தனியார்த் துறைகளிலும் இடஒதுக்கீடு பார்ப்பனர்கள் கேட்காதது ஏன்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 21, 2022

தனியார்த் துறைகளிலும் இடஒதுக்கீடு பார்ப்பனர்கள் கேட்காதது ஏன்?

இந்திய சமுதாயம் வருணசிரமத்தை அடிப்படையாகக் கொண்டது. பிறப்பின் அடிப்படையில் நூற்றுக்கு மூன்று பேர்களாக உள்ள பார்ப்பனர்கள் சமூக ரீதியிலும், கல்வி ரீதியிலும் ஆதிக்க நிலையில்தான் உள்ளனர்.

அமைச்சகங்களில் பிற்படுத்தப்பட்டோர் விவரம்:

குரூப் 'A'யில்  17%

குரூப் 'B'யில் 14%

குரூப் 'C'யில் 11%

குரூப் 'D'யில் 10%

அமைச்சகங்கள் அல்லாத ஒன்றிய அரசுத் துறைகளில் பிற்படுத்தப்பட்டோர் விவரம்:

குரூப் 'A'யில் 14%

குரூப் 'B'யில் 15%

குரூப் 'C'யில் 17%

குரூப் 'D'யில் 18%

குடியரசுத் தலைவர், பிரதமர், தேர்தல் ஆணைய அலுவலகங்களில் 27% இடஒதுக்கீடு அமலில் இல்லை.

('The Hindu' 10.12.2017)

அடுத்தடுத்தடுத்த ஆண்டுகளில் கொஞ்சம் முன்னே பின்னே இருக்கலாம்.

ஒன்றிய அரசு செயலாளர்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் சுழியம்தான்.

தனியார்த்துறைகளில் கேட்கவே வேண்டாம். அரசுத் துறைகளில் இடஒதுக்கீடு தேவை என்று கூறும் பார்ப்பனர்களில் கிறுக்குப் பிடித்த ஒரே ஒரு பார்ப்பான் கூட தனியர்த் துறையிலும் இடஒதுக்கீடு வேண்டும் என்று கேட்டதில்லை. காரணம் தனியார்த்துறை என்றாலே பார்ப்பன மயம்தான்.

ஒட்டு மொத்த இந்தியாவின் செல்வம் வெறும் 3 விழுக்காடு மட்டுமே மக்கள் தொகையில் உள்ள பார்ப்பனர்களிடம் தான் சரணடைந்துள்ளது.

"பாரிஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ்" மூலம் 2018 ஆம் ஆண்டு இந்தியாவில் சமுகப்பிரிவினரிடையே எந்த எந்த ஜாதியினரிடம் செல்வம் கொட்டிக்கிடக்கிறது என்று நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் இந்தியாவின் ஒட்டுமொத்த செல்வத்தை வைத்திருப்பவர்கள் ஜாதிவாரியாக:-

அதீத செல்வந்தர்கள்:

* காயஸ்தா-வட இந்தியாவில் ஒரு பார்ப்பனர் பிரிவு 32.%

(மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்பவர்களில் பெரும் பாலானோர் இந்த காயஸ்தா பிரிவினர்).  

இதர பார்ப்பனர்களில் 20% - பெரும்பாலான அரசுப் பதவிகளில் உச்சாணிக்கொம்பில் இருப்பவர்கள் இவர்களே,

பனியா - : 17% அதானி - அம்பானிகள் இதில் தான் வருகிறார்கள்

ராஜ்புத்: 15% * பெரும் நில உடைமையாளர்கள். ராஜஸ்தான், அரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மத்திய மாநிலங்களில் பெரும்பான்மையாக உள்ளனர்

முஸ்லிம்கள்: 7% * தற்போது குறிப்பிட்ட பெரு நகரங்களில் மட்டுமே வணிகத்தில் ஈடுபடுகின்றனர்

இதர பிற்படுத்தப்பட்டவர்கள் 5% * 2017 ஆம் ஆண்டின் அதிகாரப்பூர்வமற்ற புள்ளிவிபரங்களின் படி 48 விழுக்காடு மக்கள்  (மண்டல் குழுப் பரிந்துரைப்படி 52%) 

பட்டியலினத்தவர்: 3% - 2017 ஆம் ஆண்டின் அதிகாரப்பூர்வமற்ற புள்ளிவிபரங்களின் படி 21 விழுக்காடு மக்கள்

பழங்குடியினர்: 1% - 8 விழுக்காடு உள்ளனர்.

