தமிழ்நாட்டில் ரவுடிகளைக் கண்காணிக்க செயலி அறிமுகம்: டிஜிபி தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 27, 2022

தமிழ்நாட்டில் ரவுடிகளைக் கண்காணிக்க செயலி அறிமுகம்: டிஜிபி தகவல்

சென்னை, நவ. 27- ரவுடிகளை கண் காணிக்கும் ‘ட்ராக் கேடி’ செய லியை காவல் துறை அறிமுகம் செய்துள்ளது.

சென்னையில் உள்ள காவல் துறை தலைமை இயக்குநர் அலுவ லகத்தில் ‘ட்ராக் கேடி’ செயலியை காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு அறிமுகப்படுத் தினார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளின் விவரங் களை டிஜிட்டல்மயம் ஆக்குவது தான் ‘ட்ராக்கேடி’ செயலியின் முக் கிய நோக்கம்.இதன்மூலம் குற்ற வாளிகளின் நடவடிக்கைகளை எளிதாக கண்காணிக்க முடியும். குற்றவாளிகள் மீதான குற்றப் பத்திரிக்கை விவரங்கள், ரவுடி களின் எண்ணிக்கை, நன்னடத்தை பிரிவுகளின் கீழ் எத்தனை பேர் பிணைக்கப்பட்டுள்ளனர், பிணை பத்திரங்களின் காலாவதி தொடர் பான எச்சரிக்கைகள், நிலுவையில் உள்ள வழக்குகள், வழக்கு விசா ரணை, குற்றத்தின் வகைகள் போன்றவற்றின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவர்களை வகைப்படுத்த முடியும். காவல் அதிகாரிகளுக்கு அவர்களது விரல் நுனியில் பல்வேறு முக்கிய விவரங் களை இச்செயலி வழங்கும். 

இந்த செயலியில், 39 மாவட்டங் கள், 9 ஆணையரகங்களில் உள்ள 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குற்ற வாளிகளின் சரித்திரப் பதிவேடுகள் டிஜிட்டல்மயம் ஆக்கப்பட்டுள் ளன. ரவுடிகளைகண்காணிப்ப தோடு, பழிவாங்கும் கொலைகளில் ஈடுபடும் குற்றவாளிகளின் சமூக விரோதச்செயல்கள், குற்றங்களை தடுக்கவும் உதவும்.சட்டம்-ஒழுங்கு கூடுதல்காவல்துறை தலைமை இயக்குநர் தாமரைக்கண்ணன், தென் சென்னை கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையிலான குழு இந்த செயலியை உருவாக்கி உள் ளது. இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment