ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 11, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

ஆதாம் பாலத்தை ராமர் பாலமாக பெயர் மாற்றம் செய்து தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்து கால அவகாசம் கேட்ட ஒன்றிய அரசின் வழக்குரைஞரிடம் - ஏன் இதில் பின் வாங்குகிறீர்கள் என உச்ச நீதிமன்றம் கேள்வி

அமலாக்கப் பிரிவு, புலனாய்வு பிரிவுகள் ஒன்றிய அரசின் ஏவலர்கள் போல செயல்படுகின்றனர் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே சாடல்,

தி இந்து:

 சாமியார் ராம்தேவின் பதஞ்சலி தயாரித்துள்ள அய்ந்து மருந்துகளை விற்பனை செய்ய ஜார்கண்ட் அரசு தடை.

தி டெலிகிராப்:

குழந்தைகள் பயன்படுத்தும் ரொட்டி மற்றும் பென்சில்களுக்கு வரி விதித்து, நாடு முழுவதும் வெறுப்பை பரப்பி, எல்லா இடங்களிலும் மோதல்களை தூண்டும் மோசமான அரசை இந்தியா இதுவரை சந்தித்ததில்லை என்று காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜுன் கார்கே மோடி அரசு மீது விமர்சனம்.

 அறிவுக்கு எதிரான அரசியலாக பிற்போக்கு சிந்தனை கொண்ட இந்தியாவை அரசு உருவாக்கிக் கொண்டிருக்கிறது என ஜி.என். தேவி - இந்திய மக்கள் மொழியியல் ஆய்வின் தலைவர் - வேதனை.

- குடந்தை கருணா 


No comments:

Post a Comment