மக்கள் தொகை விகிதத்தைவிட பல மடங்கு அதிகமாக தேச செல்வத்தை தங்கள் வசம் வைத்துக் கொண்டு, சராசரி ஆண்டு வருமானத்தில் இதர சமூகங்களை விட பற்பல மடங்கு அதிகமாக வருவாய் வைத்துக் கொண்டு, தங்கள் சமூகத்துக்கு உள்ளேயே பணக்கார விகிதத்தை பல மடங்கு அதிகமாக வைத்துக் கொண்டு, சமூகக் கலாச்சார ரீதியாக தேசத்தில் உயர்வான இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டு, இது எல்லாவற்றுக்கும் மேலே 'நாங்களும் ஏழைகள், எங்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும்; என்று கேட்டுப் பிடுங்கிக் கொள்வதற்கு ஒரு வித அலட்சியமான வெட்கமின்மை  தேவைப்படுகிறது. அந்த வெட்கமின்மை முன்னேறிய ஜாதியினருக்கு, குறிப்பாக பார்ப்பனர்களுக்கு, நிறையவே இருக்கிறது.

சமூக நிலையிலும், கல்வியிலும் ஆதிக்கம் செலுத்துவதோடு பார்ப்பனர்கள் நிற்கவில்லை, பணம் படைத்த முதலாளிகள் என்று எடுத்துக் கொண்டாலும் அவர்கள்தான் உச்சாணிக் கொம்பில் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் மாற்றம் கொண்டு வரப்பட்ட வேண்டாமா? இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள சமூகநீதி, சோசலிசம் என்ற சொற்களுக்கு என்ன பொருளைக் கொண்டு இருக்கிறார்கள் என்பது முக்கிய கேள்வியல்லவா!

சூத்திரன் படிக்கக் கூடாது - படித்தால் அவன் நாக்கை அறுக்க வேண்டும்; கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும். அப்படிப் படித்து வைத்திருந்தாலும் அவன் நெஞ்சைப் பிளக்க வேண்டும் என்கிற மதம் இந்த பாழாய்ப் போன ஹிந்து மதத்தைத் தவிர உலகில் வேறு எங்கும் உண்டா?

செல்வம் உள்ள சூத்திரன் வீட்டில் சிறிதும் தயங்காமலும், கேளாமலும் பலாத்காரத்தினாலும் கொள்ளையிடலாம் (மனுதர்மம் அத்தியாயம் 11,  சுலோகம் 13).

சூத்திரன் பொருள் சம்பாதிக்கத் தக்கவனாகயிருந்தாலும் குடும்பத்திற்கு உபயோகமானதைவிட அதிகப் பொருளை சம்பாதிக் கக் கூடாது. அப்படிச் சம்பாதித்தால் தன்னால் உபசரிக்கத்தக்க பிராமணனையே இம்சை செய்ய வேண்டிவரும். 

(மனுதர்மம் அத்தியாயம் 10, சுலோகம் 270).

இந்த மனுதர்மத்தை விமர்சித்தால் குருதி கொதிக்கிறது இந்த வல்லாண்மைப் பார்ப்பனர் கூட்டத்துக்கு.

இப்பொழுதெல்லாம் மனுதர்மம் எங்கே இருக்கிறது என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டே, மனுதர்மத்தை விமர்சித்தால், அதற்கு வக்காலத்து வாங்கி வரிப் பிளந்து எழுதுகிறார்கள் என்பதையும் பார்ப்பனர் அல்லாத மக்கள் கவனிக்கத் தவறக் கூடாது.

No comments:

Post a Comment