தமிழ்நாட்டில் செயல்படாத அரசியல் கட்சிகள் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 6, 2022

தமிழ்நாட்டில் செயல்படாத அரசியல் கட்சிகள் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை நவ. 6-  இந்திய தேர்தல் ஆணையம் அண்மையில் நாடு முழு வதும் உள்ள பதிவு செய் யப்பட்ட அரசியல் கட்சி கள் பற்றிய தகவல்களை திரட்டியது. 

அதில், தேர்தலில் பங் கேற்காத கட்சிகள், கணக் குகளை உரிய வகையில் காட்டாத கட்சிகள் ஆகியவற்றின் பெயரை மாநில வாரியாக தேர்தல் ஆணையம் பட்டியலிட்டு வெளியிட்டது. 

இதில் தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட 233 கட்சிகளில் செயல்பாடில் லாத பல கட்சிகள் இடம் பெற்றிருந்தன. அந்த கட் சிகளுக்கு 30 நாட்களுக் குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டி ருந்தது. அதன்படி, தமிழ் நாடு தலைமை தேர்தல் அதிகாரியிடம் 4 கட்சி கள் மட்டுமே விளக்கம் அளித்திருந்தன. தேர்தல் ஆணையம் அளித்த காலக்கெடு முடிந்ததைத் தொடர்ந்து, 233 பதிவு செய்யப்பட்ட கட்சி களில் 23 கட்சிகள் எந்த தேர்தலிலும் போட்டியிடவில்லை என்பதும் வருமானவரி கணக்கு தாக்கல் செய்யவில்லை என்றும் தெரியவந்தது.

உரிய கால அவகாசத் தில் விளக்கம் அளிக்காத நிலையில், அக்கட்சிக ளைப் பதிவு செய்யப் பட்ட அரசியல் கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கி இந்திய தேர்தல் ஆணை யம் உத்தரவிட்டுள்ளது. மேலும், உரிய விளக்கம் மற்றும் கணக்குகளை அளிக்கும் பட்சத்தில் மீண்டும் பட்டியலில் அந் தக் கட்சிகளின் பெயர் இணைக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறி யுள்ளது. 

இந்நிலையில் தமிழ் நாடு தலைமை தேர்தல் அதிகாரியிடம் 4 கட்சி கள் விளக்கம் அளித்துள் ளன. அந்த விளக்கம் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

இவை தவிர, எந்த தேர்தலிலும் போட்டியிடாமல், வருமான வரி உள்ளிட்ட கணக்குகளை யும் காட்டாமல், ஆணை யத்திடம் அளித்த முக வரியில் செயல்படாமல், தொடர்பு கடிதங்கள் திரும்பி வந்த நிலையில் உள்ள 22 கட்சிகளை செயல் படாத கட்சிகளாக தேர் தல் ஆணையம் அறிவித் துள்ளது. அந்தக் கட்சிக ளின் பெயர் பட்டியல் தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment