திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 16, 2022

திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்

சென்னை, நவ. 16-  சென்னை - பெரியார் திடலில் 14.11.2022 அன்று மாலை 5 மணி அளவில் தொடங்கிய திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத் தின் செயற்குழுக் கூட்டத் தில் வருங்காலச் செயல் பாடுகள் குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப் பட்டன.

திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் தலை வர் முனைவர் பெ.ஜெக தீசன் தலைமையில் இக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் மய்யத் தின் துணைத் தலைவர் முனைவர் த.ஜானகி, செய லாளர்கள் பேராசிரியர் அ.கருணானந்தன், முனைவர் ரா.சரவணன் மற்றும் துணைச் செயலா ளர்கள் முனைவர் பா.ஷோபா, முனைவர் எஸ்.ராமு, பொருளாளர் வீ.குமரேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்

1. இரண்டு மாதங்க ளுக்கு ஒரு முறை திரா விடர் வரலாற்று கருத்தி யல் சார்ந்த தலைப்புகளில் அறிஞர்கள், கல்வியாளர் கள் உரையாற்றிடும் கூட் டம் நடத்தப் பெற வேண் டும்.

2. கூட்டத் தலைப்பு களை முடிவு செய்திட செயற்குழு உறுப்பினர் களில் சிலர் அங்கம் வகித் திடும் நிர்வாக மய்யக் குழு (Administrative Core Committee) அமைக்கப் பட்டுள்ளது. முடிவு செய் யப்பட்ட தலைப்புகள் செயற்குழு உறுப்பினர் களுக்கு தெரியப்படுத்தப் பட்டு, கூட்டம் நடத்திட ஏற்பாடுகள் செய்யப்படும்.

3. கூட்டத்தில் பேச்சா ளரின் உரைகள் தொகுக் கப்பட்டு ஆண்டுக்கு ஒரு முறை சிறு வெளியீடாக - ஆண்டு மலராக வெளியிடப்படும்.

4. தமிழ்நாடு முழுவ தும் நடைபெற்ற, நடை பெற்றுவரும் அகழாய்வுப் பணிகள் பற்றிய செய்தி களை நேரில் சென்று அறிந்திடும் வகையில் திராவிடர் வரலாற்று ஆய்வுச் சுற்றுலா ஏற்பாடு செய்யப்படும். ஆர்வலர் கள் சுற்றுலாவில் பங்கேற் கலாம். சுற்றுலா செல்லும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் கருத்தரங்கங்கள் நடத்தப் பெறும். அந்தப் பகுதி களில் உள்ள வரலாற்று அறிஞர்கள், ஆய்வாளர் கள் பங்கேற்று கருத்துரை வழங்கிடும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

5. திராவிடர் வரலாறு பற்றிய திரிபுகளை, திசை திருப்பும் செயல்களை - பொது வாழ்வில் - பொறுப் பில் உள்ளவர்களின் உண்மைக்கு மாறான கருத்துகளுக்கு திராவிட வரலாற்று ஆய்வு மய்யத் தின் சார்பில் மறுப்பு அறிக்கை பொது வெளி யில் வெளியிடப்படும்.

6. திராவிடர் வர லாற்று ஆய்வு மய்யத்தின் கூட்டம் டிசம்பர் மாதத் தில் நடத்தப்படவேண் டும். நீதிக்கட்சியின் வர லாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நவம்பர், டிசம்பர் மாத செயல்பாடுகள், சாதனைகள் குறித்து பரப்புரை செய்திடும் நிகழ்ச்சிகள், இந்தத் தலை முறையினரும் அறிந்து கொள்ளும் வகையில் கருத்தியல் களஞ்சியமாக நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்திட வேண்டும்.

No comments:

Post a Comment