இவ்வாறு கூறினார்.

வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், திமுக மாநகர செயலாளர் ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.


No comments:

Post a Comment