மெரினாவில் மாற்றுத் திறனாளிகளுக்கு நடைபாதை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 27, 2022

மெரினாவில் மாற்றுத் திறனாளிகளுக்கு நடைபாதை

சென்னை நவ 27 மெரினாவில் ‘சிங்கார சென்னை 2.0’ திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்டு உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு நடைபாதை  பயன் பாட்டுக்கு வருகிறது.

மெரினா கடற்கரையின் அழகை மாற்றுத் திறனாளி களும் ரசிப்பதற்காக நடைபாதை அமைக்கும் பணிகள் தமிழ் நாடு அரசால் முன்னெடுக் கப்பட்டது. இந்த நடைபாதை 235 மீட்டர் நீளமும், 3 மீட்டர் அகலமும் கொண்டது. முதியோர், மாற்றுத் திறனாளிகள் சிரமம் இன்றி நடக்க நடைபாதையின் இருபுறங்களிலும் கைப்பிடிகள் போலவே மரத்தால் அழகுற அமைக்கப்பட்டு இருக்கிறது. மணற்பரப்பில் இருந்து சற்று உயரம் கூட்டி அமைக்கப்பட்டுள்ள இந்த நடை பாதையில் எந்தவித சிரமமும் இன்றி மாற்றுத் திறனாளிகள் செல்லலாம். மேலும் சக்கர நாற்காலிகளை பயன் படுத்துவோர் இந்த நடைபாதை வழியாக சென்று கடல் அழகை ரசித்து மகிழலாம். இதற்காக 'சர்வீஸ்' சாலையில் இருந்து நடைபாதைக்கு இருபுறத்திலும் சாய்வு தளம் அமைக்கப் பட்டு உள்ளது. 'சிங்கார சென்னை 2.0' திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்டு உள்ள இந்த நிரந்தர நடைபாதை விவேகானந்தர் இல்லத் துக்கு எதிரே மணற் பரப்பில் அமைக் கப்பட்டு உள்ளது. இந்த நடைபாதையை இன்று (27.11.2022) அமைச்சர்கள்,  சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின். ஆகியோர் திறந்து வைக் கிறார்கள். அதனைத்தொடர்ந்து இந்த நடைபாதை இன்று முதல் பயன்பாட்டுக்கு வருகிறது.

 


No comments:

Post a Comment