கடலூர், நவ. 4- கடலூர் மாவட்ட கழக செயலாளர் தென் சிவக்குமார் அவரின் உடன்பிறப்புகள் தென் செல்வகுமார் தென் செந்தில்குமார் ஆகியோரின் தாயார் மறைந்த வழக்குரைஞர் தென்னவன் துணை வியார் காந்திமதி அம்மையார் கடந்த 19.10.2022 அன்று கடலூரில் மறைவுற்றார். அவரின் நினைவேந் தல் படத்திறப்பு நிகழ்வு கடலூரில் 1.11.2022 அன்று காலை 11 மணி அளவில் கழகப் பொதுச் செயலா ளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமையில் வழக்குரைஞர் பால காந்தி முன்னிலையில் நடை பெற்றது.
சட்டப்பேரவை மேனாள் உறுப்பினர் வழக்குரைஞர் இள புகழேந்தி அம்மையாரின் படத் தினை திறந்து வைத்து நினைவு உரையாற்றினார்.
மற்றும் மாவட்ட நீதி அரசர் மகிழேந்தி, கடலூர் நகர தலைவர் எழில் ஏந்தி, மாவட்ட தலைவர் தண்டபாணி, மாவட்ட அமைப் பாளர் மணிவேல், புதுவை மாநில கழகத் தலைவர் சிவ.வீரமணி, வடலூர் கழகத் தலைவர் புலவர் ராவணன், மண்டல இளைஞர் அணி செயலாளர் பஞ்சமூர்த்தி, புதுவை கழகத் துணைச் செயலா ளர் சிவராசன், புதுச்சேரி கட்டு மான தொழிலாளர் கழகத் தலை வர் குமார், அரசு வழக்குரைஞர் வனராசு ஆகியோர் கலந்துகொண்டு ஆறு தல் உரை வழங்கினர்.
முடிவில் எழிலரசன் சிவக் குமார் நன்றி கூறினார்.

No comments:
Post a Comment